எனக்குச் சம்பள உயர்வு வேண்டுமென்று... ஏன் தெரியுமா?
Fri May 16, 2014 7:43 am
மனம்_தொட்ட_கதை
மதிப்புக்குரிய முதலாளிக்கு வணக்கம்.
என் பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் பைக், ஸ்கூட்டரில்தான் ஆபீஸ் போகிறார்கள். இன்னும் நான் சைக்கிளில்தான். இது எனக்கு உறுத்தவில்லை. அதனால் உங்களிடம் நான் சம்பள உயர்வு கேட்கவில்லை.
என் அருகாமை வீட்டுப் பெண்களில் பலர், விசேஷ நாட்களில் பட்டுப்புடவைதான் கட்டுகிறார்கள். என் மனைவியோ நூல் சேலையில்தான். அவள் புலம்பவில்லை. அதனால் உங்களிடம் நான் சம்பள உயர்வு கேட்கவில்லை.
இப்போது கேட்கிறேன் - எனக்குச் சம்பள உயர்வு வேண்டுமென்று... ஏன் தெரியுமா? அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் மூன்று வேளையும் சாப்பிடுவதை என் குழந்தைகள் கண்டு பிடித்து விட்டன.
தங்கள் கீழ்ப்படிந்துள்ள,
கோவிந்தசாமி.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum