பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கு போட்டியாக கோ ஆப்டெக்ஸ்!
Thu Sep 05, 2013 10:40 pm
பெரிய ஜவுளி நிறுவனங்களுக்கு போட்டியாக கோ ஆப்டெக்ஸ்!
கோ ஆப்டெக்ஸ் புதிய டிசைன் பட்டுச் சேலைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் 25 வகை சேலைகளை அது களத்தில் இறக்குகிறது. இந்த புதிய வகை சேலைகள் பெண்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அட்டகாசமாகவும் இருக்கிறது. பெரிய பெரிய ஜவுளி நிறுவனங்களின் நூதனமான டிசைன் போட்டியில் கோ ஆப்டெக்ஸும் இறங்கியிருப்பதால் கோ ஆப்டெக்ஸ் பட்டுச் சேலைகளுக்கு தனி பார்வை கிடைத்துள்ளது.
இந்த 25 வகை டிசைன்களில் ஒன்றுதான் கல்யாணப் பட்டுச் சேலை. அதாவது இந்த சேலையில் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணின் படத்தையும் சேர்த்து அச்சடித்துத் தருகிறது கோ ஆப்டெக்ஸ்.
கோவை மாவட்டம் சிறுமுகையில் உள்ள சொசைட்டி ஒன்றில் இது நெய்யப்படுகிறது. இந்த நூதன பட்டுச் சேலையின் விலை ரூ. 75,000 ஆகும். மூன்று வாரங்களாகுமாம் இந்த சேலையை நெய்வதற்கு.
இந்த சிறப்பான பட்டுச் சேலையின் வெற்றிக்குப் பின்னால் ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் ஒளிந்திருக்கிறார். இவர்தான் தற்போது கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆவார்.
மணமக்கள் உருவத்துடன் கூடிய சேலைக்கு ஆர்டர் தர விரும்புவோர், 04254 252 022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தமிழால் இணைவோம்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum