பத்து நிமிடங்களில் ஹார்ட் டிஸ்க் சுத்தம் !
Thu Aug 28, 2014 11:26 pm
கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன.
தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என இலக்கு வைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க், ஒரு குப்பைக் கிடங்காகப் போய்விடுகிறது. இதனை எப்படி 10 நிமிடத்தில் சரி செய்து சுத்தப்படுத்த முடியும். சில வழிகளை இங்கு காணலாம்.
டாகுமெண்ட் போல்டரில்
பைல் சிஸ்டம் உருவாக்குதல்: முன்பு மை டாகுமெண்ட்ஸ் என்றும், தற்போது டாகுமெண்ட்ஸ் என்றும், விண்டோஸ் போல்டரை உருவாக்கி, மாறா நிலையில், நாம் உருவாக்கும் பைல்கள் சேமிக்கப்படும் இடமாக அமைந்துவிடுகிறது. நாட்கள் செல்லச் செல்ல, இந்த போல்டர், எந்தவித வரையறை இல்லாமல், மொத்தமாக பைல் சேமிக்கும் இடமாக மாறிவிடுகிறது. இதனைச் சரி செய்திட முதலில் பைல்களின் வகை அல்லது பொருளுக்கேற்ப,போல்டர்களை உருவாக்க வேண்டும். சொந்த பைல்கள், அலுவலகம் சம்பந்தப்பட்டது, குழந்தைகள் தொடர்புள்ளவை, கல்வி மற்றும் பொதுவான பொருளுடையவை என இவற்றைப் பிரித்து போல்டர்களை அமைக்கலாம். இவற்றை உருவாக்கிய பின்னர், பைல்களை அதன் தொடர்புடைய போல்டர்களில் வைக்கவும். இந்த போல்டர்களில் வைக்க முடியாதபடி, தகவல்கள் கொண்ட பைல்கள் இன்னும் இருக்குமாயின், அவற்றிற்கான புதிய போல்டர்களை உருவாக்கிப் பயன்படுத்தவும். இப்போது உங்கள் டாகுமெண்ட்ஸ் போல்டர் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டிருப்பதனை உணர்வீர்கள்.
டவுண்லோட்ஸ் போல்டரை காலி செய்தல்: நாம் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்திடும் பைல்கள் Downloads என்ற போல்டரில் சேவ் செய்யப்படும். இவற்றை இணையத்தில் இருந்து பெறும் நிலையிலேயே, அதன் தன்மைக்கேற்ற போல்டரில் அமைக்கலாம். ஆனால், சிலர், டவுண்லோட்ஸ் போல்டரிலேயே இறக்கி சேவ் செய்துவிடுவார்கள். இது எப்போதும் தற்காலிக போல்டராகத்தான் இருக்க வேண்டும். டவுண்லோட்ஸ் போல்டரில் வெகு நாட்கள் பைல் தங்கக்கூடாது. இந்த போல்டரில் உள்ள அனைத்து பைல்களையும், மேலே கூறியபடி தயாரிக்கப்பட்ட போல்டர்களில் ஒதுக்குவது, நமக்கு நம் பைல்கள் இருக்குமிடம் குறித்த தெளிவான பார்வையைக் கொடுக்கும்.
டெஸ்க்டாப்பினைச் சுத்தப்படுத்துக: டவுண்லோட்ஸ் போல்டரைப் போலவே டெஸ்க்டாப்பினைப் பயன்படுத்தும் பழக்கம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், உங்கள் டெஸ்க்டாப், ஒரு ஒழுங்கற்ற மேஜையின் மேல்புறமாகத்தான் இருக்கும். மேலும், இது உங்கள் நேரத்தை வீணாக்கி, பைல்களைத் தேடுகையில் பெரும்பாலான நேரத்தில் மன அழுத்தத்தினைப் கொடுக்கும். எனவே, குறிப்பிட்ட ஒரு நாளில், டெஸ்க்டாப் மேலாக இருக்கும் அனைத்தையும், வேறு ஒரு ட்ரைவில் உள்ள போல்டர்களுக்கு, வகைப்படி கொண்டு அமைத்துவிட்டு, முழுமையான சுத்தமான ஒரு தோற்றத்தை டெஸ்க்டாப்பிற்கு வழங்க வேண்டும். டெஸ்க்டாப்பில் பைல்களை வைப்பது ஆபத்தானதும் கூட. கம்ப்யூட்டர் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரெஸ்டோர் செய்யப்பட்டால், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள் திரும்பவும் கிடைக்காது. எனவே, அடிக்கடி, டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை அதனதன் இடத்திற்கு மாற்ற வேண்டும்.
நகல் பைல்களை நீக்குக: பல பைல்களுக்கு நாம் நகல்களை உருவாக்கி, வெவ்வேறு போல்டர்களில் சேவ் செய்துவிடுகிறோம். ஒரு சிலர், அதே போல்டரில், அதே பெயரில் 1,2, என எண்களை பைல்களின் பெயர்களுடன் இணைத்து சேவ் செய்து வைப்பார்கள். இது பெரும்பாலும் படம் மற்றும் திரைப்பட பாடல், வீடியோ பைல்களில் நடைபெறும். இத்தகைய நகல்களைக் கண்டறிய பல புரோகிராம்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி, நகல்கள் அனைத்தையும் நீக்க வேண்டும். இந்த புரோகிராமினை அடிக்கடி பயன்படுத்தி, பைல் நகல்களை அழிக்க வேண்டும். முழு ட்ரைவினையும் ஒரு முயற்சியில் மேற்கொள்ளாமல், படங்கள் மற்றும் வீடியோ பைல்கள் இருக்கும் ட்ரைவ்களில் இந்த செயல்பாட்டினை மேற்கொண்டு, பின்னர், மற்ற ட்ரைவ்களில் மேற்கொள்ளலாம்.
இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டால், உங்கள் ஹார்ட் ட்ரைவ், தேவையற்ற பைல்களால், தன் செயல்பாட்டினை மந்தப் படுத்திக் கொள்ளாது. முதலில் சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் முயற்சியாக இது இருந்தாலும், போகப் போக, பத்து நிமிடங்களில் முடியும் வேலையாக மாறிவிடும். நமக்கும் நிம்மதியாக இருக்கும். பைல்கள் எந்த ட்ரைவ்களில் உள்ளன என்பதுவும் நினைவில் இருக்கும்.

நன்றி: மைலாஞ்சி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum