"எனக்காய் ஜீவன் விட்டவரே..." எனும் பாடலை பிரகாஷ் ஏசுவடியான் நித்திரையடைந்தார்
Tue Jul 22, 2014 8:54 pm
"எனக்காய் ஜீவன் விட்டவரே..." எனும் பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. இந்த பாடலை இயற்றி, ராகம் அமைத்து பாடியவர் அண்ணன் . வாலிப வயதில் ஆண்டவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதுமுதல் இதோ இன்று அதிகாலை 3 மணி வரையிலும் தன்னை இயேசுவானவருக்கு உண்மை சீடனாகவும் எளிமையான நற்செய்தியாளனாகவும் மட்டுமே காத்துக்கொண்ட அருமை அண்ணன் பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் கர்த்தரிடமாய் சேர்ந்திருக்கிறார். பல வியாதி உபத்திரவங்களுக்கு மத்தியிலும் தன் வைராக்கியத்தை விட்டுவிடாமல் விசுவாசத்தைக் காத்துக்கொண்டார். கடந்த சுமார் 40 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுவிசேஷப் பயணம் மேற்கொண்டபோதும் தனக்கென்று ஒன்றையும் சேர்க்காமல் தானும் தன் குடும்பத்தோடு உண்மையைக் காத்துக்கொண்டார். இவருடைய ஊழியத்தின் மூலம் அநேகர் கிறிஸ்துவின் அன்பிற்கு தங்களை அற்பணித்தார்கள், என் தாயார் பாளையங்கோட்டையில் பள்ளியில் படிக்கும் போது இவருடைய ஊழியத்தின் மூலம் கிறிஸ்துவின் அன்பைக் குறித்து அறிந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட தேவ தாசர்கள் அடுத்தடுத்து இம்மண்ணைவிட்டு செல்வது நமக்கெல்லாம் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும். சென்னை,முகப்பேர் அருகில் ஒரு எளிமையான வீட்டில் வசித்து வந்த அன்னாருடைய இறுதி வைபவத்தில் சென்னையிலுள்ள நண்பர்கள் வந்து கலந்துகொள்ள கர்த்தருக்குள் அழைக்கிறோம்.
இவருடைய உயிர்தெலுதலின் நல்லடக்க ஆராதனை 22.07.14 மாலை 3.00 மணிக்கு, வேபெரி இம்மானுவேல் மெதெடிச்ட் திருச்சபையில் நடைபெறும்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum