எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது
Thu Dec 17, 2015 9:22 am
ஆண்டுகள் (100) பல பின்னோக்கி செல்வோம்!!!
அரசாங்கத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் எப்படிப்பட்டவர்களாக இருந்தனர்?
கல்வி அறிவு, உலக அறிவு, பொருளாதாரம்,நிர்வாகம் என்று அணைத்து திறனும் பெற்றிருந்தனர், சாதாரண பாமர மக்களை கீழ்தரமாக நடத்தினர், காரணம் தாங்கள் பெரிய மேதைகள் என்றும் திறைமையானவர்கள் என்றும் கல்வி பயின்றவர்கள் என்ற சிந்தனை அவர்களை ஆட்கொண்டது,
இந்த உலகத்தில் வாழ "தகுதி" வேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்தது, பாமர மக்களை தனக்கு கீழாகவே ஒரு அடிமை போல நடத்தியதாகவும் உலக வரலாறு இருக்கிறது,
இவற்றை பார்த்து மன பாரம் கொண்ட மிஷ்னரிகள் மக்களிடம் இருந்த அறியாமையை போக்க அரும் பாடுபட்டனர், இயேசு கிறிஸ்துவின் அன்பை மக்களிடையே போதித்து அனைத்து மக்களும் சமம் என்று புதிய சட்ட திட்டங்களை கொண்டுவந்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை.....
ஆதி காலத்தில் வந்த மிஷ்னரிகள் தனிப்பட்ட நிர்வாகத்தின் பெயரில் வரவில்லை,
அதாவது (Roman catholic,csi,cni,anglican,anglo-indian,pentacostal) அவர்கள் ஜாதியின் அடிப்படையிலோ? கோத்திரத்தின் அடிப்படையிலோ? மக்களை நெருங்கவில்லை!
மன பாரத்தோடு அணைத்து மக்களையும் நேசிக்கும் பண்பு உள்ளவர்களாய் மட்டுமே இருந்தனர்,
இன்று நாம் காணும் சில வேடிக்கையான சம்பவங்கள் இன்னும் இவர்களின் அறியாமையை காட்டுகிறது என்பது ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருக்கிறது!!!
ஒரே தெருவில் பத்து தேவாலயங்கள் இருந்தாலும், அனைவரும் இயேசு கிறிஸ்துவை தானே எற்றுகொண்டிருகிறோம்?
இன்றைய நவீன கால சில ஊழியர்களின் போதனைகள் இப்படியாக இருக்கிறது,
-நீங்கள் எப்பொழுதும் ஒரே ஆலயத்திற்கு தான் போகவேண்டும், அந்த ஆலயத்தின் போதகரிடம் மட்டும் தான் ஜெபிக்க வேண்டும், ஏனென்றால்? நாம் பாரம்பரியமாக வந்த திருச்சபை மக்கள், இன்று இடையில் வந்த சபைக்கு நீங்கள் செல்ல கூடாது, அவர்கள் எல்லோரும் கள்ள தீர்க்கத்தரிசிகள்" என்று அடுக்கி கொண்டே போகிறார்!
சரி ஏன் இப்படி சொல்கிறார் என்று கவனித்தால்?? ஊழியம் செய்ய முதலில் தகுதி வேண்டுமாம், நாங்கள் முறையாக இறை கல்லூரியில் படித்து பட்டம் பெற்று "தகுதி" பெற்றவர்கள், எங்களால் மட்டும் தான் அனைத்தையும் நடத்த முடியும், மற்ற தனிப்பட்ட சபை ஊழியர்களோ பட்டம் பெறாத தகுதி இல்லாதவர்கள் என்று சொல்கிறார்...
இந்த சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் தான் நம் "இயேசு கிறிஸ்து" சரித்திர நாயகர்களை திரும்பி பாருங்கள்,
"தாவீது-இறை கல்லூரியில் படிக்கவில்லை,
மோசே-அரசு அதிகாரி இல்லை,
நோவா-கப்பற்படையின் தளபதி இல்லை..
இவர்கள் மூன்று பேருக்கும் ஒரே ஒரு "தகுதி" இருந்தது,
அது "மனத் தாழ்மையும், குற்றம் சுமத்தாத எண்ணமும், 'தான்' என்ற கர்வமும்" இல்லாதிருந்தது. இந்த "தகுதி"மட்டுமே இவர்களை உயர்த்தியதேயன்றி வேறே எந்த தகுதியும் இவர்களை தேவனோடு சேர்க்கவில்லை., சிந்தித்து கொள்ளுங்கள் உங்கள் தகுதியை!!!
-எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.-II கொரிந்தியர் 3:5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum