கல்வி வியாபாரம்
Mon May 19, 2014 8:41 am
கல்வி வியாபாரம் ...... ஆம்... கல்வி வியாபாரம்தான் ....
புற்றீசல் போல் நாட்டில் வருடா வருடம் முளைத்து வரும் புதிய கல்வி தனியார் கல்வி நிறுவனங்களின் தரம் மிகவும் மோசமாகிக் கொண்டு வருகிறது.
சுமார் 2-1/2 இலட்சம் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் பட்டப் படிப்பில் நுழைகிறார்கள். எத்தனை துன்பங்கள் வாழ்வில் உண்டோ அத்தனையும் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
படிப்பில் சிறந்த மாணவர்கள் எடுக்கும் முதல் நிலை மதிப்பெண்ணாகிய 185/200 அதற்கு மேலும் உள்ளவர்கள், நிச்சயம் ஒரு நல்ல கல்லூரியைத் தேர்ந்தெடுப்பார்கள். காரணம், நல்ல கல்லூரிகளுக்கும் இவர்கள் வேண்டும், தங்கள் கல்லூரியின் 100 சதவீத தேர்ச்சியைக் காண்பிக்க.
இத்தகைய மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்லித் தரத் தேவையில்லை. மாணவர்களே படித்துக் கொள்வார்கள். இதனால் கல்லூரியின் பொறுப்பு குறைகிறது. இத்தகைய கல்லூரிகள் எண்ணிக்கையில் குறைவு. போனால் தமிழ் நாட்டில் உள்ள முதல் பத்து அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் கல்லூரிப் பட்டியலில் இவைகளைப் பார்க்கலாம்.
ஆனால் இவர்களின் கல்விக் கட்டணம் ஒன்றும் அத்தனை சிறப்பானதல்ல. ஒரு சேர்க்கைக்கு ரூ 6 இலட்சம் முதல் ரூ 20 இலச்சம் வரை டொனேஷன் பெற்றே கல்வித் தந்தைகள் இடம் கொடுக்கிறார்கள்.
இந்த கல்லூரிகளின் பின்னணி தெரியாத பெற்றோர்களும் மாணவர்களை இந்தக் கல்லூரியில் எப்படியாவது கடனோ உடனோ பட்டு சேர்த்து விடுகிறார்கள். காரணம், பையன் நன்றாக படித்து வருவான், கேம்பஸ் வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கையில். இது ஓரளவு சரிதான். வளாக வேலை (campus recruit ) என்பது இத்தகைய கல்லூரிகளுக்குத்தான் முதலிடம் கிடைக்கிறது.
இரண்டாவது வகை கல்லூரிகள், மாணவர்களின் சேர்க்கையை மதிப்பெண்கள் 140/200 முதல் உள்ளவர்களிடம் இருந்து தொடங்குவார்கள் இந்தக் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஏறக்குறைய 60% முதல் 90% வரை இருக்கும். இங்கு உள்ள ஆசிரியர்கள், ஓரளவு கற்றும் கொடுப்பார்கள். ஓரளவு தரமும் இருக்கும். இவர்களும் டொனேஷன் பெறுகிறார்கள். ரூ 2 லட்சம் முதல் ரூ 4 இலட்ம் வரை.
இந்தக் கல்லூரிகள நூறு சதவீத வளாக வேலைக்கு ஏற்பாடு செய்வதில்லை சுமார் 25% முதல் 50% வரையே சாத்தியமாகிறது. நிறைய காரணங்கள் இருக்கின்றன.
1. வளாக வேலை எனும் பணிக்கு ஒரு தனி துறையே நிறுவ வேண்டும். அதற்கான செலவுகளை கல்லூரியே செய்ய வேண்டும். ஆகையால் கல்லூரிகள் இந்த மாணவர்களை கடைசி வருடம் படிக்கும் பொது வளாக வேலைக்கு ஏற்பாடு செய்ய ரூ. 30 ஆயிரம் முதல் ரூ 50 ஆயரம் வரை பணம் பெற்றுக் கொண்டு தான் இந்த பணியை செய்கிறார்கள். நிறைய நிறுவனங்கள் முதல் மூன்று மாதங்களுக்கு எந்த சம்பளமும் கொடுக்காமல் பணத்தை சரி கட்டிக் கொள்கின்றன.
2. கடைசி வருடம் மாணவர்களுக்கு வளாக வேலை ஏற்பாட்டை செய்ய வைக்க மாணவர்களால் கல்லூரியை நிர்ப்பந்திக்க முடியாமல் போகிறது. காரணம் இன்டெர்னல் மதிப்பீடும், லேப் பரிட்சைகளும்!. மாணவர்களை பழி வாங்க இந்த இரண்டும் போதும்! இதில் கை வைத்தால், மாணவர்களின் எதிர்காலமே இருண்டு விடும். ஆகவே, இந்த பயத்தையே சாதகமாகக் கொண்டு கல்லூரிகள், வளாக வேலைக்கான ஆயத்தங்கள் ஏதும் செய்யாமல் தங்களின் தலையாய கடமையான இதை மறந்து விட்டு, காசை சட்டையில் பத்திரப் படுத்திக் கொள்கிறார்கள்.
3. வளாக வேலைக்கு ஏற்பாடு செய்வது என்பது பணம் புழங்கும் ஒரு பெரிய வணிகம் . பல நிறுவனங்கள் ஒரு இடத்திற்கு இவ்வளவு ருபாய் என்று நேர்முகத் தேர்விற்கு வரும் நிறுவன அதிகாரிகள் வாங்கிக் கொண்டுதான் வேலைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு கல்லூரியில் சுமார் ஐநூறு வேலைக்கான மார்கெட். அது போல 700 கல்லூரிகள் தமிழ் நாட்டில் மட்டுமே. ஒரு வேலைக்கு ரூ 40000 சராசரியாக புழக்கம். ஆகா மொத்தம் ஒவ்வொரு வருடமும் இந்த துறையில் ஊழல் பணமாகப் புழங்குவது சுமார் ரூ 1400 கோடி.... எவன் அப்பன் வீட்டுப் பணம் இது?
4. நூறு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்களே ஆனால், அங்கே வரும் நிறுவனத்தின் HR மேலாளருக்கு ஒரு காரும், கையில் ரூ 15 லட்சமும் உறுதியாகக் கிடைக்கிறது.
.
5. வேலை கிடைத்த மாணவன், சுமார் ஆறு மாத காலத்தில் வளாக வேலை செய்த நிறுவனத்தில் இருந்து எதோ ஒரு காரணத்திற்காக வெளியே அனுப்பப் பட்டு, அந்த இடததை மீண்டு மூன்று மாதங்களுக்குள் நிரப்ப நிறுவன HR அதிகாரிகள் தயாராகிறார்கள்.காரணம், புதிய கார், இந்த வருடத்திற்கான ஊதியம், etc
6. மிகவும் கொடிய விஷயம், இந்த வளாக வேலை தரவிருக்கும் நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் இடையே இடைத் தரகர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களின் முழு நேர வேலையே இது போல பொது ஜனத் தொடர்பு தான். இவர்களுக்கும் ஒவ்வொரு முறை இன்டர்வியு போதும் ரூ. ஒரு லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது.
மூன்றாம் நிலை கல்லூரிகள் என்பவை, ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களைக் கொண்டு இருக்கும். பெரும்பாலும் எந்தவித வசதியும் இல்லாமல், ஆசிரியர்கள் குறைபாடுடன், கிராமத்தில் கட்டப் பட்டு இருக்கும். இவைகள் பெரும்பாலும் அந்த ஊரைச் சேர்ந்த ஒரு வ ர்த்தகப் புள்ளியுடையதோ, இல்லை நான்கு பேரின் கூட்டுறவில் உருவானதாகவோ இருக்கும். கட்டிடம் இருக்கும், ஆசிரியர்கள் இருப்பார்கள் ( குறைந்த அளவில் - பெரும்பாலும் இவர்கள் அரியர்ஸ் வைத்து பாஸ் செய்தவர்களாக இருப்பார்கள்..இத்தகைய ஆசிரியர்களுக்கு சொல்லித் தர எந்த அறிவும் இருக்காது, திறமையும் இருக்காது.) ஆனால் தரமும் இருக்காது, இந்த ஆசிரியர்கள் வெறும் உப்புக்கு சப்பை. AICTE, மற்றும் அனா பல்கலைக் கழகத்தின் ஒப்புதலுக்காக சேர்க்கப் பட்டவர்கள். இவர்களின் சம்பளம் மாதம் ரூ 7000 தாண்டினால் ஆச்சர்யமே.
மாணவர்களின் வளாக வேலைக்காக பெற்றோர்களிடம் இவர்கள் வாங்கும் பணத்திற்கு எந்த ஒரு இரசீதும் கொடுக்க மாட்டார்கள். மாணவர்களை அடிமை போல நடத்துவார்கள். எதிர்த்துப் போராடினால் அடியாட்கள் கல்லூரி வளாகத்தில் வந்து, மாணவர்களை நையப் புடைப்பார்கள். இந்தக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு.
இவர்களுக்கு எந்த வித வேலை வாய்ப்பும் இருப்பதில்லை. பொறியியல் படித்து விட்டு ரூ ரெண்டாயிரம் மாத சம்பளத்திற்கு செல்போன் சிம்கார்ட் விற்றுக் கொண்டு இருப்பார்கள்.
பெற்றோர்களே சிந்தியுங்கள்: உங்களின் மகனின் எதிர்காலத்தை பணம் கொண்டு நீங்கள் தீர்மானிக்கலாம். ஆனால் அவர்களின் திறமைகள் கல்லூரிகளில் இந்த கல்வித் தாளார்களால் மழுங்கடிக்கப் படுகிறது. அதை உங்களால் தவிர்க்க முடியுமா?
நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் சரி. எந்த நாட்டில் இருந்தாலும் சரி. உங்கள் வீட்டில் உங்கள் மகன் இந்த வருடம் +2 முடிக்கப் போகிறான், அவனை/அவளை ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது குறித்து உங்களுக்கு எந்த உதவியாவது தேவைப் பட்டால், தயங்காமல் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். நீங்கள் சேர்க்க நினைக்கும் கல்லூரியின் தரம் பற்றி நான் உங்களுக்கு சொல்கிறேன். அது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
மாணவர்களே, உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வீட்டிற்கு அருகே இருக்கிறது என்பதற்காகவோ, உங்கள் கூடப் படித்த நண்பன் சேர்ந்திருக்கிறான் எனும் காரணத்திற்காகவோ, அந்தக் கல்லூரியில் சேரவேண்டாம்.
ஒரு கல்லூரியில் சேரும் முன் கீழ் கண்டவற்றைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்
1. அந்தக் கல்லூரியின் வருடாந்திரத் தேர்ச்சி விகிதம் எவ்வளவு
2. வளாக வேலைக்கு தனியாக துறை இருக்கிறதா? வளாக வேலைக்கென்று கடைசி வருடம் தனியாகப் பணம் பெறுகிறார்களா?
3. வளாக வேலை எத்தனை பேருக்கு கிடைத்துள்ள்ளது
4. கல்லூரியில் ஆசிரியர்கள் முழுவதுமாக இருக்கிறார்களா?
5. சென்ற வருடம் முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் எவ்வளவு? எத்தனை பேர் அர்ரியர்ஸ் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
6. மிக முக்கியமாக ஒரு கல்லூரியை அதன் இன்டர்நெட் வலைத் தளத்தை வைத்து மட்டும் முடிவு செய்யவே செய்யாதீர்கள். அந்தக் கல்லூரி க்கு நேரடியாக விசிட் செய்யுங்கள்.
7. மாணவர்களின் படிப்பு மட்டுமல்லாத மற்ற திறமைகளை (Soft Skills Set ) வளர்க்க என்னென்ன ட்ரைனிங் தருகிறார்கள். அவற்றிற்கெல்லாம் தனியாக பணம் வாங்குகிறார்களா?
8. அந்தக் கல்லூரியின் பழைய மாணவர் யாரையாவது சந்தித்து கல்லூரி பற்றிய அவரின் கணிப்பை கண்டிப்பாக அறிவுரையாகக் கேட்கவேண்டும்.
9., பாடத் திட்டங்களை நன்றாக சொல்லிக் கொடுக்கிறார்களா?
இதையெல்லாம் அறியாமல் நீங்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்கக் கூடாது.
575 பொறியியல் கல்லூரிகளும் 48 தனியார் நிகர் நிலை பல்கலைக் கழகங்களும் பல்கிப் பெருகியுள்ள கல்வி நிறுவனங்களுக்கு சேவை பெரிதல்ல. பணமே பெரிது.
பணம்தான் பெரிதென நினைக்கும் கல்வித் தாளாளர்களே, பெண் வாணிபத்தில் இதைவிட அதிக பணம் கிடைக்கும். அதன் பெயர் கலவி வியாபாரம். அந்த வியாபாரத்தில்கூட நேர்மை இருக்கிறது. கொடுப்பதற்கு ஏற்ற சந்தோசம் கிடைக்கிறது. ஆனால் நீங்கள் செய்யும் இந்தத் தொழில்? மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள்? நீங்கள் கல்விக்காக என்ன கடமை ஆற்றி இருக்கிறீர்கள்? வள்ளல் பச்சையப்பர், வள்ளல்கள் ராமசாமி, இலக்ஷ்மண சாமி, பெண்ணாத்தூர் சுப்ரமணியம், ஆகிய பெரும் கல்வி வள்ளல்கள் இடையே, உங்கள் பெயரையும் நீங்கள் பதிக்க முயலும்போது, விஷயமறிந்த என் போன்ற ஆட்கள் ஏளன நகைப்பு செய்வது தவிர வேறு என்ன செய்வது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum