Corrupt ஆன வீடியோக்களை எளிதாக Convert செய்வது எப்படி?
Sun Aug 17, 2014 9:07 pm
கணினியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது வீடியோக்கள் பார்ப்பது. அவற்றை Convert செய்வது வேறு சில Device களிலும் கூட பார்த்து வருகிறோம். சில நேரங்களில் வீடியோ பிளேயர்களில் Play ஆகும் வீடியோக்கள் Convert செய்யும் போது Error காண்பிக்கும். அவற்றை எப்படி எளிதாக Convert செய்வது என்று பார்ப்போம்.
முதலில் நீங்கள் வைத்திருக்கும் வீடியோ VLC Player – இல் முழுதாக அதே சமயம் சரியாக Play ஆகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.அப்படி ஆனால் தான் உங்களால் Convert செய்ய முடியும்.
உதாரணமாக கீழே உள்ள படத்தை பாருங்கள்.
மேலே உள்ள வீடியோவின் சரியான Duration பத்து நிமிடங்கள், ஆனால் இது 23 மணி நேரம் என்று உள்ளது. மற்ற வீடியோ Converter களில் இந்த File Support ஆகவில்லை, ஆனால் VLC மூலம் Play செய்த போது சரியாக Play ஆனது.
இப்போது நீங்கள் அதே VLC Player மூலம் தான் வீடியோவை Convert செய்ய போகிறீர்கள்.
முதலில் VLC – யில் வீடியோவை Play செய்யுங்கள், அடுத்து Video Playback Control வசதிகளுக்கு மேலே சில வசதிகள் இருப்பதை காணலாம்.
முதல் வரிசையில் முதலாவதாக உள்ளது தான் நாம் பயன்படுத்தப்போவது. இது VLC – யில் Play ஆகும் Video வை Record செய்ய உதவுகிறது.
இந்த வசதி தெரியாதவர்கள் VLC மெனு பாரில் View >> Advacned Controls என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
முதலில் Error உள்ள வீடியோவை Play செய்யுங்கள், அடுத்த நொடியே இந்த பட்டனை Press செய்து விடுங்கள். வீடியோ முழுமையாக ஓடும் வரை பொறுத்திருந்தால் அது முழுமையாக Record ஆகி விடும். Documents >> My Videos பகுதியில் வீடியோ Save ஆகி இருக்கும்.
இப்போது எந்த Converter மூலமும் நீங்கள் உங்கள் வீடியோவை Convert செய்திடலாம்.
- பிரபு கிருஷ்ணா
Read more: http://www.viduthalai.in/page-1/86040.html#ixzz3AesGs1Od
Permissions in this forum:
You cannot reply to topics in this forum