கணிணியை பாதுகாக்க 7 வழிகள்
Thu Jul 24, 2014 6:42 pm
நண்பர்களே வீட்டு கரண்ட் தண்ணீர் பில் கட்டுவதற்கும் வங்கி கணக்குகளுக்கும் ஆன்லைன் வியாபாரத்துக்கும் இன்று கணினியை நம்பி வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் நாம் கணினியை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். அதற்கு 7 வழிகளை கீழே கொடுத்து உள்ளேன். இந்த 7 வழிகளை மேற்கொண்டால் முடிந்தவரை நம் கணினியை பாதுகப்பாக வைத்துக் கொள்ள இயலும்.
ஆன்டி-வைரஸ்
ஆன்டிவைரஸ் தொகுப்பு இல்லாத கணினியில் கண்ணை கட்டிக்கொண்டு ரோட்டில் இறங்குவதற்கு சமம். ஏன் என்றால் எந்த கோப்புகளைத் தரவிறக்கம் செய்தாலும் அல்லது ஃப்ளாஷ் ட்ரைவ் சிடி அல்லது டிவிடியிலிருந்து கோப்புகளை காபி செய்யும் ஒருமுறை ஆன்டி-வைரஸ் தொகுப்பு மூலம் சோதிப்பது மிகுந்த நலம்.
இலவச ஆன்டி-வைரஸ் தொகுப்புகள் சில கீழே
மால்வேர் தடுப்பான்
மால்வேர் என்பது உங்கள் கணினியில் தரவிறக்கம் செய்யும் மென்பொருளுடன் அமர்ந்து கொண்டு வரும். இது திடீரென்று ஒரு நாள் தானாக இயங்க ஆரம்பித்து உங்கள் கணினியில் வைரஸை வரவழைக்க வழி அமைத்துக் கொடுக்கும். இதை தடுக்க கீழே மால்வேர் தடுப்பான் தொகுப்பு கொடுத்து உள்ளேன்
ஸ்பைவேர் தடுப்பான்
ஸ்பைவேர் இதுவும் மால்வேர் போன்றதுதான். உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டு நீங்கள் செய்யும் வேலைகளை தன்னை படைத்தவனுக்கு அனுப்பும் அவன் அங்கு இருந்து கொண்டு உங்கள் வங்கி பாஸ்வேர்டுகளை திருடி உங்கள் அனுமதியின்றி உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். இது போன்ற பல வேலைகளை செய்யலாம். இதை தடுக்க கீழே ஸ்பைவேர் தடுப்பான் தொகுப்பு கொடுத்து உள்ளேன்.
பயர்வால்
இது உங்கள் கணினியில் அவசியமானது. உங்கள் விண்டோஸ் எக்ஸ்பியாக இருந்தால் அதிலேயே பயர்வால் உள்ளது. இருந்தாலும் இந்த பயர்வால் அதைவிட பயனுள்ளது. உங்களிடம் ஹார்டுவேர் பயர்வால் இருந்தால் கவலையே இல்லை. அதிலேயே அனைத்தையும் செய்து விடலாம். இல்லாதவர்களுக்காக பயர்வால் மென்பொருள் வடிவில் கீழே
ஸ்கிரிப்ட் தடுப்பான்
பயர்பாக்ஸ் பிரவுஸர் உபயோகிப்பவர்கள் இந்த ஆடு - ஆன் உபயோகப்படுத்தலாம். இதன் மூலம் ஸ்கிரிப்ட் வடிவில் வரும் வைரஸ் வகையாறாக்களை தடுக்கலாம்.
லாஸ்ட்பாஸ்
உங்கள் கணினியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாஸ்வேர்டுகள் வைத்திருப்பீர்கள் அதை அனைத்தையும் மனதில் நிறுத்துவது என்பது கஷ்டம்தான். அதற்கு உதவுகிறது இந்த மென்பொருள்.
வெப் ஆப் டிரஸ்ட்
இது ஒரு பயர்பாக்ஸ் ஆடு - ஆன் இதை பயர்பாக்ஸில் நிறுவுவதன் மூலம் நீங்கள் செல்லும் வலைத்தளம் நல்லதா கெட்டதா என்று கூறிவிடும். இதில் மூன்று வட்டங்கள்
வலைத்தளத்தில் நுழையலாம். - பச்சை வட்டம்
வலைத்தளத்தில் நுழைய யோசனை செய்யுங்கள் - மஞ்சள் வட்டம்
வலைத்தளத்தில் நுழையவே நுழையாதீர்கள் - சிகப்பு வட்டம்
நன்றி: அன்பைத்தேடி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum