மனிதன் இரட்சிக்கப்படும்படி தேவனால் அனுப்பப்படும் தேவதூதர்களின் வேலை என்ன?
Thu May 22, 2014 6:28 pm
மனிதன் இரட்சிக்கப்படும்படி தேவனால் அனுப்பப்படும் தேவதூதர்களின் வேலை என்ன?
சாத்தானின் தூதர்களின் வேலை என்ன?
இரட்சிக்கப்பட்ட ஒரு தேவனுடைய பிள்ளையை தேவன் எப்படி தேவ தூதர்களைக் கொண்டு பாதுகாக்கிறார்.?
1) தேவதூதர்களின் வேலை:-
ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவபிள்ளைகளுக்கும் தேவன் இரண்டு தேவதூதர்களை அனுப்புகிறார்.
1)ஒரு தேவதூதனின் வேலை இந்த இரட்சிக்கப்பட்ட தேவபிள்ளையை சாத்தானிடமிருந்தும், அசுத்த ஆவிகளிடமிருந்தும்,தீங்குச்செய்ய நினைக்கும் மனிதர்களிடமிருந்தும் மற்றும் பிரயாணங்களில் இன்னும் அநேக நேரங்களில் காப்பாற்றுகிறார் ஒரு தூதன்.
2)இன்னொரு தேவதூதன் இந்த இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான் எந்த அளவிற்கு பரிசுத்தமாக வாழ்கிறார், தேவனுக்காக உழியத்திற்காக எந்த அளவு பிரயாசப்படுகிறார்,
என்றும் முக்கியமாக இவரது பரிசுத்த நிலையை ஒவ்வொரு நிமிடமும் தேவனுக்கு தெரியபடுத்திக்கொண்டே இருக்கிறார்.
1)"உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்."
(சங் 91 :11)
2)"உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்." (சங்91:12)
3)"இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?" (எபி 1 :14)
நாம் நித்திய ஜீவனை அடைந்து கொள்ளும்படிக்கு நமக்காக தேவன் தேவதூதர்களை அனுப்புகிறார். இந்த பரிசுத்தவான் தேவனுக்கு செவிக்கொடுத்து, அவரது கற்பனை,கட்டளைகளைக் கைக்கொண்டபடியால் ஜெயம்கொள்கிறார்கள், இவர் கிறிஸ்துவிற்குள் மரிக்கிறபடியால் இவரை தேவதூதர்கள் பரதேசு என்ற இளைப்பாறுகின்ற ஸ்தலம்.
அதாவது கிறிஸ்துவிற்குள் மரித்து கர்த்தருடைய வருகைக்கு காத்துக்கொண்டிருக்கிறவர்களோடு சேர்த்துவிடுகிறார்கள். தேவனால் அனுப்பபட்டு அதின்படி வந்த இந்த தேவதூதர்களின் வேலை முடிந்தபடியால் சீயோனில் தேவனோடும்,தூதர் சேனைகளோடும் சேர்ந்துக்கொள்கிறார்கள்.
2)சாத்தனின் தூதர்களின் வேலை: -
சாத்தானும் இரட்சிக்கப்பட்ட தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக இரண்டு சாத்தானின் தூதர்களை அனுப்புகிறான்.
1) ஒரு தூதனின் வேலை இந்த இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவானை பாவத்தில் விழவைத்து பூரண பரிசுத்தம் அடையவிடாதபடிக்கு பாவம் செய்ய வைக்கும்படியாக போராடுவான்.
2)இன்னொரு தூதன் இந்த இரட்சிக்கப்பட்ட மனிதன் சாத்தானுக்கு செவிக்கொடுத்து பாவம் செய்ததை அவனது தலைவனான சாத்தானுக்கு தெரியப்படுத்திக்கொண்டே இருக்கிறான்.
இந்த இரட்சிக்கப்பட்ட மனிதன் இறுதிவரைக்கும் மனந்திரும்பாமல் சாத்தனுக்கு செவிக்கொடுத்து பாவம் செய்வானென்றால் இவன் மரித்தவுடன் இவனுடைய ஆன்மாவை பூமிக்கு அடியில் இருக்கக் கூடிய பாதாளம் என்ற பாவிகள் இருக்ககூடிய ஆன்மாக்களோடு இந்த மனிதனின் ஆன்மாவையும் சேர்த்துவிடுகிறான். அந்த சாத்தானின் தூதர்களின் வந்த வேலை முடிந்தபடியால் அவனது தலைவனான சாத்தானோடும், வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் சேர்ந்து கொள்கிறது,
இதுவே தேவனுடைய தூதர்களின் வேலையும், சாத்தானின் தூதர்களின் வேலையுமாயிருக்கிறது.
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum