இத்தனை அடிகளும் என் இயேசுவுக்காக ...
Sat Feb 14, 2015 10:12 am
நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.- (நீதிமொழிகள் 14:32)
இங்கே காணப்படும் இரு சகோதிரர்கள் கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்று கொண்டதற்கு தண்டனை பெற்றுள்ளனர். முதலாவதாக உள்ளவர் பெயர் Amirreza . இவரின் சாட்சியை இங்கே பதிவு செய்கிறோம்.
என்னுடைய பெயர் Amirreza . ஈரான் நாட்டை சேர்ந்த கிறிஸ்தவன். இஸ்லாம் மதத்தில் இருந்த நான் இரண்டரை வருடங்களுக்கு முன் கிறிஸ்தவனாய் மாறினேன். 2014ம் ஆண்டில் கிறிஸ்துவை பற்றி கூறும் ஓர் வலைதளத்தை ஆரம்பித்தேன். இதில் முழுவதும் இயேசுவை மாத்திரமே பதிவு செய்தேன், அரசியலை பற்றி அல்ல. கடந்த செப்டம்பர் மாதத்தில் Basij யை சேர்ந்த இஸ்லாமியர்கள் என்னை தெருவில் வைத்து அடித்தனர்.
என்னை மறைவான இடத்திற்கு கடத்தி சென்று நான் பதிவு செய்திருந்த வலைத்தளத்தை இஸ்லாமிய வலைத்தளமாக மாற்ற வற்புறுத்தினர். நான் அவ்வாறு மாற்றின பிறகு என்னை விடுவித்தனர். இந்த கொடுமைகளால் மறைவான வாழ்க்கை வாழ தீர்மானித்து அந்த வலைத்தளத்தில் இயேசு கிறிஸ்துவை பற்றி தொடர்ந்து பதிவு செய்தேன். சில தினங்களில் என்னுடைய வலைத்தளம் நிறுத்தப்பட்டது. இதை பற்றின உண்மையை உங்கள் பதிவுகளில் இடுங்கள். இரானில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.
இப்படிப்பட்ட கொடுமைகளில் வாழும் ஈரான் கிறிஸ்தவர்களுக்காக ஜெபிப்போம். இது மட்டும் அல்ல கிறிஸ்தவர்களாய் மாறும் பலரும் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர். ஆனாலும் இதன் மத்தியில் பல இஸ்லாமியர்கள் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொண்டு அவருக்கு மகிமையாக ஊழியம் செய்து வருகின்றனர். நீங்கள் பார்க்கும் இன்னொரு படத்தில் இருப்பவர் சிரியா நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்.
இப்படி தேவனுக்காக பலரும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து மகிமை செலுத்தி வருகின்றனர்.
‘மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். - (யோவான் 12:24:25) என்று இயேசுகிறிஸ்து கூறினார். கோதுமை மணியாகிய ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், தங்கள் சுயத்திற்க்கு செத்தால், மிகுந்த பலனை கொடுப்பார்கள். சாகாவிட்டால் கோதுமை மணி தனியே இருப்பதுபோல்தான் எந்த பிரயோஜனமுமில்லாமல் இருப்பார்கள். தன் ஜீவனை சிநேகிகக்கிறவன் அதை இழந்து போவான், ஆனால் கர்த்தருக்கென்று வாழ்கிறவனோ, நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதோடு, மற்றவர்களுக்கும் பிரயோஜனமாயிருப்பான்.
சிலர் அடிக்கடி சொல்வார்கள், ‘நான் இரத்தசாட்சியாய் மரிக்க போகிறேன்’ என்று. முதலில் கிறிஸ்துவுக்கென்று வாழ்ந்து காட்டுங்கள், பின்னர் மரிப்பதை குறித்து யோசிக்கலாம். இந்நாட்களில் இந்தியாவில் அனேக மிஷனெரிகளும், ஊழியர்களும் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அநேக உபத்திரவங்களுக்கு ஊடாக சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கோதுமை மணிகளாக, நமது தேசத்திற்கென்று விதைக்கப்படுகிறார்கள். அது ஏற்ற நேரத்தில் முளைத்தெழும்பி, மிகுந்த பலனாக அநேகரை இரட்சிப்பிற்குள் நடத்த போகிறது. ஒவ்வொரு முறையும் ஒரு போதகரோ அல்லது ஊழியரோ தாக்கப்படும்போது அல்லது, கிறிஸ்துவுக்காக உயிரை இழக்க நேரிடும்போது நமது தேசம் சீக்கிரமாய் கிறிஸ்துவை அறிந்து கொள்ள போகிறது என்றே அர்த்தம். அந்த மாதிரி மிகுந்த உபத்திரவத்திறகுள் கடந்த செல்லும் ஒவ்வொரு ஊழியர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஜெபிப்பீர்களா?
கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum