தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  Empty ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?

Sat Apr 04, 2015 8:52 pm
ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  11119711_876250279097736_7727150560001094371_n

( கீழேயுள்ள வசனங்களை கவனமாக படியுங்கள் )


இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொலை செய்ததோடு மட்டும் யூதர்களின் வேலை முடியவில்லை. இயேசு மரித்ததற்கு பிறகுதான் அவர்களின் தலைவலி அதிகமானது.

ஆண்டவர் இயேசு மரணித்ததை உறுதிப்படுத்திக்கொண்ட பிலாத்து இயேசுவின் சரீரத்தைக் கேட்ட அரிமத்தியா யோசேப்பு அவர்களிடம் . சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். இயேசு கல்லறையில் வைக்கப்பட்டார்.


---- மாற்கு 15:43 - 45. கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 


அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். 


நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான். ----
மத்தேயு 27:61 - 66 ---- ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: 


ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. 


ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். 


அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். 


அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள். -----
என்ன பிரதர் சொல்ல வருகிறீர்கள் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது ...இதோ...


1. ரோம ஆளுநர் பிலாத்து, இயேசு கிறிஸ்து மரணித்தது உண்மைதானா என்று நூற்றுக்கதிபதியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.


2. இயேசு கிறிஸ்து மரணித்ததை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் அரிமத்தியா யோசேப்பிடம் இயேசுவின் சரீரம் ஒப்படைக்கப்படுகிறது.


3. அன்றைய யூத வழக்கத்தின்படி மரித்த சடலத்தை தண்ணீரினால் கழுவி, சுகந்த வர்க்கமிட்டு, மெல்லிய சீலைகளால் சுற்றித்தான் அடக்கம் செய்வார்கள்.


4. இயேசுவின் மரித்த உடலை தண்ணீரினால் கழுவி சுத்தம் செய்தவர்கள், சுகந்த வர்க்கம் இட்டவர்கள், மெல்லிய சீலையினால் சுற்றியவர்களுக்கு நன்றாக தெரியும் . இவர் இயேசு தான் என்று. குரான் சொல்வது போல சிலுவையில் ஆள்மாறாட்டம் நடந்து இருந்தால், ஆள் மாறாட்டம் நடந்திருப்பதை வெளியே சொல்லியிருப்பார்கள்.


5. இயேசுவின் மரித்த சடலத்தைத்தான் அரிமத்தியா யோசேப்பு தன்னுடைய சொந்த கல்லறையில் வைக்க அனுமதி கொடுத்திருக்கிறார். குரான் சொல்வது போல சிலுவையில் ஆள்மாறாட்டம் நடந்து இருந்தால், எவனோ ஒருவனுக்காக தன்னுடைய கல்லறையை கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கமாட்டார்.


6. இயேசு சொன்னபடியே உயிர்த்தெழக்கூடாது என்பதற்காக இயேசுவை அடக்கம் பண்ணின கல்லறைக்கு முத்திரையும் வைக்கப்பட்டது. ரோம முத்திரையின் அதிகாரத்தை உடைக்கிற துணிச்சல் அந்த நாளிலே யாருக்கும் கிடையாது.


7. கல்லறைக்கு முத்திரை மட்டுமல்லாது இயேசுவின் சீடர்கள் இயேசுவின் சடலத்தை திருடிக்கொண்டுப் போகாதபடிக்கு ரோம போர்வீரர்களின் காவலும் வைக்கப்பட்டாயிற்று..



~~~ இத்தனைக் காவலையும் கடந்து என் இறைவன் இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுத்தார் !!! ..----



எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமெனவே

எழுந்தார் இறைவன்.


--- அன்புடன் உங்கள் சகோதரன் ---
பால் பிரபாகர் - பெங்களூர் - 4 / 4 / 2015

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  Empty Re: ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?

Sat Apr 04, 2015 8:59 pm
~~~III- இயேசு கிறிஸ்து அடக்கம் பண்ணப்பட்டார் -III~~~

1. இயேசு மரித்தார் என்று அறிந்து கொண்டுதான், அவரின் சரீரத்தை, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பிடம் ரோம ஆளுநர் பிலாத்து ஒப்புவித்தான் (மாற்15:43, 44,45; மத்27:58; யோ19:31-34).


2. இஸ்லாமியர்கள் சொல்லுகிறார்கள்: “இயேசுவை மரிக்கவிடாமலே அல்லா அவரை வானத்திற்கு எடுத்துக்கொண்டார்” என்று. கொல்லும்படியாகவே இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க, அவரை அல்லா எடுத்துக்கொண்டு போயிருந்தால் அந்த விபரம் ரோம சரித்திரத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டுமல்லவா? இல்லையே!

3. சரித்திரப் பூர்வமாகவும், வேதம் மூலமாகவும், இஸ்லாமியரின் கருத்துக்கு ஆதாரமே இல்லை. ஒரு சில இஸ்லாமியரின் கருத்து: “இயேசுவுக்குப் பதிலாக அவரைப்போன்ற இன்னொருவர் தான் சிலுவையிலறையப்பட்டார்” என்று பொய்ச்செய்தியை பரப்புவது காவல்துறையில்-அதுவும் விசேஷமாய் உளவு துறையில் பேர்போன ரோம சர்க்காருக்கு இந்த ஆதாரமில்லாத செய்தி மரியாதைக் குறைவைத்தான் உண்டாக்கும். மேலும், எந்த யூதர்கள் அவரை சிலுவையிலறைந்து கொல்ல நினைத்தார்களோ, அதே யூதர்களே பிலாத்துவின் ஒப்புதலோடு அவரின் கல்லறையை முத்திரைபோட்டு காவல் காத்தார்கள் (மத்27:62-66) என்பதை இன்றுவரை யூதர்கள் யாரும் மறுக்கவில்லை என்பதால் அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்பது உண்மை யிலும் உண்மையே! மேலும், நாத்திகர்களும் இயேசு மரித்தார் என்பதை ஏற்கிறார்கள்; மறுக்கவில்லை.

3. இயேசுவின் இறுதி மூச்சுவரைக்குமல்லாமல் மரித்த இயேசுவை சிலுவையில் இருந்து இறக்கும்வரைக்கும் யூதத்தலைவர்கள் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போயிருக்க வாய்ப்புக்கள் இல்லை.

4. இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் இல்லை என்று போதிக்கும் இஸ்லாமியரின் குரான் அத்தியாயம் 19:33ம் வசனத்தில், குழந்தை இயேசு பேசிய வார்த்தையைப் பாருங்கள்: "நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும்நாளிலும் என்மீது ஸலாம் இருக்கிறது''. இயேசுவே இப்படிச் சொன்னாரென்று குரானிலே எழுதி வைத்துவிட்டு, அதை மறைத்துப் பேசுவது எவ்வளவு பெரிய பாவம்? சிந்தியுங்கள்.

5. இயேசு அல்லாவின் வார்த்தை என்றும் (குரான் 3:39; 3:45; 4:71),
அவர் அல்லாவின் உயிர் என்றும் (குரான்4:171; 21:91;66:12) சொல்லியிருக்க இவர் நிச்சயமாய் தேவனென்றும், தான் சொன்னபடியே மரித்து, உயிர்த்தார் என்றும் கிறிஸ்தவர்களாகிய நாம் தெளிவாய் விளங்கிக்கொள்கிறோம். மரணத்தை, தேவனைத்தவிர வேறுயாரும் ஜெயிக்க முடியாது என்பது ஊரறிந்த உண்மை. ஆமென்.

6. மேலும், குரான் 4:159ல் "வேதமுடை யோரில் ஒவ்வொரு வரும், அவர் மரணிப்பதற்குமுன், அவரை நம்பாமல் இருக்கமாட்டார்கள்'' என்று உள்ளதால், வேதத்தில் யோவான் 5:39ல் சொன்னபடி வேத வாக்கியங்களை ஆராய் ந்து பார்ப்போர் ஒவ்வொருவரும் இயேசுவின் மரணத்திற்கு முன் கண்டிப்பாய் நம்புவார்கள் எனப் பொருள் தருகிறது. எனவே இயேசு மரித்தார் என்று குரானிலும் உள்ளதை நாம் அறிகிறோம்.

7. எந்த யூதர்கள் அவரை சிலுவையிலறைந்து கொல்ல நினைத்தார்களோ, அதே யூதர்களே பிலாத்துவின் ஒப்புதலோடு அவரின் கல்லறையை முத்திரைபோட்டு காவல் காத்தார்கள் (மத்27:62-66) என்பதை இன்றுவரை யூதர்கள் யாரும் மறுக்கவில்லை என்பதால் அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டார் என்பது உண்மை யிலும் உண்மையே! மேலும், நாத்திகர்களும் இயேசு மரித்தார் என்பதை ஏற்கிறார்கள்; மறுக்கவில்லை.

இறுதியாக, இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணிக்கவில்லை என்று சொல்வது சாத்தானின் உச்சக்கட்ட பொய் ஆகும்


இயேசு கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்து காலையில் இருந்து சிந்தித்துக்கொண்டிருக்கும்
உங்கள் சகோதரன் பால் பிரபாகர் - பெங்களூர்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  Empty Re: ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?

Sat Apr 04, 2015 9:05 pm
மேற்கண்ட கட்டுரைக்கு முகநூலில் வந்த பின்னூட்டம்:





  • ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  10325170_10201112015322571_44501454930350252_n

    Deva Sigamani சிலுவை மரணம் , ரத்தத்தினால் பாவமன்னிப்பு , உயிர்த்தெழுதல் போன்றவை கிறித்தவத்தின் ஆணிவேர் . 
    ஆனால் அவை இஸ்லாமியருக்கு எதிரானது. அவற்றை மொத்தமாக மறுதலித்து விட்டால் கிறித்தவம் என்ற ஆல மரத்தை மொத்தமாக தரையில் சாய்த்து விடலாம் என்பதே இஸ்லாத்தின் நோக்கம்.

    ஆகவே, இவற்றிற்கெல்லாம் ஆதாரமான யேசுவின் சிலுவை மரணத்தை இல்லை என்றால் அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிடும். 

    எனவே குர்ஆன் ......... ஈசா நபி மரணிக்க வில்லை அவர் அல்லாவினால் மேலே எடுத்துக் கொள்ளப்பட்டார் என்று கூசாமல் பொய் சொல்கிறது .

    பைபிளில் ஏசுவானவர் , 
    "நானே தேவனின் குமாரன் " என்றும் "ஆலயத்தை இடித்துவிட்டு மூன்றெ நாட்களில் கட்டுவேன்" என்று சொன்னது யூதர்களுக்கு தேவதூஷணமாகத் தெரிந்தது ஆகவே ஏசுவை குற்றம. சுமத்தி்  சிலுவையில் அறைய அவரை இழுத்து சென்றார்கள் .

    ஆனால்,,
    குரானில் ..... ஈசா நபி தன்னை அல்லாவின் குமாரன் என்று கூறவே இல்லை. மேலும் அவ்வாறு நீர் கூரினீரா என்று அல்லா ஈசா நபியிடம் க்யாமத் நாளின் கடைசியில் கேத்கும்போது அவர் இல்லை என்று மறுத்து , அவ்வாறு நான் சொல்லியிருந்தால், அது உமக்குத் தெரிந்திருக்கும் ,ஆகவே. நான் அப்படி ஒருபோதும் சொல்லவில்லை என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

    இப்படியிருக்கும் பட்சத்தில் , தவறே செய்யாத ஈசா நபியை சிலுவையில் அரைய கொண்டுபொக வேண்டிய அவசியம் ஏன்??? வாய்ப்பே இல்லை . பின்பு ஏன் ஈசாவை சிலுவையில் அரைய கொண்டுபொக வேண்டும்?? அவருக்குப் பதிலாக ஏன் வேறொருவரை சிலுவையில் அரைய வேண்டும். அவன் யார்??? அவன் பெயர் என்ன?? ஏசுவுக்குப் பதில் சிலுவையில் அரையப் பட்டவனல்லவா!!! அவனும் மிகவும் முக்கியம் தானே?? யார் அவன் அல்லா சொல்லவில்லையா???
    பொய் சொல்கிறது குரான் .

  • ஈசா நபிக்காக வெரொருவனை, அங்கே உடன் சென்ற எவருக்கும் தெரியாமல் மேலே ரகசியமாக அல்லா கொண்டுபொக வேண்டிய அவசியம் என்ன???
    யூதர்களைக் கண்டு பயமா?? என்ன ரகசியம் ?? சர்வ வல்லமையுள்ள "அல்லா " ஒன்று செய்தால் அது நன்மை பயக்க வேண்டும் அல்லவா?? இல்லையே!!! 
    யாருக்கும் தெரியாமல் ஈசா நபியை மேலே எடுத்துக்கொண்டு, வெரொருவனை சிலுவையில் அரைந்ததால் , அவரது சீடர்களும் , மற்றவர்களும் , ஈசா நபி சிலுவையில் அறையப்பட்டதாகவே நம்பினார்கள் , தொடர்ந்து ஈசாவுக்காக ஊழியம் செய்தார்கள் , ஏன் இன்றுவரையில் ஊழியம் நடைபெற்று வருகிறது .
    இன்றைய உலக மொத்த மக்கள் தொகையில் மூன்றில் கிட்டத்தட்ட இரண்டு பங்கு ஈசாவை தெய்வமாகக் கொண்ட கிறித்தவர்கள் . அவர்கள் அல்லாவுக்கு குர்ரான் படி எதிரானவர்கள் , பாவிகள் .......

    இங்கே தான் ஒன்றை பார்க்க வேண்டும் ...... 
    யாருக்கும் தெரியாமலே ஈசா நபியை மேலே எடுத்துக்கொண்டால் , உண்மை தெரியாமல் ஈசா நபியையே கடவுள் என்று இங்கே உள்ளவர்கள் நம்பி, ஊழியம் செய்து 2/3 பங்கு உலக மக்களை பாவத்தில் விழ வைத்துவிடுவார்கள், என்ற எதிர்கால உண்மை, எல்லாம் வல்ல அல்லாவிற்கு , தெரியாமல் போகுமோ???!!!!
    அப்படியென்றால், அல்லா தெரிந்தே இந்த தவற்றைச் செய்தாரா????!!!! 

    கிறித்தவத்தை அறிவுப்பூர்வமாக வஞ்சிக்க நினைத்து தாமே logic இல்லாமல் பொய் சொல்லி குழியில் விழுந்திருக்கிறது குரான்.

    தொடர்ச்சி....

    ஈசா நபி (ஏசு) ஒரு சாதாரண நபி என்றால் ..... கயாமத் நாளில் (உலக முடிவில் ) (வருகையில் ) அல்லா வராமல், முஹம்மது வராமல் "ஈசா நபியே" வருவார் என்று குர்ஆன் சொல்வது ஏன்???????








  • ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  10464274_743009112421854_362381084425966584_n

    Paul Prabhakar ///// 
    இப்படியிருக்கும் பட்சத்தில் , தவறே செய்யாத ஈசா நபியை சிலுவையில் அரைய கொண்டுபொக வேண்டிய அவசியம் ஏன்??? வாய்ப்பே இல்லை . பின்பு ஏன் ஈசாவை சிலுவையில் அரைய கொண்டுபொக வேண்டும்?? அவருக்குப் பதிலாக ஏன் வேறொருவரை சிலுவையில் அரைய வேண்டும். அவன் யார்??? அவன் பெயர் என்ன?? ஏசுவுக்குப் பதில் சிலுவையில் அரையப் பட்டவனல்லவா!!! அவனும் மிகவும் முக்கியம் தானே?? யார் அவன் அல்லா சொல்லவில்லையா???
    பொய் சொல்கிறது குரான் .///// உங்களுடைய கேள்விக்கு திருக்குரானிடம் பதில் கிடைக்காது.. தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி Bro. Deva Sigamani..







  • ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  10325170_10201112015322571_44501454930350252_n

    Deva Sigamani YES,, Brother, 
    நம் வேதத்தை குழப்ப வந்த ஒன்று நமக்கு பதிலா கொடுக்கப் போகிறது?? அதிலிருந்து பதிலை நான் எதிர்பார்க்கவும் இல்லை. 
    அங்கே சொல்லப் படுபவை தவறு என்று நம் வேதம் நமக்கு ஞானம் தந்திருக்கிறது அல்லவா bro.
    Thank you brother.

சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  Empty Re: ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?

Sun Apr 05, 2015 8:46 pm
சந்தேகப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு.
-----------------------
மரித்த இயேசு கிறிஸ்துவின் சடலத்தை அவருடைய சீடர்கள் திருட்டளவாக எடுத்துக்கொண்டு போய் அன்றைக்கு இருந்த Super Specialty Hospital ஒன்றில் வைத்து மயக்கத்தில் இருந்த இயேசுவை உயிர்த்து வரும்படி செய்துவிட்டார்களாம். இப்படி ஒருத்தர் பதிவு போட்டிருக்கான்.
---------------------------------
ஏன்ய்யா தம்பி, பிரேதத்தை தூக்கிக்கிட்டு போனவங்க அதைச் சுத்தியிருந்த சீலைத்துணிய மட்டும் ஏன் கழட்டிவச்சுட்டு போகணும் அதையும் சேர்த்து தானே எடுத்துக்கிட்டு போகணும். 
------------------------------
பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான். - லூக்கா 24:12
-----------------
பால் பிரபாகர் 
Sponsored content

ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?  Empty Re: ஒரு கல்லறைக்கு இத்தனை காவல் ஏன் ?

Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum