தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்? Empty குழந்தைகளுக்கு கதை ஏன் சொல்ல வேண்டும்?

Sun Feb 02, 2014 6:23 am
கதை சொல்வதன் மூலம் தாய்/தந்தை குழந்தையோடு நேரம் (quality time) செலவிட முடிகிறது.
அவர்களுடன் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிக்கும் போது, கதைகள் உதவுகிறது.
குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது.
அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.
உரையாடுவது / அவர்களை பேசவைப்பது / கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான discussions-களுக்கு வழிவகுக்கும்.
பழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.
தாத்தா, பாட்டி போன்றவர்கள் மூலம் கதை கேட்கும் போது, அவர்களும் குழந்தைகளுக்கும் அன்னியோன்யம் ஏற்படுகிறது.
கற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் நேரத்தில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகள்/ஊக்க வார்த்தைகளை விட, ஒரு நல்ல (அச்சூழ்நிலைகேற்ற ) கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு/நம்பி, ஊக்கம் அடைவார்கள். (டிவி சீரியலில் கேட்பது போல "எனக்கு மட்டும் ஏன் இப்படி?" என்று மனம் இழக்க மாட்டார்கள் :))
டிவி மற்றும் மீடியா தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.
கதை சொல்வதன் மூலம் நீங்கள் எதையெல்லாம் பெருமையாக நினைக்கிறீர்கள் என்பதையும் ஊடகமாக தெரிவிக்க முடியும். இதனால், நீங்கள் பெருமைப் படும் / மகிழும் வேலைகளை செய்யவே குழந்தைகள் முற்படுவார்கள். ஒரு குறிப்பிட்ட வயது வரை (பத்து வயது வரை என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்), தாய் தந்தையரை மகிழ்விக்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவதால், அவர்களை நல்வழிப் படுத்தும் வாய்ப்பாக கதை சொல்லுதல் அமையும்.
குழந்தைக்கு படுக்கை நேர கதைகள் (bed-time stories) இனிமையானவற்றை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.
கதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள் (modulation), முக பாவங்கள் (facial expressions), மற்றும் செய்கை / நடிப்பு (action) என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.

=======================================================================



அதே போல குழந்தைகளையும் உங்களுக்கு கதை சொல்லச் சொல்லி, பொறுமையாய் கேளுங்கள்.

அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். (presentation skills)
தன்னம்பிக்கை வளரும்.
உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும்.
creativity, inventive thinking மற்றும் imagination வளரும்.
குழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.
உதாரணத்திற்கு, என் பெண் தன் teddy bear (பிங்கி) மற்றும் நாய்க்குட்டி (மிட்டு) stuffed toy இரண்டையும் வைத்து ஒரு கதை சொல்லும் போது, அவள் ஸ்கூலில் (LKG) ஒரு பையன் மற்றவர்கள் பென்சிலை தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருவது தெரிந்தது. பென்சில் ஒரு ரூபாய்தான். மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொலைத்து வருவது பிரச்சினையாகத் தெரியவில்லை அல்லது அந்த குழந்தைகளை திட்டி விட்டு வேறு பென்சில் வாங்கி தந்து வந்திருக்கிறார்கள் (நானும்தான்). பென்சிலை தினம் தினம் எடுத்துச் செல்லும் குழந்தையின் பெற்றோரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தப் பழக்கம் தொடர்ந்தால், அவன் attitude தவறாக மாறிவிட ஏதுவாகும், என்பதால், class miss-ஸிடம் இதை கவனிக்குமாறு சொல்லி விட்டேன். அவர்கள் அக்குழந்தைக்கு தண்டனை ஏதும் தராமல், ஒரு அற்புதமான வழியில் இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். எப்படி தெரியுமா? அவனை class leader ஆக்கி, அனைவரது பொருட்களும் சரியாக இருக்கிறதா என்று தினமும் செக் பண்ணச் சொன்னார்கள். அப்படிச் சரியாக இருந்தால், அவன் பெயர் அன்று போர்டில் எழுதி, எல்லோரும் clap செய்வார்கள். நாளடைவில் அவன் self-esteem அதிகம் உள்ள சிறுவனாக ஆகிவிட்டான்.

====================================================

என் பெண் மூன்று வயதிருக்கும் போது, கிட்டத் தட்ட அவள் வயதுக்குரிய எல்லா கதையும் தீர்ந்து போய் விட்டது. அன்று greedy farmer and the duck which laid the golden egg, என்ற கதை சொல்லிக்கொண்டிருந்தேன். கதையைக் கேட்டு "வாத்து பாவம் இல்ல" என்று அழுதே விட்டாள் குழந்தை. அப்போது, அவளை சமாதானப் படுத்த, கற்பனையாக நானே எடுத்துவிட்ட கதை.

மழை வந்த கதை
(என் பெண் தர்ஷிணிக்காக நான் எழுதியது)

வாத்து ஒன்று குளத்திலே நீந்தி நீந்தி சென்றதாம்.
மாடு ஒன்று வந்து தாகத்தில் தண்ணீரெல்லாம் குடித்ததாம்.
குளத்தின் நீரும் குறைந்து போய்விட்டதாம்.

வாத்து மாடு கிட்ட போய்
`மாடே மாடே எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மரத்து கிட்ட
போய் கேளு’ அப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து மரத்துக்கிட்ட போய்
`மரமே மரமே மாடு சொல்லிச்சு
எல்லாத் தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
மாடு அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த கடல் கிட்ட
போய் கேளு' அப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து கடல் கிட்ட போய்
`கடலே கடலே மரம் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
கடல் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த சூரியன் கிட்ட
போய் கேளு’ அப்படீன்னு சொல்லித்தாம்

வாத்து சூரியன் கிட்ட போய்
` சூரியன் சூரியன், கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
சூரியன் அதுக்கு `என் கிட்ட கேக்காதே அந்த மேகத்துக்கிட்ட
போய் கேளு’ அப்படீன்னு சொல்லித்தாம்
வாத்து மேகத்துக்கிட்ட போய்

` மேகம் மேகம் சூரியன் சொல்லித்து, கடல் சொல்லித்து, மரமும் சொல்லித்து
எல்லா தண்ணியும் நீ குடிச்சிட்டா
நான் எப்படி நீந்திப் போவேன்’ அப்படீன்னு கேட்டுதாம்
மேகம் அதுக்கு `அப்படியா? இதோ இப்பவே மழையை தரேன் ’ அப்படீன்னு சொல்லித்தாம்.
மழை சோவெனப் பெய்தது. குளம் நிரம்பி, மாடு நனைந்து, மரம் எல்லாம் நனைந்து, கடலும் நிரம்பி, சூரியன் அந்த கடல் நீரை ஆவியாக்கி, மேகமாக ஆக்கியது. மீண்டும் மழை சோவெனப் பெய்தது. அந்த மகிழ்ச்சியுடன் நீந்திச் சென்றது.

நன்றி: தமிழ் மணம்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum