ஐயோ பாவம் ...
Fri Jan 23, 2015 2:07 pm
மூன்று பேருக்கு 15 வருட
சிறைத்தண்டனை தரப்பட்டது.
ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள
ஏதாவது அவர்கள் கேட்கலாம்..
முதல் ஆள்,”எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்”
என்றான்.
இரண்டாம் ஆள், “எனக்கு சிறையில்
உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்”
மூன்றாவது ஆள்,”எனக்கு ஒரு லட்சம்
சிகரெட்கள் வேண்டும்”
15 வருடம் கழித்து மூன்று பேரும்
விடுதலை செய்யப்பட்டனர்..
முதல் ஆள்,” நான் நிறைய தெரிந்து கொண்டேன்
ஒரு லைப்ரரி அமைப்பேன்”
இரண்டாம் ஆள்,”நான் உடலை வலுவாக்கினேன்
ஜிம் வைப்பேன்”
மூன்றாம் ஆள், நான் சிகரெட்
பிடிப்பதை விட்டு விட்டேன்”என்றான்
எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம்
சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான்
என்று.
அவன் சொன்னான், “தீப்பெட்டி கேக்க
மறந்துட்டேன்ப்பா..

Re: ஐயோ பாவம் ...
Fri Jan 23, 2015 10:08 pm
ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான். அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum