சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - 2015
Thu Jul 02, 2015 3:18 am
தமிழக அரசின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம், தமிழக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது. ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உள்பட்டு இந்த உதவி தொகையை பெற முடியும்.
இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் சிறுபான்மையின மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் களுக்குமேல் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
1-முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி 15-7-15-ந் தேதிக்குள் தாங்கள் படிக்கும் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
9,10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இணையதளம் வழியாக 31-7-15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதேபோல 10-ம் வகுப்பிற்கு மேல் இதர படிப்புகளை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் 18 ஆயிரத்து 989 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகை பெற புதிதாக விண்ணப்பிப்பவர்கள் 15-9-15-ந் தேதிக்குள்ளும், புதுப்பித்தல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் 10-10-2015-ந் தேதிக்குள்ளும் இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இது பற்றிய விவரங்களை www.scholarships.gov.in
என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

- சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை வழங்குதல் 2016-17
- விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில்அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித் தொகை
- சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை பெற
- மாற்று திறனாளிகளுக்கான கல்வி உதவி தொகை
- சாதி மதம் கடந்து கல்வி உதவி தொகை சேவை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum