வளைகுடா வாழ் சகோதரர்களின் கவனத்திற்கு.....!!
Fri Jan 31, 2014 9:33 am
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் பணி புரியும் சகோதரர்களே.... இந்த நாடுகளில் பணி புரியும் வெளிநாட்டினருக்கு ஒரு போன் கால் வருகிறது.
அந்த போனில் தொடர்பு கொள்ள கூடியவர் முதலில் ஹிந்தியில் பேசுகிறார் ஹிந்தி தெரியாது என்று கூறினால் ஆங்கிலத்தில் பேசுகிறார். நாங்கள் தொலைபேசி அலுவலகத்திலிருந்து பேசுகிறோம், உங்களுடைய பெயர் இது தானே என்று நம்முடைய பெயரை சொல்லி கேட்பார்கள். ஆம் என்று சொன்னவுடன் நீங்கள் இன்டர்நேஷனல் வின்னர் ஆகிவீட்டீர்கள். உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது. உங்களுக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. முதல் பரிசு 2 லட்சம் ரியால் (இந்திய ரூபாயில் 30 லட்சம்) வெற்றி பெற்ற உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று ஆரம்பத்தில் கூறுகிறார்கள்.
அதன்பிறகு முதலாவதாக.... நாங்கள் ஒரு நம்பர் சொல்கிறோம் அந்த நம்பர் உங்களுடைய சிம் கார்டின் பின்புறத்தில் இருக்கிறதா என்று பாருங்கள் என்று கூறிவிட்டு சில நம்பர்களை சொல்வார்கள். நாமும் அந்த போனை Cut பண்ணிவிட்டு சிம்மை கழட்டி பார்த்தால் அவர் சொன்ன நம்பர் அப்படியே இருக்கும்.
இரண்டாவதாக.... மீண்டும் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டு நாங்கள் சொன்ன நம்பர் இருக்கிறதா என்று கேட்பார்கள். இருக்கிறது என்று நாம் சொன்னவுடன், தற்போது உங்களுடைய மொபைல் இன்பாக்ஸ்க்கு ஒரு Message வரும், அந்த Message ல் இரகசிய எண் இருக்கும். அதை யாரிடமும் சொல்லாதீர்கள் என்று சொல்வார்கள், அவர்கள் சொன்னது போல் ஒரு Message வரும், அதன் உள்ளே இரகசிய எண் இருக்கும். அதை நாம் குறித்து கொண்ட பின்... மூன்றாவதாக.... மீண்டும் நம்மை தொடர்பு கொண்டு இரகசிய எண்ணை கேட்பார்கள். நாமும் சொல்வோம், உங்களுக்கு பரிசு விழுந்து விட்டது.
உங்களுடைய பெயர் கவுண்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. உடனடியாக 300 ரியால் தங்கள் மொபைலுக்கு பணம் அனுப்புங்கள் என்பார்கள். பணம் அனுப்பிய பிறகு... உங்களுடைய பெயர் கவுண்டரில் மிகவும் நெருங்கி விட்டது, இன்னொரு 300 ரியால் அனுப்புங்கள் என்று சொல்லி அனுப்பிய பிறகு.... அந்த மொபைலை Switched off செய்து விடுகிறார்கள். அதாவது.... நவீன பணம் பறிக்கும் கும்பல் ஆன்லைன் மற்றும் தொலைதொடர்பு மூலம் தொடர்பு கொண்டு பரிசு விழுந்துள்ளது அப்படி, இப்படி என்று படம் காட்டி விட்டு அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இது பற்றி காவல்துறையை தொடர்பு கொண்டால்.... இந்த மாதிரி வழக்குகள் ஒரு நாளைக்கு 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் வருகிறது. எவனாவது இந்த காலத்தில் 2 ரியால் இலவசமாக கொடுப்பானா ? இதிலே 2 லட்சம் ரியால் என்றால் உடனே பல் இழித்து கொண்டு அந்த திருட்டு கும்பலுக்கு உங்களை யார் பணம் அனுப்ப சொல்கிறது என்று காவல்துறையினர் எதிர்கேள்வி கேட்கிறார்கள்.
மேலும் அவர்கள் சொல்வது போல் தொலைபேசி நிலையத்திலிருந்து அவர்களின் பெயர் பொருந்திய Message எப்படி நம்முடைய இன்பாக்ஸிற்கு வருகிறது என்று.... தொலைதொடர்பு துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திவரும் நமது நண்பரும், சமூக ஆர்வலருமான அஜீ அஜீஸ் அவர்களை தொடர்பு கொண்டு இது பற்றி விசாரிக்கையில்.... இந்திய ரூபாயில் வெறும் ஆயிரம் ரூபாய் இருந்தாலே நாம் விரும்பியவாறு பெயர் அமைத்து கொண்டு Message அனுப்ப முடியும் என்றார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum