பூசணிக்காய் அல்வா ரெடிங்க !!
Mon Aug 18, 2014 1:13 pm
வீட்லெயே அருமையா.. யாரு வேணாலும் இந்த அல்வாவை சிரமமே இல்லாம செய்யலாமுங்க.....
வெள்ளை பூசணிக்காய் - 1/2 (அர வாசி )
சர்க்கரை - 1/2 பூசணிக்கா அளவுக்கு
நெய் - 150 கிராம்
முந்திரி - 12
தேங்காய் சீவல் (சிறுசா) - 6
கேசரிகலர் பொடி - இத்துனூண்டு
ஏலக்காய் பொடி - கால் ஸ்பூன்
பாதம், பிஸ்தா, குங்கம பூ (மெனக்கெட்டு வாங்கி போடனும்கிறது இல்லைங்க ,, ஊட்லெ இருந்தா போடுங்க)
பூசணி காயிலெ இருக்குற விதையை எல்லா எடுத்துட்டு ,,, தோலில்லாம அலுங்காம வெள்ளை சதையை மட்டும் தனியா எடுத்து சிறுசு சிறுசா சொரவி வெச்சுருங்க ...
இதைய தண்ணீலெ போட்டு ஒரு அஞ்சு நிமிஷம் வேக வெய்யுங்க ,,,,
இப்போ வேக வெச்ச பூசணி காய் துருவலை ஒரு வெள்ளை துணியுலெ போட்டு ,,தண்ணீ இல்லாம நல்லா புளிஞ்சு வடிகட்டிருங்க ,,
வடச்சட்டியில் 4 ஸ்பூன் நெய் ஊத்தி, முந்திரி (பாதாம், பிஸ்தா )போட்டு ,, நைசா வறுத்து , தனியா எடுத்து வெச்சுருங்க தேங்காய் சீவலையும் ஒரு வறு வறுத்து தனியா எடுத்து வெச்சுருங்க
இப்போ மறுபடியும் நெய் ஊத்தி , பூசணிக்கா துருவலை போட்டு நல்லா தொலாவி விட்டுட்டே இருங்க பத்து நிமிஷம் கழிச்சு சர்க்கரையை போட்டு கெலருங்க,,,அப்புடியே கேசரி கலர் பொடி இத்துனூண்டு சேர்த்தி ஏலக்காய் பொடியும் சேர்த்து கெலருங்க ... மூணு நிமிஷம் கழிச்சு வறுத்து வெச்சுருக்கிற முந்திரி , தேங்காய் எல்லாம் போட்டு மறுக்காவும் ரெண்டு தடவை கெலருங்க
...இடைலெ இடைலெ நெய் ஊத்தி கெலரிக்கலாமுங்க,,,,
இப்போ கொல கொல ன்னு சூடான பூசணிக்காய் அல்வா ரெடிங்க !!

நன்றி: கொங்குநாட்டு குழம்பு
Permissions in this forum:
You cannot reply to topics in this forum