விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை
Wed Jun 04, 2014 7:42 am
பிற ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு உதவியாக இருக்கும் சகோதரர்களே....
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற, அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படுவதாக கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி வெளியிட்ட அறிக்கை:
2013-14 -ஆம் கல்வியாண்டில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் அரசுப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு குறைந்த பட்சம் 960 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பயில கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், அரசு நடத்தும் கவுன்சலிங் முடிந்து கல்லூரிச் சேர்க்கை கடிதத்துடன் கோவை ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை அலுவலகத்தில் பதிவு செய்து கல்வி உதவித் தொகையான ரூ. 25 ஆயிரத்திற்கான வரைவோலையை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், கல்லூரியில் சேர்ந்ததற்கான அத்தாட்சியுடன், அறக்கட்டளை அலுவலகத்தில் பதிவு செய்து உதவித் தொகையாக ரூ. 12,500 பெற்றுக் கொள்ளலாம்.
உதவித்தொகை பெற தகுதியான மாணவர்கள், மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதிச் சான்று ஆகிய நகல்கள், கல்லூரி ஒதுக்கீடு ஆணை (மருத்துவம்,பொறியியல் கல்லூரியில் சேர்பவர்களுக்கு மட்டும்), கல்லூரிகளில் சேர்ந்ததற்கான அத்தாட்சி அட்டை (கலைஅறிவியல் கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டும்), குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ-3 ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும்.
இந்த கல்வியாண்டில் 1200-க்கு 1080 மதிப்பெண்கள் எடுத்த கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்லூரி படிப்பிற்கான முழு கல்வி உதவித்தொகையையும் (அதிகபட்சமாக ரூ. 1 லட்சம்) எங்கள் அறக்கட்டளையே ஏற்றுக் கொள்ளும்.
குறிப்பு : கலை , அறிவியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் சேர்க்கை அத்தாச்சி , மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் சேர்பவர்கள் ஒதுக்கீடு ஆணை(Allotment Order) பெற்ற பிறகே தேவையான ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்புக்கு :
ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை
107/A , சென்குப்தா வீதி, ராம்நகர், கோவை - 641 009
Mobile : 0422 - 2207500
Re: விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை
Sat Jun 14, 2014 10:01 am
Permissions in this forum:
You cannot reply to topics in this forum