தங்களின் மவுஸ் வேலை செய்ய மறுக்கிறதா! மவுஸ் இன்றி கணிணியை இயக்க
Mon Jan 27, 2014 7:44 pm
தங்களின் மவுஸ் வேலை செய்ய மறுக்கிறதா! நண்பர்களே, கவலை வேண்டாம் ஓர் தற்காலிக தீர்வு. தங்களின் கணினியில் மவுஸானது செயல் படவில்லை போன்ற பிரச்சனைகள் கண்டிப் பாக ஓர் சமயத்தில் நிகழும் நண் பர்களே! நமது கணினியில் நாம் கீ-போர்டை காட்டிலும் அதிகம் பயன்படுத்துவது மவுஸை தான். அப்படியிருக்கும்போது ஓர் அவசர காலத்தில் தங்களின் மவுஸ் ஆனது வேலை செய்யவில் லை என்றால் எப்படி இருக்கும் …இது மாதிரி நிகழும் இந்த பிரச்சனையை தற்காலிகமாக போக்க ஓர் வழி உள்ளது. தங்களின் கணி னி முறையில் சிறிய மாற்றங்க ளை மேற்கொள்வதன் மூலம் இந்த முறையை செயல்படுத்தலா ம். இதன் மூலம் தங்களின் கீ-போர்டினையே மவுஸ் ஆக பயன் படுத்தலாம். இந்த முறை STICKY KEYSஎன அழைக்கப்படும். இந்த முறையை தங்களின் கணினியில் செயல்படுத்த வேண்டு மா. முதலில் தாங்கள் செய்ய வேண்டியது.
- தங்களின் கீ-போர்டில் SHIFTகீயை 5முறை அழுத்துங்க ள். தொடர்ந்து,
- தற்போது தங்களின் விண்டோவில் S STICKY KEYSTI என்னும் ஓர் சிறிய திரை தோன்றும். அதில் SETTINGS என்பதைனை கிளிக் செய்யவும்.
- பின்னர் தோன்றும் திரையில்MOUSE என்பதைனை கிளிக் செய்யவும். உதவிக்கு மேலே உள்ள புகைபடத்தை காணவு ம்.
- பின்னர் USE MOUSE KEYS என்பதில் டிக் மார்க் அடையா ளத்தை ஏற்ப்படுத்தவும். பின்னர் APPLY—OK என்பதை தந்து வெளியேறவும்.
- தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முறை முடிந்தது.
இனி தங்களின் கீபோர்டினை எப்படி மவுஸ் ஆக பயன் படுத்துவது என காணலாம்.
- தங்களின் மவுஸ் கர்சர் மேலே நகர்த்த வேண்டும் என்றால், தங்களின் கீபோர்டில் வலதுகை ஓரமாக இருக்கு ம் நம்பர் பட்டன்களில் 8 என்பதை அழுத்தவும்.
- கீழே நகர்த்த வேண்டுமென்றால்-0
- இடதுகை (LEFT)ஓரமாக நகர்த்த வேண்டுமென்றால்-4
- வலதுகை(RIGHT) ஓரமாக நகர்த்த வேண்டு மென்றால்-6
மேலும் ஓர்செயலை OK OR SELECT செய்யவேண்டுமென்றா ல் 5 என்னும் கீயை அழுத்தவும். அதாவது தங்களின் மவுஸி ல் LEFT CLICK மேற்கொள்ளும்முறையை இது மேற்கொள் ளும். மேலும் மவுஸில்RIGHT CLICKமேற்கொள்ளும் முறை யை மேலே படத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள பட்டனை கீ போர்டில் பயன் படுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.
நன்றி: விதை 2 விருட்சம் 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum