இப்படி ஒரு பிரச்சினை வரும்னு எதிர்பார்க்கவே இல்லை
Sun Jun 01, 2014 9:44 pm
"இப்போ எதுக்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுற மோகம் வந்துருச்சி. ஒரு டாக்டர் வயதைக் குறைக்கிற மாத்திரை கண்டுபிடிச்சாராம். மாத்திரை விலை ரொம்ப காஸ்ட்லி.
ஒரு பணக்காரப் பெண்ணுக்கு தன்னோட வயசைக் குறைச்சுக்கணும்னு ஆசை. நிறையப் பணம் கொடுத்து முப்பது மாத்திரை கொண்ட ஒரு டப்பா வாங்கினாங்க. எதுக்கும் இருக்கட்டுமேன்னு இன்னும் இரண்டு டப்பா சேர்த்து வாங்கிக்கிட்டாங்க. தினம் ஒரு மாத்திரை சாப்பிட்டுக் கிட்டே வந்தாங்க. 30 நாள் முடிஞ்சதும் 50 வயசுக்காரியான அந்தம்மா 20 வயசு இளம் பெண்ணா மாறிட்டாங்க. டாக்டரை பார்க்க வந்தாங்க.
”நீங்க யாரு ?” ன்னாரு டாக்டர்.
”வயசு குறைக்கிற மாத்திரை வாங்கிட்டுப் போனது நான் தான். மாத்திரை ரொம்ப எஃபக்டிவா வேலை செஞ்சிருக்கு.”
”அப்படியா, ரொம்ப சந்தோஷம் உங்க இடுப்பிலே இருக்கிற குழந்தை யாரு?” ன்னாரு டாக்டர்.
”அவர்தான் டாக்டர் என் ஹஸ்பெண்ட் எனக்குத் தெரியாம தினம் ரெண்டு மாத்திரையாத் தின்னுருக்கார். இப்படிக் குழந்தை ஆயிட்டார். இப்போ வயசைக் கூட்டறதுக்கு ஏதாவது மாத்திரை இருக்கா?” ன்னாங்களாம்.
இப்படி ஒரு பிரச்சினை வரும்னு டாக்டர் எதிர்பார்க்கவே இல்லை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum