சார்ட்கட் வைரஸை (Shortcut Virus) பெண்டிரைவிலிருந்து எளிதாக அழிப்பது எப்படி? எந்த மென்பொருளும் தேவையில்லை
Tue May 20, 2014 9:14 am
கணிப்பொறி பயன்படுத்தும் பலரும் அனுபவிப்பது வைரஸ் பிரச்சனை. பல்வேறு வகையான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் என்பது ஏதோ பெரிய
தீமை விளைவிக்கும் பேய் என்பது போல் ஒரு மாயை பெரும்பாலான, குறிப்பாக புதிய கணிப்பொறி பயனாளர்களின் மத்தியில் நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறானது என்பதை இங்கு கூறியே ஆக வேண்டும். வைரஸ் என்பது ஒரு மென்பொருளே, அது சில தீங்குகளை கணிப்பொறிக்கு விளைவிப்பது உண்மையே. ஆனால், அவையனைத்தும் சரி செய்யக்கூடியவையே. பெரும்பாலும் வைரஸ்களால் எந்த வித வன்பொருள் (hardware) பாதிப்புகளும் ஏற்படுவதில்லை.
சரி, பதிவின் நோக்கத்திற்கு வருவோம். அத்தகைய வைரஸ்களில் குறிப்பிடத்தக்கது சார்ட்கட் வைரஸ் (Shortcut Virus). அவை பெரும்பாலும் பெண்டிரைவுகளைப் பாதிக்கும். மேலே உள்ள படத்தைக் காண்க.
அந்த வைரஸ் டிரைவை பாதித்தால், அதிலுள்ள போல்டர்கள் மற்றும் பைல்கள் (Folders and Files) அனைத்தும் சார்ட்கட்களாக (Shortcuts) மாறிவிடும். அவற்றைத் திறக்க முயன்றால் திறக்க மறுக்கும். அவற்றை நீக்க திறமையான ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் (Antivirus Software) தேவை என்றாலும், ஒரு எளிமையான வழிமுறையின் மூலம் அத்தகைய வைரஸ் பாதித்த பைல்களை மீட்டெடுக்க முடியும். அந்த வழிமுறை இங்கே...
1.டிரைவை விண்டோஸ் இயக்க முறைமை உள்ள ஒரு கணிப்பொறியில் இணைத்து விண்டோஸ் கீ + R அழுத்துக.
2.திறக்கும் Run விண்டோவில் “cmd” என டைப் செய்து Enter கீயை அழுத்தவும். (இரட்டை மேற்கோள்குறியைத் தவிர்க்கவும்)
3.அடுத்து கமாண்டு பிராம்ப்டு (Command Prompt) திறக்கும். அதில் தங்களுடைய டிரைவின் எழுத்தை டைப் செய்து, : கொடுத்து என்டர் கொடுக்கவும். உதாரணத்திற்கு உங்களது டிரைவ் லேட்டர் g என்றால் g: என கொடுத்து என்டர் கொடுக்கவும். (உங்களது டிரைவ் லெட்டர் கண்டுபிடிக்க My Computer செல்லவும். அதில் உங்கள் டிரைவ் பெயரை ஒட்டி டிரைவ் லெட்டர் இருக்கும்.)
4.அடுத்து “del *.lnk” டைப் செய்து என்டர் தட்டவும். (இரட்டை மேற்கோள்குறியைத் தவிர்க்கவும்)
5.அடுத்து பின்வரும் கமாண்டை கொடுத்து என்டர் கொடுக்கவும். (இரட்டை மேற்கோள்குறியைத் தவிர்க்கவும்)
“attrib -s -r -h *.* /s /d /l”
அவ்வளவு தான். சிறிது நொடிகள் காத்திருக்கவும். இப்போது தங்களது டிரைவை My Coputer இல் திறந்து பார்த்தால், பாதிக்கப்பட்ட போல்டர்கள் மற்றும் பைல்கள் அனைத்தும் திரும்ப உங்களுக்கு கிடைத்திருக்கும். முயன்று பாருங்கள். இந்த பிரச்சனைக்கு இன்னும் சில வழிகளும் உள்ளன. அவற்றை நான் பின்வரும் பதிவுகளில் கூறுகின்றேன். இப்பதிவை நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களுக்கும் உதவுங்கள், நன்றி. இச்செய்முறையை முயலும் பொது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, இது சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, சந்தேகங்களை கமண்டு (Comment) செய்யவும்.
குறிப்பு: இந்த முறை வைரஸ் பாதித்த பைல்களை மீட்டெடுக்க ஒரு தற்காலிக முறையே. இது நிரந்தரமாக வைரஸை அழித்துவிடாது. இப்பிரச்சனையிலிருந்து நிரந்தர தீர்வு காண, உங்கள் கணிப்பொறி முழுவதையும் ஒரு தரமான, புதுப்பிக்கப்பட்ட (Updated) வைரஸ் அழிப்பு மென்பொருளைக் (Anti Virus Software) கொண்டு ஸ்கேன் (Scan) செய்திடவும். மேலும் வைரஸ் பாதித்த அந்த பெண் டிரைவை, பைல்களை மீட்டெடுத்த பின் பார்மட் (Format) செய்திடவும்.
நன்றி: கணிப்பொறி
- திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLEஉதவியுடன் அழிப்பது எப்படி ?
- உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?
- Corrupt ஆன வீடியோக்களை எளிதாக Convert செய்வது எப்படி?
- எந்தவொரு மென்பொருளும் நிறுவாமலேயே Screen Shot எடுக்கலாம்
- நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டை சேர்ந்தது என பார்கோடு மூலம் அறிவது எப்படி?
Permissions in this forum:
You cannot reply to topics in this forum