தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு உதவித்தொகைகள்
Fri Aug 08, 2014 2:51 pm
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.
பிளஸ்1 முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை பாடநூல் நிதியுதவி அளித்தல், பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய படிப்புகளுக்கான பட்டமேற்படிப்பு, பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2 தேர்வில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகைகள் பெற விரும்புவோர் வருகிற 31.10.2014 க்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் விவரங்கள் பெறுவதற்கு...
செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், த.பெ. எண் 718 தேனாம்பேட்டை, சென்னை–6
என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால்தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ளுமாறு மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் பெ.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum