கடல் வாழ் உயிர்களை கொன்று குவிக்கும் புகுஷிமா அணுஉலைக் கழிவுகள்
Sun Sep 08, 2013 7:33 am
கடல் வாழ் உயிர்களை கொன்று குவிக்கும் புகுஷிமா அணுஉலைக் கழிவுகள். கூடங்குளம் அணுமின் நிலையம் பாடம் படிக்குமா ?
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் உள்ள புகுஷிமா அணுஉலை வெடித்தது. இதனால் அணுக்கதிர் வீச்சு காற்றில் வேகமாக பரவியது. பல லட்சம் மக்களை ஜப்பான் அரசு அந்நகரில் இருந்து வெளியேற்றியது. பின்பு அணுக்கசிவு கட்டுக்குள் வந்து விட்டது என்று ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனால் அணுக்கசிவை அவ்வளவு எளிதில் தடுக்க முடியாது என்பது தான் உண்மை.
அதை மெய்ப்பிக்கும் விதமாக புகுஷிமா கரையோரம் பல நூறு திமிங்கல மீன்கள் தற்போது இறந்து கரை ஒதுங்கி உள்ளன. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் , கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 219,000 டன் அணுஉலைக் கழிவுகள் புகுஷிமா அணு உலையில் இருந்து வெளியேறி கடலில் கலந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக தான் கடலில் வாழும் மிகப் பெரிய உயிரினமான திமிங்கலங்கள் இறக்க நேரிட்டுள்ளது. இந்த அணுக் கழிவுகளின் தாக்கம் இத்தோடு நின்று விடப் போவதில்லை. கடலில் பெரும் மாற்றத்தை இது உண்டு செய்யும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஜப்பானில் இந்த நிலை என்றால் கூடங்குளம் அணு உலை பற்றி சொல்லவே தேவையில்லை . இந்த உலையில் உள்ள பாகங்கள் அனைத்தும் தரம் தாழ்ந்தது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். மேலும் இங்கிருத்து வெளியாகும் அணுக் கழிவுகளை எங்கு கொட்டுவார்கள் என்பதை இது வரை அணுசக்திக் கழகம் சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியோ குமரிக்கடல் அணுக் கழிவுகளால் நிரம்பப் போவது மட்டும் உறுதி.
நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum