உங்கள் கணணி பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
Mon Apr 01, 2013 3:35 pm
நீங்கள்
சொந்தமாக ஒரு கம்ப்யூட்டரை விலைக்கு வாங்கிவிட்டீர்களா ! இதுக்கு உங்கள்
பதில் ஆம் என்றால்... இனி உங்கள் கம்ப்யூட்டரை பாதுக்காக்க வேண்டியது
உங்கள் பொறுப்பு.
இதுவரை நீங்கள் எப்படி இருந்தாலும் சரி இனி உங்கள்
கம்ப்யூட்டர் விசயத்தில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். அதாவது நீங்கள்
கஷ்டப்பட்டு விலை அதிகம் கொடுத்து வாங்கிய உங்கள் கம்ப்யூட்டரின்
முக்கியமான ஹார்டுவேர் பாகங்களை இன்னொருவர் உங்களுக்கு தெரியாமல்
எடுத்துக்கொள்ள விட்டுவிடாதீர்கள்.
உங்கள் கம்ப்யூட்டருக்கு ஏதாவது
பிரச்சனை வரும்போது அதனை சரி செய்ய கடை காரரிடம் கொடுப்பதற்க்கு முன்
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்டுவேரை பற்றிய குறிப்புகளை நீங்கள் எடுத்து
வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் கம்ப்யூட்டர் சரி செய்து வந்த
பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு உள்ளே உள்ள ஹார்டுவேர்கள் ( Mother Board,
Processor, Ram, Hard Disk)அனைத்தும் முன்பு இருந்தவைதான் இப்பொழுதும்
இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்.
அது எப்படி என்று கேட்க்கிறீர்களா ?
அது
ஒன்றும் சிரமமான காரியம் இல்லை. இங்கு கீழே சொன்ன முறைப்படி இப்பொழுதே
உங்கள் கம்ப்யூட்டரை பற்றிய குறிப்புகளை ஒரு டைரியில் எழுதி
வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் கம்ப்யூட்டர் தயாரித்த நிறுவனம் மற்றும் மாடல் நம்பரை தெரிந்துகொள்ள
Start > Run என்ற பட்டனை அழுத்தி msinfo32.exe என்று டைப் செய்து Enter பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து Run பட்டனை கிளிக் செய்து இங்கு சொன்ன எழுத்துக்களை டைப் செய்யுங்கள்.
Run ல் மேலே சொன்ன எழுத்துக்களை டைப் செய்து எண்டரை அழுத்தியதும் இங்கு
கீழே காணும் தட்டு ஓப்பன் ஆகும். இதிலும் உங்கள் கம்ப்யூட்டர் பற்றிய
விபரங்கள் இருக்கும்.
இந்த System டிஸ்பிளேயில் நீங்கள் முக்கியமான உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள
Processor Type மற்றும் Ram -ன் அளவை தெரிந்துகொள்ளலாம்
அடுத்ததாக இதே தட்டில் தலைப்பில் Display என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.
இதில் முக்கியமாக உங்கள் மதர்போர்டின் மாடல் நம்பர்
குறிப்பிடப்பட்டிருக்கும். இதனையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
கம்ப்யூட்டரில் மதர்போர்டு என்பது மிக முக்கியமான பகுதி. உங்கள்
கம்ப்யூட்டரில் உள்ள விலை அதிகமான தரம் மிக்க உங்கள் மதர்போர்டை உங்களுக்கு
தெரியாமல் ஒருவர் மாற்றிவிட்டு தரம் குறைந்த ஒரு போர்டை வைத்து உங்களிடம்
தந்துவிடமுடியும். அதன் வித்தியாசம் உங்களுக்கு உடனே தெரியாது. அதனால் இந்த
மாடல் நம்பரை வைத்துதான் நீங்கள் உங்கள் மதர்போர்டு சரியாகத்தான் உள்ளதா
என தெரிந்துகொள்ள முடியும்.
உங்கள் ஹார்டிஸ்க்கின் அளவு 320 GB, 250 GB, 160 GB, 100 GB, 80 GB, 40 GB,
20GB என்று பல அளவுகளில் இருக்கலாம் எதுவாக இருந்தாலும் சரி அதன் அளவு
என்ன என்பதை பார்த்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதனை தெரிந்துகொள்ள உங்கள் கம்ப்யூட்டர் டெக்ஸ்டாப்பில் உள்ள My Computer
என்ற ஐக்கானை செலெக்ட் செய்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து கடைசியாக
உள்ள Properties என்ற இடத்தை தொடுங்கள்
உடனே உங்களுக்கு கீழ் காணும் ஒரு தட்டு ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள்
ஹார்டிஸ்க்கின் அளவு என்ன என்பதை பார்த்து குறிப்பு எழுதி
வைத்துக்கொள்ளலாம்
இங்கு மேலே உள்ள படத்தில் C டிரைவின் ஹார்டிஸ்கின் அளவு மட்டும்
கிட்டத்தட்ட 50 GB என்று தெரியப்படுத்துகிறது. உங்கள் கம்ப்யூட்டரில்
இன்னொறு டிரைவ் D என்ற பெயரிலும் இருக்கலாம் அதன் அளவு 30 GB என
இருக்கலாம். அப்படி இருந்தால் உங்கள் கம்யூட்டரில் உள்ள மொத்த ஹார்டிஸ்கின்
அளவு 80 GB என நீங்கள் கணக்கெடுத்துக்கொள்ளலாம்.
இங்கு சொன்ன
முறைப்படி நீங்கள் உங்கள் Mother Board Model No, Manufactur Name,
Processor Type, Ram Capacity, Hard Disk Capacity போன்ற விபரங்களை
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களை எவரும் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றி
விட முடியாது.
நன்றி: மறுதாடி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum