சின்ன பாவம்
Wed Feb 10, 2016 1:56 pm
வேதாகமத்தில் யோசுவாவின் புத்தகம் ஆறாம் அதிகாரம்
இஸ்ரவேல் ஜனங்கள் ஆறுநாள் அமைதியாய் எரிகோ கோட்டையை சுற்றி வந்தனர். ஏழாம் நாளில் ஆறுதடவை அமைதியாய் சுற்றினார்கள். ஏழாவது தடவையோ தேவகட்டளைக்கு கீழ்ப்படிந்து ஆர்ப்பரித்தபோது அலங்கம் இடிந்து விழுந்தது. எரிகோவை இஸ்ரவேலர் எளிதாக கைப்பற்றினர்.
அடுத்ததாக எரிகோவுக்கு அருகில் இருந்த ஆயி என்ற பட்டணத்தை பிடிக்கவேண்டும். மோசேக்கு பின் இஸ்ரவேலரை வழி நடத்தின யோசுவா ஆட்களை வேவு பார்க்க அனுப்பினார். அந்த மனுஷர் போய் ஆயியை வேவுபார்த்து யோசுவாவினிடத்தில் வந்து ஜனங்கள் எல்லாரும் போக வேண்டியதில்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் இருந்தால் போதும் ஆயியைமுறியடிக்கலாம் என்றனர். ஆம். அவர்களது கணக்கின்படி ஆயி பட்டணத்தை பிடிப்பது மிகவும் எளிதான காரியமாகத் தெரிந்தது.
ஆனால் நடந்ததென்ன தெரியுமா? வேவுக்காரர்களின் வார்த்தையின்படி மூவாயிரம்பேர் அனுப்பப்பட்டனர். ஆயியின் மனுஷர் அவர்களில் முப்பத்தாறு பேரை வெட்டிப்போட்டனர். படுதோல்வி கொஞ்ச நாட்களுக்குமுன் எரிகோ பட்டணத்தை எளிதாக தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட இஸ்ரவேலருக்கு இன்று தோல்வியை சந்தித்தார்கள். அவமானம் ஏன்?
தலைவனாகிய யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு தேவ சமூகத்தில் போய் விழுந்து அழுதார். தேவனுடைய ஜனங்களுக்கு தோல்வி என்றால் அது அவர்களைத் தெரிந்துக் கொண்டதேவனுடைய நாமத்துக்கு அவமானம் அல்லவா! தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்ட அருமையானவர்களே வாழ்க்கையின் போராட்டங்களில் பிசாசின் தந்திரங்களினால் நாம் தோற்கடிக்கப்படும் போது நம்மைத் தெரிந்துக்கொண்ட தேவனுடைய நாமம் அவமகிமைப்படுகிறதுஎன்பதை சிந்தித்திருக்கிறீர்களா?
தேவசமூகத்தில் விழுந்தகிடந்த யோசுவாவோடு தேவன் பேச ஆரம்பித்தார். தோல்வியின் காரணத்தை விளக்கமாக கூறினார். இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவனாகிய ஆகான் தேவக் கட்டளையை மீறி எரிகோவை பிடிக்கும்போது கொள்ளைப்பொருளில் ஒரு நேர்த்தியான பாபிலோனிய சால்வையும், இருநூறு வெள்ளிச் சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான பொன் பாளத்தையும் கண்டு இச்சித்து ஒருவருக்கும் தெரியாமல் எடுத்து அதைத் தன் கூடாரத்தில் மறைத்து வைத்தான். ஆனால் தேவனுடையகண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை என்பதை மறந்துவிட்டான். தேவனால் விலக்கபட்டஇந்தப் பொருட்கள் அவர்கள் நடுவில் இருக்கும்மட்டும் அவர்கள் தங்கள் சத்துருக்களை மேற்கொள்ள முடியாது என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார்.
அதோடு நிறுத்திவிடாமல் கர்த்தர் கூறியது என்ன தெரியுமா? அந்த ஆகான் உடனடியாக அவர்கள் நடுவே இருந்து வெளியே கொண்டு வரப்படவேண்டும். அவன் மறைத்து வைத்த பொருட்களும் வெளியே கொண்டு வரப்படவேண்டும். அது மாத்திரமல்ல, அவனும், அவனுடைய மனைவி, பிள்ளைகள் அவனுக்குரிய ஆடு, மாடுகள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படவேண்டும் என்று கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளை கொடுத்தார். யோசுவா கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஆகானையும், அவனுக்குண்டான யாவற்றையும் வெளியேக்கொண்டு வந்து கல்லெறிந்து கொன்றார்.
அதன்பின்பு இஸ்ரவேலர் ஆயி பட்டணத்தின்மீது படையெடுத்து வெற்றி பெற்றனர். வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து சோர்ந்து போயிருக்கும் அருமையானவர்களே சிறிது யோசித்துப்பார்க்க நேரம் எடுத்துக் கொள்ளலாமா? தேவன் விரும்பாத அல்லது அவர் கட்டளைக்கு மீறின காரியங்கள் எதுவும் இன்று இருதயத்தின் ஆழத்தில் மறைக்கப்பட்டுக்கிடக்கிறதோ? ஒருவேளை அது ஒரு மிகச்சிறிய காரியமாக அல்லது சிறிய பாவமாக இருக்கலாம். ஆகான் ஒரு சில சிறிய பொருட்களைத்தான் இச்சித்து எடுத்து மறைத்து வைத்தான். ஆனால் அதன் விளைவைப் பார்த்தீர்களா? இஸ்ரவேல் ஜனத்துக்கு தோல்வி. அவனும், அவனுக்குண்டான யாவும் அழிக்கப்பட்டதே. இன்று உன் தோல்விக்கு காரணம் நீ மறைத்து வைத்திருக்கும் ஒரு அற்பமான பாவமாக இருக்கலாமே. தேவனுடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை, தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். இருதயத்தை ஆராய்ந்து பார்? மறைக்கப்பட்ட காரியங்களை தேவசமூகத்தில் அறிக்கை செய். எந்த பாவியையும் அவர் தள்ளவேமாட்டார். அது எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகலபாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்க இரத்தம் வல்லமையுள்ளதாயிருக்கிறது. அதோடு மாத்திரமல்ல, பாவம் அகற்றப்பட்டபோது இஸ்ரவேல் ஜனங்கள் ஆயி பட்டணத்தின்மீது வெற்றி கண்டதுபோல் நீயும் உன் வாழ்க்கையின் போராட்டங்களில் வெற்றியைக் காணமுடியும்.
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதி 28:13.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum