அதிகாரங்கள் தேவனால் ஏற்படுத்தப்படுகிறது
Sat May 17, 2014 9:06 pm
அன்பான தேவ ஊழியர்களுக்கு,
அதிகாரங்கள் தேவனால் ஏற்படுத்தப்படுகிறது.
தேவ ஜனங்கள், தேவ ஊழியர்கள் தரிசனமில்லாமல் சீர்கெட்டு போகும்போது, ஆண்டவர் வேறு வழியின்றி எகிப்தியன், அமலேக்கியன், அம்மோனியன், பெலிஸ்தியன், மீதியானியன், மோவாபியன், பாபிலோனியன், மேதியன், பெர்சியன், கிரேக்கன், ரோமன், ஹோஸ்மேனியன் ஆகியோர்களை கொண்டு சரிப்படுத்தி உள்ளதை நாம் வேதத்தில் / சரித்திரத்தில் வாசிக்கிறோம்.
இப்போதும் நாம் தரிசனம் இல்லாமல் சீர்கெட்டு அலைவதை போருக்க முடியாத தேவன், அல்லது தூங்கும் நம்மை எழுப்ப முடியாத தேவன், வேறு வழியின்றி ஒரு பாபிலோனிய சாம்ராஜ்யத்தை எழுப்பியுள்ளார். நாம் தூக்கத்தில் இருந்து எழும்ப வேண்டுமே?
எனவே நாம் நமது தூக்கத்தில் இருந்து எழும்பி, சபையில் நாம் செய்யும் ஜாதி - அதிகார அரசியலில் இருந்து விலகி, காசு பணம் பார்ப்பதை விட்டு விலகி, சபை பாகுபாடு என்னும் கட்டிலிருந்து விலகி, தேசத்திற்காக எஸ்தரைபோன்று மொர்தெகாயை போன்று ஜெபித்தால் மட்டுமே சிறுபான்மையினர் சமாதானத்துடன் வாழ முடியும்.
இந்த தேசத்தை காக்கும் பொறுப்பை நம்மிடமல்லவா தேவன் கொடுத்திருக்கிறார்?
- பாஸ்டர் சாம் இராமலிங்கம் -"

Re: அதிகாரங்கள் தேவனால் ஏற்படுத்தப்படுகிறது
Sat May 17, 2014 9:08 pm
ரோமர் 13:1எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வசனத்தின்படி தேவன் திரு நரேந்திர மோடியை நமது பாரத தேசத்திற்கு பிரதமராய் நியமித்ததற்க்காய் தேவனுக்கு நன்றியும் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களும் தெரிவிக்கிறோம்.
Re: அதிகாரங்கள் தேவனால் ஏற்படுத்தப்படுகிறது
Sat May 17, 2014 9:21 pm
இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய
கண்களை வானத்துக்கு ஏறெடுத்து:
பிதாவே, வேளை வந்தது…” (யோவான் 17:1-2)
இயேசுகிறிஸ்துவையும், அவர் வைத்துச்சென்ற மாதிரிகளையும் யோவான் தன் சுவிசேஷத்தில் பல கோணங்களில் விளக்கியுள்ளார். அவற்றில் மிக முக்கியமானது, நமது ஜெப ஜீவியத்திற்கு ஆண்டவர் ஒரு மாதிரியை வைத்துப்போனார் என்பதே. 17ஆம் அதிகாரத்தில் யோவான் குறிப்பிட்டு எழுதியுள்ள இயேசுவின் இந்த ஜெபத்தை வேறு சுவிசேஷங்களில் காணமுடியாது.
தாம் மரிக்கும் வேளை மிகவும் நெருங்கிவிட்டது என்பதை அறிந்த இயேசு, தமது மரணத்திற்கு முன்பு, அந்நாட்களிலும் பின்வரும் காலங்களிலும் நடக்கப்போகும் காரியங்களையும், அறிகுறிகளையும் சீஷர்களுக்கு விளக்கினார். பின்பு தமது கண்களை வானத்திற்கு நேராக ஏறெடுத்து, தன் பிதாவை நோக்கி ஜெபித்தார். இயேசுவின் இந்த ஜெபத்தில் மூன்று பகுதிகளைக் காண்கிறோம்.
ஒன்று, தமக்காக, பின்னர் தமது சீஷர்களுக்காக, அடுத்தது, தம்மை விசுவாசித்த அனைவருக்காகவும் இயேசு ஜெபித்ததை யோவான் எழுதிவைத்துள்ளார். ஆண்டவர் அன்று மாத்திரமல்ல, இன்றும் என்றும் தம்முடைய பிள்ளைகள் அனைவருக்காகவும் பிதாவின் வலதுபாரிசத்திலிருந்து ஜெபித்துக்கொண்டேயிருக்கிறார் (ரோமர் 8:34).
இயேசு செய்த இந்த உருக்கமான ஜெபத்தோடு இன்று நாம் செய்கின்ற ஜெபங்களை ஒப்பிட்டுப் பார்ப்போமா! அதிகமாக நமக்காகவும் நமது குடும்பத்திற்காகவுமே நாம் ஜெபிப்பதுண்டு. நமக்காக ஜெபிக்கத்தான் வேண்டும். ஆனால், நமக்காக மட்டும் ஜெபிக்கக்கூடாது.
இயேசு காட்டிய மாதிரியைப் பின்பற்றி, மற்றவர்களுக்காகவும் ஜெபிக்கக் கடமைப்பட்டுள்ளோம். இது ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கட்டாய பொறுப்பு.
இதைத்தான் பவுல் அப்போஸ் தலனும், “.. எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்” (1தீமோ.2:1) என்று தீமோத்தேயுவுக்குக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்..
-- Selected --

Permissions in this forum:
You cannot reply to topics in this forum