தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர...
Thu Sep 05, 2013 10:24 pm
தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர விரும்புவோர் தங்கள் விண்ணப்பங்களை அக்டோபர் 1ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு காவல் இளைஞர் படை என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் அடிப்படையில் சிறப்பு காவல் படையில் இளைஞர்கள் சேர்த்தல் குறித்த அறிவிப்பை காவல்துறை வெளியிட்டுள்ளது.
* சிறப்பு காவல் இளைஞர் படைக்கு ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
* இதர பிரிவை சேர்ந்தவர் எனில் 18 முதல் 25 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர் அல்லது பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), அல்லது மிகவும் பிற்படுத்தப்பட் டோர் எனில் 18 முதல் 27 வயது வரையும், எஸ்.சி மற்றும் அருந்ததியர், எஸ்.டி பிரிவினர் எனில் 18 முதல் 30 வயது வரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* மொத்த பணியிடங்கள் 10,500. முன்னாள் ராணுவத்தினர், மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், பிற பிரிவினருக்கான சிறப்பு சலுகை, ஒதுக்கீடு கிடையாது.
* தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.7500 வீதம் வழங்கப்படும். இதர படிகள் கிடையாது.
* தேர்வு செய்யப்படுபவர்கள், காவல்துறை வாகனங்களை இயக்குதல், அலுவலக கடிதங்களை பட்டு வாடா செய்தல், காவலர் குடியிருப்புகளை பராமரித் தல், காவல்துறைக்கு உதவி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
* கல்வி தகுதி, வயது தகுதியுடையவர்களுக்கு எழுத்து தேர்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். தேர்வுக்கு ரூ. 100 தேர்வுக்கட்டணமாக செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட எஸ்.பி அலுவலகங்களில் விண்ணப்பங்களை வரும் 30 ம் தேதி வரை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்டோபர் 1ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட எஸ்.பி அல்லது மாநகர காவல்துறை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
* விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத்தேர்வு நவம்பர் 10ல் நடத்தப்படும். www.tnusrb.tn.gov.in,www.tnpolice.gov.in ஆகிய இணையதளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நன்றி: என் இனிய ...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum