ஸ்கேன் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Tue Feb 25, 2014 11:21 pm
நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.
டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்
காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.
சிடி ஸ்கேன்
தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்
உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை போன்றவற்றை கண்டறிய மிகவும் உதவுகிறது.
கலர் டாப்லர் ஸ்கேன்.
ரத்த குழாய்கள் வழியாக ஊசி மூலம் மருந்து செலுத்தி குறைபாடுகளை துல்லியமாக கண்டறிய பயன்டுகிறது.
எக்கோ
இருதய செயல்பாடுகளை கண்டறிய பயன்படும் கருவி, நுண் அதிர்வுகள் மூலம் இருதய திறனை கண்டறிந்து குறைபாடுகள் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க முடியும்.
டிரெட் மில் டெஸ்ட்(டிஎம்டி)
வயதிற்கு ஏற்ப இருதய துடிப்பு செயல்பாடுகளை இதன் மூலம் கண்டறியமுடியும். டிரட்மில் கருவியில் வேகமாக நடக்க வைத்தும், ஒட வைத்தும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் இருதய பலம், பலவீனம் கண்டறிய முடியும்.
இசிஜி
இருதய துடிப்பு சீராக இருப்பதை கண்டறிய இது பயன்படுகிறது.
டிஜிட்டல் இசிஜி
இருதயத்தின் நான்கு அறைகளில் உள்ள செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறிய முடியும்.
டிஜிட்டல் எக்ஸ்ரே
சாதாரண எக்ஸ்-ரே கருவியை விட இது துல்லியமாக உடலின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது.
மோமோ கிராம்
பெண்களுக்கு ஏற்படும் மார்பக குறைபாடுகளை கண்டறிய முடியும் குறிப்பாக பெண்களுக்கு அதிகம் ஏற்படும் மார்பக கட்டிகள், மார்பக புற்றுநோய், போன்ற குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.
மாஸ்டர் ஹெல்த செக் அப்
மாஸ்டர் ஹெல்த் செக்-அப் என்ற பெயரில் பல மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் பல உடற்பகுதிகள் பரிசோதனை செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மருத்துவமனையிலும் பல்வேறு கட்டண விகிதங்களிலும் செய்யப்படுகிறது. உலக இருதய நோய் தினம், நீரிழிவு நோய் தினம், போன்ற சில முக்கிய மருத்துவ தினங்களில் சிறப்பு சலுகை கட்டணங்களில் மாஸ்டர் செக்அப் செய்யும் மருத்துமனைகளும் உண்டு. தேராயமாக 1000 முதல் 5000 வரை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ரூ10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் கட்டணங்களில் சிறப்பு மருத்துவ உடற்பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
நன்றி: தமிழ் ராக்கர்ஸ்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum