கிறிஸ்தவ நகைச்சுவைகள் - 1
Tue Sep 10, 2013 9:22 pm
இரண்டு போதகர்கள் மரித்துவிடுகின்றனர். அவர்கள் இருவரை சொர்க்கத்தின் வாசல் வரை தேவதூதர்கள் கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர். வாசலின் முன்னால், அப்போஸ்தலர் பேதுரு நின்றுக்கொண்டு இருக்கிறார்.
பேதுரு: வருக வருக, தேவனுடையை ஊழியக்காரர்களே வருக வருக.
போதகர்கள்: பேதுருவைக் கண்டதும், ஆனந்தத்தில் மகிழ்கின்றனர்.
பேதுரு: ஒரு சின்ன விஷயம். உங்களை உள்ளே விடமுடியாததற்கு வருந்துகிறேன். இன்று தான் சொர்க்கத்தின் கம்ப்யூட்டர் பழுது அடைந்துவிட்டது.
முதல் போதகர்: இப்போது நாங்கள் என்ன செய்வது. எத்தனை நாட்கள் ஆகும், கம்ப்யூட்டர் சரியாவதற்கு?
பேதுரு: இதற்கு 7 நாட்கள் பிடிக்கும்.
இரண்டாவது போதகர்: அது வரை நாங்கள் என்ன செய்வது. வேறு ஏதாவது இடம் இருக்கின்றதா? நாங்கள் இந்த 7 நாட்கள் தங்குவதற்கு?
பேதுரு: உங்களை தங்கவைப்பதற்கு தகுதியான வேறு இடம் இங்கு இல்லை. நரகம் உள்ளது அங்கு உங்கள் கால்கள் கூட படக்கூடாது. நீங்கள் உலகத்தில் பரிசுத்தவானாக வாழ்ந்துள்ளீர்கள். எனவே, நரகத்தில் உங்களை அனுமதிக்கமுடியாது. காரணம் நரகத்தில் உள்ள கம்ப்யூட்டரில் உங்கள் பெயர் இல்லை. சொர்க்கத்தில் உள்ள கம்ப்யூட்டரில் மட்டும் தான் உங்கள் பெயர் உள்ளது.
முதல் போதகர்: சரி, இப்போது இதற்கு வழி தான் என்ன?
பேதுரு: இதற்கு ஒரு வழி உள்ளது. அதாவது தேவன் எனக்கு கட்டளையிட்டுள்ளார். உங்கள் இருவரையும் இந்த ஒரு வாரம் மீண்டும் பூமிக்கு அனுப்பிவிடுகிறேன். ஆனால், ஒரு நிபந்தனை!
இரண்டாவது போதகர்: அது என்ன?
பேதுரு: இந்த ஒரு வாரம் நீங்கள் பூமிக்கு செல்லும் போது, போதகர்களாக செல்லமுடியாது. போதகர் தவிர வேறு எந்த உருவம் கேட்டாலும், அதாவது, பறவை, மிருகம், பணக்காரனாக, ஏழையாக என்று எந்த உருவம் கேட்டாலும் அப்படி உங்களை அனுப்பிவிடுகிறேன்.
முதல் போதகர்: சரி, என்னை ஒரு கழுகாக மாற்றி அனுப்பிவிடுங்கள். நான் மலைகளில், காடுகளில் இந்த ஒரு வாரம் இயற்கை அழகில் கழித்துவிட்டு வருகிறேன்.
பேதுரு: சரி, அப்படியே ஆகட்டும்.
[ உடனே முதல் போதகர், கழுகாக மாறிவிடுகிறார், மலைகளில் உலாவ சென்று விட்டார்]
இரண்டாவது போதகர் : இந்த ஒரு வார காலகட்டத்தில் நான் செய்யும் நன்மைகள் கணக்கில் வருமா?
பேதுரு: இல்லை, கம்ப்யூட்டர் ரிப்பேர் இல்லையா. எனவே கணக்கில் வராது.
இரண்டாவது போதகர்: என்னை ஒரு பணக்காரனாகவும், நல்ல வாலிபனாகவும், அதாவது ஒரு அரசனைப்போல மாற்றிவிடும்.
பேதுரு: சரி அப்படியே ஆகட்டும்
[உடனே போதகர், நல்ல வாலிபனாக பணக்காரனாக, அரசனாக மாறிவிடுகிறார், பூமியில் தன் சிங்காசனத்தில் உட்கார்ந்துவிட்டார்]
[இந்த ஏழு நாட்களில் கழுகாக மாறிய முதல் போதகர், காடு, மலை என்று சுற்றிவிட்டு வருகிறார். இரண்டாவது போதகர், கம்ப்யூட்டர் ரிப்பேர் என்பதால், தகாத விதத்தில் அதிகமாக குடிப்பது, பெண்களோடு கும்மாளம் போடுவது என்று எல்லா பாவங்களையும் செய்துவிட்டு வருகிறார்]
பேதுரு: வருக வருக.
முதல் போதகர்: பேதுரு அவர்களே இந்த ஏழு நாட்கள் மிகவும் நன்றாக இருந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கம்ப்யூட்டர் சரி ஆகிவிட்டதா?
பேதுரு: கம்ப்யூட்டர் சரி ஆகிவிட்டது.
[பேதுரு அவர்கள் கம்ப்யூட்டரில் இவரின் பேரை தேடி பார்க்கிறார், அது தென்பட்டவுடன், சொர்க்க கதவு தானாக திறக்கிறது. உடனே அவர் உள்ளே நிழைகிறார். அவர் உள்ளே கால் வைத்த உடன் ஒரு கை வந்து அவர் தோல்பட்டையில் விழுகிறது. யார் என்று போதகர் பார்கிறார்!, ஆச்சரியம், "இயேசு தான் அவர்" என்பதை உடனே உணருகிறார். நண்பர்களைப் போல இருவரும் சந்தோஷமாக செல்கின்றனர்.]
இரண்டாவது போதகர்: என்னையும் உள்ளே அனுப்புங்களேன்.
பேதுரு: ஒரு நிமிடம் இருங்கள், உங்கள் பெயர் இந்த கம்ப்யூட்டரில் தென்படவில்லை. ஒரு வாரத்திற்கு முன்பாக இருந்தது. ஆனால், இப்போது இல்லை.
[பேதுரு எவ்வளவு தேடிப்பார்த்தாலும், அவர் பெயர் தென்படவில்லை. போதகரின் முக நாடி மாறுகிறது.]
இரண்டாவது போதகர்: என்ன சொல்கிறீர்கள் போதுருயாரே ? நல்லா தேடிப்பாருங்கள். Upper case and Lower case சரியாக கொடுத்தீர்களா?
பேதுரு: எல்லாம் தேடி பார்த்து ஆகிவிட்டது, தென்படவில்லை. ஒரு நிமிடம் இருங்கள்.
[பேதுரு அவர்கள் வேறு ஒரு கம்ப்யூட்டரில் உட்கார்ந்து அதில் தேடிப்பார்க்கிறார். அதில் இந்த இரண்டாவது போதகரின் பெயர் தென்படுகிறது.]
பேதுரு: கண்டுபிடித்தேன், கிடைத்துவிட்டது.
இரண்டாவது போதகர்: அப்பாடா கிடைத்ததே மிகவும் பயந்துபோயிட்டேன். சரி, என்னை விடுங்கள். நான் சொர்க்கத்தின் உள்ளே போகனும்.
பேதுரு: மன்னிக்கவும் போதகரே, உங்கள் பெயர் சொர்க்கத்தின் கம்ப்யூட்டரில் தென்படவில்லை. நரகத்தின் கம்ப்யூட்டரில் தென்பட்டது. எனவே, உங்கள் இடம் இது அல்ல, நரகம் தான்.
இரண்டாவது போதகர்: பேதுருயாரே! என்ன ? நீங்கள் தானே சொன்னீர்கள், இந்த சொர்க்கத்தின் கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிவிட்டது எனவே, இது வேலை செய்யாது என்று?
பேதுரு: உண்மை தான். நான் நரகத்தின் கம்ப்யூட்டர் ரிப்பேர் என்று சொல்லவில்லையே? சொர்க்கத்தின் கம்ப்யூட்டர் ரிப்பேர் எனவே, நல்ல காரியங்கள் பதிவு ஆகாது என்றுச் சொன்னேன். நரகத்தின் கம்ப்யூட்டர் ரிப்பேர் இல்லை, எனவே தீய செயல்கள் பதிவாகியுள்ளது. தீய செயல்கள் கணக்கில் வருமா என்று என்னிடம் கேட்டீரா நீர்?
இரண்டாவது போதகர் :! ?
"முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்"
நன்றி: மார்ஸ்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum