ஒரு மனிதனில் பாவம் எப்போது உருவாகிற்று அல்லது உருவாகின்றது..?
Thu May 22, 2014 6:03 pm
ஒரு மனிதன் ஜென்ம பாவம், கரும பாவங்களால் ஆட்கொள்ளப்படுகின்றான்.
1) ஜென்ம பாவம்:-
இது ஆதாம், ஏவாள் தேவனுடைய வார்த்தைகளை மீறி புசிக்க கூடாது என்ற வார்த்தையை மீறி புசித்ததினால் ஜென்ம பாவம் உருவாகிற்று. " நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்." (ஆதி 3 :19)
ஜென்ம பாவத்தினால் மனிதனுக்கு மரணமும் உண்டாயிற்று. அன்று முதல் பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் இன்று வரை ஜென்ம பாவத்தோடு பிறக்கிறான். (இயேசு ஒருவரை தவிர)
(1) "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்." (சங்.51:5) இப்படியாக தாயாகிய ஏவாளால் எல்லா மக்களும் ஜென்ம பாவத்தோடு பிறக்கிறார்கள். இப்படியே ஜென்ம பாவம் உருவானது.
2) கரும பாவம்:-
இது ஒரு பிள்ளை தனது குழந்தை பருவத்தை கடந்து நன்மை, தீமை அறியக்கூடிய பருவம் ஆரம்பமாகின்ற போது அவன் பாவம் செய்ய ஆரம்பிக்கின்றான். எந்தவொரு மனிதனும் அவன் செய்கின்ற பாவமே கரும பாவம். குறிப்பாக ஒரு மனிதனில் வாலிப பிரயாயத்தில் கரும பாவம் கிரியை செய்ய ஆரம்பிக்கின்றது.
(1) " கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல, பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை." (சங்.131:1) தாவிது சொல்கிறார் மிஞ்சின கருமங்களில் தலையிடுகிறதுமில்லை என்கிறார். ஒவ்வொரு தனிமனிதனால் செய்யப்படுகின்றன இந்த 17 விதமான பாவங்கள் கரும பாவமாகும். "மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் உங்களுக்குச் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்." (கலா5:19,20, 21) இதில் இருக்கின்ற ஒரு கரும பாவம் செய்கின்ற ஒருவரும் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்திரிக்க மாட்டார்கள்.
இந்த ஜென்ம பாவம், கரும பாவம் இவைகள் மன்னிக்கப்பட்டாலே ஒரு மனிதன் பரிசுத்தவான் என்று ஆவியானவரால் அங்கிகரிக்கப்படுவார்கள். பாவம் செய்வதற்கு முன்பு ஆதாம், ஏவாள் என்ன சாயலில் அதாவது தேவ சாயல், தேவ ரூபம், தேவ மகிமையோடு இருந்தார்களோ அதை இந்த மனிதனும் அடைய வேண்டும் அப்பொழுது தான் இவன் சீயோனாகிய நித்தியத்திற்கு சேர முடியும். இவன் சேர வேண்டுமென்றால் இவனில் இருக்ககூடிய ஜென்ம பாவமும், கரும பாவமும் மன்னிக்கப்பட வேண்டும். நியாயப்பிரமாணத்தினால் ஒரு மனிதனை முழுவதும் பூரணப்படுத்த முடியவில்லை. "
இப்படியிருக்க, நியாப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது." (எபி 10 :1) அதனால் பூமியில் இருக்கின்ற மனிதனுடைய ஜென்ம, கரும பாவங்களை முழுவதுமாக மன்னிக்க இயேசு மனிதனோடு மனிதனாக வெளிப்பட்டார். இரத்தம் சிந்தினார். உயிர்த்தெழுந்தார். மனிதனை மீட்டுக்கொண்டார்.
இப்போது உன்னுடைய ஜென்ம, கரும பாவத்தை மன்னிக்க இயேசுவால் மட்டுமே முடியும். மன்னிக்கப்பட்டாலே நித்தியத்திற்குள் நீ பிரவேசிக்க முடியும். அவர் மன்னிக்க இருகரம் நீட்டி அழைக்கிறார். ஒப்புக்கொடுப்பாயா? ஒப்புக்கொடுபாய் என்றால் நித்தியத்தை சுதந்தரித்துக் கொள்ளும் சுதந்திரவாளியாவாய்.
நன்றி: இரகசிய வருகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum