சீக்கிரமே பேஸ்புக்கை விட்டு ஓட வேண்டி இருக்கும் போல .. .
Thu Aug 29, 2013 5:00 am
உண்மையை சொன்னா. இங்க வந்த பின்னாடி நம்ம மனநிலையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுது... உறவுகள் , நட்புகளை துறந்து இங்கே உட்கார்ந்து
எண்பது சதவீதம் நிரந்தரமற்ற நட்புகளுக்காக நிரந்தரமான நிஜ நட்புகள் நூறு சதத்தை இருபதா குறைத்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே உண்மை ..
மிக சாதரணமான எளிய மனநிலை கொண்டவனை கூட வாக்குவாதம் கொண்டவனாக மாற்றி விடும் வல்லமை இதற்க்கு உண்டு..
உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் வாழும் மனிதர் , போனில் கூட பேசி இராத ஒருவர் நம்மை திட்டினால் கோபம் வருகிறது..
அவர் நம்மை அன்பிரண்டு செய்தால் ரோசம் வருகிறது ..
நமக்கு அறியாத பெண்கள் எல்லாம் நம்மை தவிர மற்றவர்களிடம் நன்றாக பேசுகிறார்கள் என்கிற மனநிலை எல்லாரிடமும் ஏற்படுகிறது !
குடிப்பழக்கமே இல்லாதவனை குடித்தது போல பதிவு போட செய்கிறது..
பக்கத்து வீட்டு சாமியானா வாசலில் ஓரமாக பைக் ஓட்டி செல்லும் மனிதர் இங்கே வந்து யாரோ ஒருவருக்கு புகழஞ்சலி, இரங்கல் தெரிவிக்க வைக்கிறது !
கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் கண்டதையும் கிறுக்க வைக்கிறது..
உள்ளடி வேலைகள் செய்வது எப்படி என்று பழக்கப்படுத்துகிறது..
மனிதர்களின் நெற்றியில் கட்சிக்கொடியை பூசி பார்க்கும் கேடு கெட்ட வியாதி பீடிக்கிறது ..
ஆயிரம் வேலைகள் இருந்தாலும் அதை விட்டுவிட்டு இங்கே வந்து நோட்டமிட்டு செல்லும் கவனத்தடுமாற்றத்தை தருகிறது..
தெருவில் ஒழிக்க முடியாத சாதி வெறியை இங்கே ஒழிக்க கூக்குரல் இட வைக்கிறது..
மேடையில் நிற்பவரை திட்டினால் பொளந்து விடுவார்கள் என்கிற பயத்தை
இங்கே வீரமாக கன்வெர்ட் செய்து கொள்ள முடிகிறது..
போட்டோக்ராபர்களை உருவாக்குவதாக சொல்லி காக்கா போகும் கக்காவை போட பதிந்து ஷேர் செய்ய சொல்கிறது.
மனதில் இருக்கும் வன்மங்களுக்கு வடிகாலை கொடுத்து அதை இன்னொருவன் மனதில் இறக்கி விடுகிறது..
பேக் ஐ டிக்களை பார்க்கும் பார்வையை சந்தேகப்புத்தி ஆக்கி நிஜத்தை கூட சந்தேகிக்க வைக்கிறது ..
சில நல்ல நண்பர்களை தருகிறது..
பல போலி அன்பர்களை காண்பித்து கொடுக்கிறது..
ரத்தம் கேட்டால் பத்து பேரை மட்டும் பார்க்க வைக்கிறது..
சதையை காட்டினால் ஆயிரம் பேரை பார்க்க வைக்கிறது..
அங்கங்கே அத்தி பூத்தா போல நேரடியாக சந்திக்கும் பேஸ்புக் நட்புகளை தவிர எதுவுமே இங்கு நிரந்தரமில்லை என்று உணர்ந்த பிறகும்
உணர்ச்சிக்குவியலை குப்பையாக அள்ளி வீசுகிறது..
ஸ்ப்ளிட் பர்சனாளிட்டிகளை உருவாகும் பெரும் தொழிற்சாலையாக இயங்கி வருகிறது..
எல்லாவற்றுக்கும் ஒரு நியாயம் கற்பிக்கிறது !
எடுத்ததெல்லாம் அநியாயம் என்கிறது !!
என்னடா இழவு இது என எண்ணும் போது தான் அடுத்த பதிவு தோன்றுகிறது !!
// அப்படி தோன்றிய பதிவுதான் இது !! //
நன்றி: வேர்ல்டு வைல்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum