புகழ்ச்சி - வேத விளக்கம்
Tue Aug 27, 2013 9:18 pm
வேதத்தில் உங்களுக்கு பூவாவின் குமாரன் தோலா என்றால் யார்என்று தெரியுமா? நான் நினைக்கிறேன் 99.99 சதவீதம் பேருக்குதெரியாது. வேதத்திலே ஆயிரக்கணக்கான பெயர்கள்குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி மிகவும் அதிகமாக முக்கியப்படுத்திஎழுதியுள்ளது. நியாயாதிபதிகளின் புத்தகத்தில் 12 பேர் நியாயம் விசாரித்துள்ளார்கள்.ஆனால் அவர்களில் 6 பேர் குறித்து தான் அதிகமாக எழுதப்பட்டுள்ளது. ஏன் மற்ற ஆறுபேர் முக்கியமற்றவர்களா? இல்லை. அவர்களும் அநேக ஆண்டுகள் நியாயாதிபதியாகஆண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் செய்த அநேக காரியங்கள் எழுதப்படவில்லை,புகழப்பட வில்லை. பூவாவின் குமாரன் தோலா கிதியோனுக்கு பின் வந்த 5வதுநியாதிபதி. இவன் 23 வருடங்கள் இஸ்ரவேலை நியாயாதிபதியாக ஆண்டிருக்கின்றான். 22வருடத்தில் எத்தனையோ முறை அவன் ஜெபித்திருக்கலாம், வெற்றி பெற்றிருக்கலாம்,சத்துருக்களை முறியடித்திருக்கலாம். ஜனங்களுக்கு நன்மை செய்திருக்கலாம். ஆனால்அவனுக்கு கிடைத்தது வேதத்தில் 2 வசனங்கள்தான். நியாயாதிபதிகள் 10:1,2;
அபிமெலேக்குக்குப்பின்பு தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான் அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான். அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து பின்பு மரித்து சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான்.தோலா செய்த எந்த காரியமும் எழுதப்படவில்லை. ஆனால்வேதத்தில் சில சிறிய நபர்களையும் சிறிய செய்கைகளையும் மிகவும் முக்கியப்படுத்திஎழுதியிருக்கிறது. லூக்கா 19:30 ம் வசனத்தில் கழுதைகுட்டியை பற்றி எழுதியிருக்கிறது.எத்தனையோ கோவேறு கழுதைகள், குதிரைகள் இயேசுவுக்கு இருந்தும் அந்த குறிப்பிட்டகிராமத்து கழுதைகுட்டியை அவர் தெரிந்து கொண்டது, அது வேதத்தில் எழுதப்பட்டதுபெரிய காரியம்.
லூக்கா 21: 2,3,4 ம் வசனங்களில் ஒரு விதவை போட்ட இரண்டு காசு குறித்து இயேசுபாராட்டி பேசியிருக்கிறார். இயேசு வாழ்ந்த காலத்தில் ஏராளமானோர் உண்மையாய்தியாகமாய் அதிக காணிக்கை போட்டிருக்கலாம். ஏன் இந்த விதவையின் தியாகத்தைமிஞ்சி கூட சிலர் காணிக்கை செலுத்தியிருக்கலாம். ஆனால் இயேசு அந்த பெட்டியின்அருகில் வந்த போது இந்த விதவை வந்த படியினால் அவள் பெயர் வேதத்தில் இடம்பெற்று இன்றுவரை நம்மால் புகழப்படுகிறது. எல்லா பிரசங்கத்திலும் ஏழை விதவைவந்து விடுகிறார்கள்.
இயேசுவின் சீஷர்கள் 12 பேர், மற்றும் அவருடைய ஊழியத்தை செய்யும்படியாகஇயேசுவால் அனுப்பப்பட்டோர் 72 பேர், மற்றும்ம எத்தனையோ பெண்கள் இயேசுவுக்குஊழியம் செய்யவும், பொருளாதாரத்தால் தாங்கவும் செய்தார்கள். ஆனால் அநேகரைபற்றி சொல்லப்படவேயில்லை. ஏன் இயேசுவின் 12 சீஷர்களில் சிலருடைய பெயர் பெயர்பட்டியலில் மட்டும் தான் சொல்லப்பட்டுள்ளது.
இயேசுவின் பரமேறுதலுக்கு பின்பு எல்லா சீஷர்களும் கடினமாக ஊழியம் செய்தார்கள்.ஆனால் ஒரு சிலருடைய பெயர் மட்டுமே வேதத்தில் எழுதப்பட்டு நினைவு கூரப்படுகிறது.தோமா என்ற சீஷன் இந்தியாவுக்கு வந்து ஊழியம் செய்து அநேக அற்புதங்களைநடப்பித்து, ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி கிறிஸ்துவுக்காக மரித்தார். ஆனால்அப்போஸ்தலர்களின் நடபடிகளை எழுதின டாக்டர் லூக்கா தனது பேதுருவையும்பவுலையும் குறித்தே அதிகமாக எழுதியுள்ளார். தோமா விஷயத்தை அவர்கேள்விப்படவேயில்லை போலும்.
புகழ் தேவையா?
இன்னும் ஆயிரக்கணக்கான உதாரணங்கள் வேதத்திலிருந்து பார்க்கலாம். சிலர் செய்தகாரியங்கள் அதிகமாய் எழுதப்பட்டும் சிலர் செய்தவைகள் மறக்கப்பட்டும் இருக்கின்றன.சிலருக்கு இன்றுவரை புகழ். சிலருக்கு புகழ்ச்சியே கிடைக்கவில்லை. புகழ்ச்சிகிடைக்காதவர்களின் நிலை என்ன? அவர்கள் செய்தது வீணாகிப் போய்விட்டதா?
அரசியல்வாதிகள் 10 ரூபாய் ஒருவருக்கு கொடுக்கிறார்கள் என்றால் அதினிமித்தம்அவர்களுக்கு 1000 ரூபாய்க்கு சமமான புகழ்ச்சியை தேடிக்கொள்வார்கள். புகழ்ச்சிக்காகவேவாழ்கின்றனர். மற்ற பொது வாழ்க்கையிலிருக்கும் எல்லோருமே புகழ்ச்சியைஎதிர்பார்க்கின்றனர். ஏன் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரர்களில் 80 சதவீதம்பேர் புகழ்ச்சியை நாடி தேடுகின்றனர். அவர்கள் வார்த்தைகள் செய்கைகள் அனைத்தும்புகழ்ச்சியை எதிர்பார்த்தே இருக்கின்றது. சராசரி ஜனங்கள் அனைவருமே புகழ்ச்சியைவிரும்புவார்கள், கிடைத்தால் சந்தோஷப்பட்டுக்கொள்வார்கள். ஏன் உங்கள் முதலாளிஅல்லது மேலதிகாரி உங்களை பாராட்டி பேசினால் சந்தோஷப்பட மாட்டீர்களா?
ஆக உலகத்தில் வாழும் எல்லோருúம் புகழை விரும்புகிறவர்களாகத்தான் இருக்கிறோம்.இந்த புகழ்ச்சி சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு கிடைக்காது. ஆனால் ஒரு உண்மையைநான் உங்களுக்கு சொல்கிறேன். புகழ்ச்சி உங்களுக்கு வாழ்க்கையின் அடிப்படைத்தேவைஅல்ல. எனவே எல்லா காரியத்தையும் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்றகுறிக்கோளோடேயே செய்வதில் அர்த்தமே இல்லை. இப்படி புகழ்ச்சியையும்கனத்தையும் எதிர் பார்க்க ஆரம்பித்து விட்டீர்களென்றால் அநேக நேரங்களில்ஏமாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு புகழ்ச்சி கிடைக்கவில்லை என்பதற்காக நீங்கள்செய்த நற்கிரியை வீணாகி போய்விடவில்லை. வேதத்தில் நற்கிரியைகள் எழுதப்படாதசீஷர்கள் செய்த காரியங்கள் வீணாகவா போய்விட்டது? அவைகள் பரலோகத்தில்அவர்களுடைய கணக்கில் உள்ளன.
நாம் என்ன செய்ய வேண்டும்?
இயேசுவை பின்பற்றுங்கள்:
எந்த ஒரு காரியத்திலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம் வந்தால், உடனேநம் நினைவுக்கு வரவேண்டியது இயேசு வின் அடிச்சுவடுகள். எல்லா காரியங்களிலேயும்நாம் பின்பற்ற வேண்டியது இயேசுவின் வாழ்க்கை. மத்தேயு 8:4; மாற்கு 1:13; லூக் 5:14பகுதிகளில் இயேசு குஷ்டரோகியை சுத்தமாக்கினார். உடனே அவர் செய்தது என்ன?சுகமாக்கப்பட்டவனிடம் இதை நீ ஒருவருக்கும் சொல்லாதே என்று கட்டளையிட்டார்.குஷ்டரோகியை குணப்படுத்துவது இந்நாளின் குணப்படுத்த முடியாத எய்ட்ஸ், கேன்சர்வியாதிகளை சுகமாக்குவது போல. அதை குணமாக்கிய இயேசு, அந்த புகழைச்சொல்லியே அநேகரை அவர் பக்கம் இழுத்து இரட்சிப்புக்குள்ளே நடத்தியிருக்கலாம்.ஆனால் அவர் அதை செய்யவில்லை. இன்றைய நம்முடைய நடமுறைக்கு முற்றிலும்வித்தியாசமான காரியத்தை இயேசு செய்திருக்கிறார்.
நாம் ஏன் அதை பின்பற்றுவது இல்லை என்று தெரியவில்லை. நாம் செய்த நல்லகாரியங்கள், அற்புதங்கள் எல்லாவற்றையும் எவ்வளவு சொல்லி புகழ் தேட முடியுமோ,அவ்வளவு அதிகம் சொல்கிறோம். நான் ஜெபித்தேன், அப்படி நடந்தது. நான்உபவாசித்தேன் பிசாசு ஓடினது. நான் ஏழைகளுக்கு கொடுத்தேன். நான் ஊழியத்திற்குகொடுத்தேன். நான் சபைகளை கட்டினேன். நான் இதை சாதித்தேன். அதை சாதித்தேன்என்று நமக்கு நாமே பறைசாற்றிக் கொள்கிற உலகத்தில் வாழ்ந்து வருகின்றோம். புகழ்பாடுவதில் ஒருவருக்கு ஒருவர் போட்டி வேறு. செய்தவைகளையும்செய்யாதவைகளையும் மிகைப்படுத்தி சொல்லி தன்னை உயர்த்திக் கொள்கிறார்கள். ஏன்என்று கேட்டால், சாட்சி என்கிறார்கள். சாட்சி இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும்.சாட்சியை கேட்பவர்கள் மனித வழிபாடு பண்ணுகிறவர்களாக அல்ல, தேவனைமகிமைபடுத்துகிறவர்களாக மாற வேண்டும்.
மாற்கு 8:30; லூக்கா 9:21ல் பேதுரு கர்த்தராகிய கிறிஸ்து என்று அறிக்கையிட்ட போதுஅவனிடம் இதை யாருக்கும் சொல்லாதே என்று உறுதியாய் கட்டளையிட்டார். மாற்கு5:43; லூக்கா 8:56ல் மரித்த சிறுமியை உயிரோடு எழுப்பின போதும், மாற்கு 7:36ல்செவிடனை குணமாக்கிய போதும், மாற்கு 8:26ல் குருடனை குணமாக்கிய போதும்,மாற்கு 9:9ல் மறுரூபமலையில் மோசேயோடும் எலியாவோடும் பேசின போதும்இதையே கட்டளையிட்டார். எத்தனை சுயநலமில்லாத இயேசுகிறிஸ்து. இன்று ஒருதரிசனத்தை பார்த்துவிட்டு அதை எப்படியெல்லாம் சொல்லி புகழ் தேடமுடியுமோஅவ்வளவு செய்கிறார்கள்.
இயேசு பிரபலமாயிருக்க விரும்பவேயில்லை. பெரிய ஹீரோவாக மாற வேண்டும் என்றஎண்ணமும் நோக்கமும் அவருக்கு இல்லை. யோவான் 7:3,4 வாசித்து பாருங்கள்.பிரபலமாயிருக்க விரும்புகிற ஒருவனும் இப்படிப்பட்ட கிரியைகளை அந்தரங்கத்திலேசெய்ய மாட்டான். இயேசு அற்புதங்களை அந்தரங்கத்திலே செய்துவிட்டு, சத்தியத்தைவெளியிலே பிரசங்கித்தார். எதனையும் பிரபலமாகும்படி செய்கிறவன் இயேசுவின்சீஷன் அல்ல. பெயர் பிரஸ்தாபத்திற்காக எதையும் செய்யாமல், அந்தரங்கத்திலேபார்க்கிற பிதாவுக்காக காரியங்களை சாதியுங்கள். புகழை ஒரு போதும்எதிர்பார்க்காதிருங்கள். புகழ்ச்சிக்காகவே வாழாதிருங்கள். உண்மை வாழ்க்கை வாழுங்கள்.
2. பரலோகத்தில் கனம் சேருங்கள்:
மத்தேயு 6ம் அதிகாரத்தில் இயேசு இரண்டு காரியத்தை சுட்டிக்காட்டுகிறார். ஒன்று தர்மம்செய்வது, இன்னொன்று ஜெபம். இரண்டையும் மற்றவர்கள் பார்க்கும்படி செய்து புகழ்தேடுவதை இயேசு கடிந்து கொள்கிறார். மற்றவர்கள் பார்க்க வேண்டும், நம்மை குறித்துஉயர்ந்த எண்ணம் கொள்ள வேண்டும் என்று எண்ணி யாருக்கும் உதவி செய்யாதீர்கள்.பின், ஆவிக்குரிய காரியங்களான ஜெபம், வேதவாசிப்பு, உபவாசம், பிரதிஷ்டைகள்ஆகியவற்றை காட்டி பரிதாபத்தை சம்பாதிக்காதிருங்கள், பெருமை பாராட்டாதிருங்கள்.கர்த்தருக்கென்று தாழ்மையுடன் எடுக்கின்ற பிரதிஷ்டைகள் இன்று பெருமையின்அடையாளங்களாக மாறி வருகின்றன. வெள்ளை ஜிப்பா, வெள்ளை சேலை போடுவதுதாழ்மைக்காகதான் தவிர பெருமைக்கல்ல, இது போல் அநேக பிரதிஷ்டைகள் தவறானநோக்கத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
மத்தேயு 6:1,5 வசனங்களை வாசித்து பாருங்கள். பூலோகத்தில் கனமும் புகழும்சேர்த்தீர்களென்றால் பரலோகத்தில் ஆண்டிதான். பரலோகத்தை குறித்தநம்பிக்கையில்லாதவர்கள் தான் பூலோகத்தில் புகழ்ச்சியை நாடி ஓடுவார்கள்.
3. உங்கள் ஓட்டத்தை ஓடுங்கள்
1 கொரி 3:6ன் படி அவரவருக்கு ஒவ்வொரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது.அவரவருக்கு தேவன் அளித்த கிருபையின்படியும் வரத்தின்படியும் நாம் நம்முடையவேலையை செய்யவேண்டும். தேவன் படைத்த இயற்கை ஒவ்வொன்றும் தன்தன்வேலையை எந்த எதிர்பார்ப்பின்றி பொறுமையாக செய்கின்றது. வேரானது தான்வெளியில் வந்து பெருமை பாராட்ட வேண்டும் என்று எண்ணுமானால் அதன் நிலைஎன்ன? அந்த மரத்தின் நிலை என்ன? உங்களுடைய வேலை அல்லது ஊழியம் மக்கள்வெளியில் பார்க்கமுடியாத படி சிறிய வேலையாயிருக்குமானால் கவலைப்படாமல்உற்சாகமாய் செய்யுங்கள். உங்கள் வேலையை அந்தரங்கத்தில் பார்க்கிற பிதாவெளியரங்கமாய் பலனளிப்பார். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
நன்றி: ஜீசஸ் லவ்ஸ் இண்டியா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum