சின்ன வாத்துக்கு, பெரிய வாத்து யார்?
Sun Feb 01, 2015 11:49 pm
இன்று பெரும்பான்மையானவர்கள் கணினியிலேயே மூழ்கியிருக்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இதனால் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, பத்து நிமிடங்கள் கண்களை மூடியிருந்தால் கண்களுக்கு புத்துணர்வு கிடைக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதேபோல் இடையிடையே தேநீர் பருக எழுந்து போவது, ஒரு நடைபயிற்சியாக நமது உடலுக்கு புத்துணர்வு அளிக்கும்.
சரி, மூளைக்குப் புத்துணர்வு?
இதோ... வேலைப்பளுவினால் சோர்வான உங்கள் மூளைக்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய சில புதிர்கள் இங்கே. எங்கே விடைகளைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் (விடைகள் முடிவில்)!
1. ஒரு பெரிய வாத்தும், ஒரு சின்ன வாத்தும் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. சின்ன வாத்து பெரிய வாத்தின் மகன். ஆனால் பெரிய வாத்து சிறிய வாத்தின் தந்தையல்ல. அப்படியென்றால் பெரிய வாத்து யார்?
2. ஓர் அறையின் உள்ளே 3 பல்புகள். ஆனால், அவற்றின் சுவிட்சுகள் அறைக்கு வெளியே. மூடியிருக்கும் அறைக்குள் ஒரு முறைதான், சென்று வரலாம். எந்த சுவிட்ச் எந்த பல்பினுடையது என்று சொல்ல வேண்டும். சொல்லுங்கள் பார்ப்போம்!
3. ரவியின் தாய்க்கு ஐந்து மகன்கள். முதல் மகன் பெயர் ஜனவரி, இரண்டாவது மகன் பெயர் ஃபிப்ரவரி, மூன்றாவது மகன் பெயர் மார்ச், நான்காவது மகன் பெயர் ஏப்ரல், அப்படி என்றால் ஐந்தாவது மகன் பெயர் என்ன?
4. தமிழ்நாட்டில் வாழ்பவரை, சவுத் ஆப்பிரிக்காவில் புதைக்க அந்நாட்டு சட்டத்தில் இடம் இல்லையாம். ஏன் தெரியுமா?
5. சந்தானம் வேலை தேடி, ஓர் அலுவலகத்தில் இண்டர்வியூவுக்காகக் காத்திருந்தான். அவனது பெயரை கூப்பிட்டவுடன் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தவன், கால் தடுக்கி ஃபைல்களுடன் கீழே விழுந்தான். இண்டர்வியூவில் கேள்வி கேட்க அமர்ந்திருந்த அதிகாரிகளில் ஒருவர் கோபத்துடன், ‘சந்தானம், What is this?’ என்றார். அதற்கு சந்தானம் சொன்ன பதிலால், அதிகாரி கோபம் மறந்து சிரித்துக்கொண்டே ‘கம் இன்!’ என்றார்.
சந்தானம் சொன்ன பதில் என்வாக இருக்கும்?
6. அந்தக் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி திருட்டு நடக்கும். ஏரியாவின் பணக்காரரான மாதவன், கொள்ளையர்களுக்கு பயந்து வீட்டைச் சுற்றிலும் மின்சார வேலி அமைத்திருந்தார். அப்படி இருந்தும் திருடன் தன் கைவரிசையைக் காட்டிவிட்டான். எப்படி?
7. மன்னன் தன் அமைச்சர்களுள் ஒருவரை அழைத்து, தன்னுடைய படையில் மொத்தம் எத்தனை குதிரைகள் உள்ளன என எண்ணி வரச் சொன்னார். எண்ணி முடித்த அமைச்சர், ‘மொத்தம் சிக்ஸ்டி ஹெட்ஸ்’ என்றார். மற்றொரு அமைச்சரை அழைத்த மன்னர், குதிரைகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்க, மீண்டும் குதிரைகளை எண்ணி வரச்சொன்னார். இரண்டாம் அமைச்சர், ‘சிக்ஸ்டி ஃபோர் ஹெட்ஸ்’ என கணக்குச் சொன்னார்.
இரண்டுமே சரி என்றார் மன்னர்!
எப்படி?
1. பெரிய வாத்து, சின்ன வாத்தின் தந்தையல்ல, தாய்.
2. முதல் சுவிட்சை ஆன் செய்து, சிறிது நேரம் கழித்து ஆஃப் செய்ய வேண்டும். இரண்டாவது சிவிட்சை ஆன் செய்துவிட்டு அறைக்குள் செல்ல வேண்டும். அறையில் இருக்கும் பல்புகளில் எரிந்து கொண்டிருப்பது இரண்டாவது சுவிட்சுக்கான பல்பு. மற்ற இரண்டு பல்புகளில் எது சூடாக இருக்கிறதோ அது முதல் சுவிட்சுக்கான பல்பு. மீதமுள்ள பல்பு மூன்றாவது சுவிட்சுக்கானது.
3. ஐந்தாவது மகன் பெயர், ரவி.
4. வாழ்பவரை புதைக்க எந்த நாட்டுச் சட்டத்திலும் இடம் இல்லை.
5. சந்தானம் சொன்ன பதில், ‘This is a Pronoun’.
6. அன்று அந்த ஏரியாவில் மின்தடை.
7. முதல் அமைச்சர் சொன்னது 60 Heads. அதாவது 60 தலைகள். இரண்டாம் அமைச்சர் சொன்னது Sixty Foreheads. அதாவது 60 நெற்றிகள்.
என்ன... மைண்ட் ரெஃப்ரஷ் ஆகிவிட்டதா..? அப்படியெனில் வேலையைத் தொடர வேண்டியதுதானே!
- இந்துலேகா.சி

பதில்கள்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum