தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
யுத்தம் - வேத விளக்கம் Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

யுத்தம் - வேத விளக்கம் Empty யுத்தம் - வேத விளக்கம்

Tue Aug 27, 2013 9:19 pm
அன்பு சகோதரிகளேயுத்தத்தில் வல்லவரான இயேசு கிறிஸ்துவின்நாமத்தில் வாழ்த்துக்கள்யுத்தம்போர்க்களம் என்றாலேஆண்கள்தானே செல்ல வேண்டும்யுத்ததிற்கும் பெண்களுக்கும் என்னசம்பந்தம் என்று நினைக்கிறீர்களாஒவ்வொரு குடும்பத்திலும்பெண்களுக்கு வரும் பிரச்சினைகள்போராட்டங்களை அவர்கள் என் தலையெழுத்து,பெண்ணாக பிறந்ததால் நான் அனுபவிக்க வேண்டிய தலை விதி என்று தங்களைதாங்களே நொந்து கொள்கிறார்கள்இந்த பிரச்சனைகளை உங்கள் தலைவிதியாகஎண்ணாமல் உங்களுக்கு விரோதமான யுத்தமாக எண்ணி போராடினீர்களென்றால்நிச்சயம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
போர்களத்தில் போராடுபவர்கள் வீராங்கனைகள்கோழைகள் அல்லநீங்கள்கோழைகளென்றால் அழுவீர்கள்யுத்த வீராங்கனைகளென்றால் போராடி ஜெயிப்பீர்கள்.சமீபத்தில் ஒரு சகோதரியிடம் பேசிக் கொண்டிருந்தேன்அவர்கள் தங்கள் வாழ்க்கையில்ஏற்பட்ட பலவிதமான பிரச்சனைகளை எண்ணி நொந்து போய்என் வாழ்க்கை தான்இப்படி ஆனதுஎன் மகளுடைய வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கவேண்டும் என்றுஜெபிக்கச் சொன்னார்கள்அவர்களுடைய விருப்பம் நல்லது தான்ஆனால் வேதம்சொல்கிறதுஉலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டுஉங்களுக்கு ஒருயுத்தமென்றால் உங்கள் மகளுக்கு வேறொரு யுத்தம்அவரவர் அவரவர் யுத்தத்தைபோராடி ஜெயிக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம்இன்று நீங்கள் மனம் சோராமல் உங்கள்யுத்தத்தில் ஜெயம் பெறுவீர்களென்றால் நாளை அது உங்கள் பிள்ளையின்வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்.
எனவே உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை பாடுகள்தலைவிதி என்றுசொல்லாதீர்கள்சொன்னால் சோர்வும் கவலையும்தான் உங்களை மேற்கொள்ளும்என்வாழ்க்கையில் இந்த காரியம் எனக்கு ஒரு யுத்தம்அதில் போராடும் வீராங்கினை நான்.நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று மனதை எப்போதும் தைரியமாக வைத்திருங்கள்.யுத்தத்தை அனுமதித்த தேவன் அதை ஜெயிக்க திராணியையும் தருவார்.
ஆயுதமில்லாமல் யுத்தம் பண்ண முடியாதுஅது போல் ஆவிக்குரியகருவிகளில்லாமல் ஆவிக்குரிய யுத்தம் செய்யவும் முடியாதுஉங்களுக்குமூன்றுவிதமான சத்துருவை அழிக்கும் யுத்த ஆயுதங்களை அறிமுகம் செய்கிறேன்.அதைக் கொண்டு யுத்தம் செய்யுங்கள் நிச்சயம் வெற்றி உங்களுக்குத்தான்.
1. முடங்கிய முழங்கால்
மூளை அறிவுகளால் சாதிக்கமுடியாத பல காரியங்களை முழங்கால்கள் சாதிக்கும் என்றுஒரு தேவ மனிதன் சொல்கிறார்ஆம் சகோதரிகளேஇது 100 சதவீதம் உண்மை என்பதைஎன் வாழ்க்கையில் ருசித்திருக்கிறேன்நான் இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் எனக்குஅதிகமாக முழங்காலில் நின்று ஜெபிக்கும் பழக்கம் இல்லை. 5 நிமிடம் முழங்காலில்நின்றாலே மிகவும் வலிக்கும்உடனே நான் உட்கார்ந்து விடுவேன்ஒரு நாள் என்அம்மாவிற்கு திடீரென்று பயங்கர வயிற்று வலி வந்ததுமருத்துவரிடம் சென்ற போதுஉங்கள் கர்ப்பப் பையில் பெரிய கட்டி இருக்கிறது என்றும்சில காரணங்களால் அதைஆப்ரேசன் செய்வதும் மிகவும் கடினம் என்றும் சொல்லிவிட்டார்கள்நிறையடாக்டர்களிடம் சென்றோம் எல்லோரும் கைவிரித்து விட்டார்கள்.
மிகவும் கலங்கிய நிலையில் எங்கள் குடும்பம் காணப்பட்டதுஅன்று என்றும் முடங்காதஎன் முழங்கால் முடங்கியதுஅறைக்குள் சென்று 1 மணி நேரம் நேர் முழங்காலில் நின்றுஜெபித்தேன்வாழ்க்கையிலேயே முதல் முறையாக 1 மணி நேரம் முழங்காலில் நின்றுஜெபித்திருக்கின்றேன்ஜெபித்து முடிக்கும் போது என் முழங்காலிலும் குறுக்கிலும்இருந்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும்ஆனால் நடந்தது என்னஎன் முழங்கால்ஜெபம் அற்புதத்தை தேவனிடம் பெற்றுத் தந்ததுஅன்று மாலையே கர்த்தர் ஆப்ரேசன்பண்ண ஒரு டாக்டரை காண்பித்தார்எந்த ஒரு சிக்கலுமின்றி ரொம்ப எளிதாக அந்தஆப்ரேசன் நடந்து முடிந்ததுநல்ல சுகமடைந்து சீக்கிரத்தில் வீடு திரும்பினார்கள்இப்போசொல்லுங்கள் மூளை அறிவு சாதிக்குமாமுழங்கால் சாதிக்குமா?
முழங்கால் போடுவதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும்சிலர்சபையில் மட்டும் முழங்கால் போடுவார்கள்சிலர் வீட்டில் மட்டும் முழங்கால்போடுவார்கள்சிலர் உட்கார்ந்தால் தான் அதிக நேரம் ஜெபிக்கமுடியும் என்றுசொல்வார்கள்சிலர் அரை முழங்கால்கால் முழங்கால்முக்கால் முழங்கால் என்று மாறிமாறி ஜெபிப்பார்கள்நான் உங்களுக்கு ஒரு இரகசியத்தை சொல்லட்டும் நீங்கள்முழங்காலில் நிற்பதற்கு உங்கள் முழங்காலை விட உங்கள் மனதிற்கு தான் அதிக பலம்வேண்டும்ஜெபிக்கச் செல்லும் போது நீங்கள் உங்கள் சிந்தையில் இரண்டு காரியத்தைகொண்டு வந்தால் உங்கள் முழங்கால் மணிக்கணக்காக முடங்கும். 1. தேவனின் கல்வாரிஅன்பு, 2. நீங்கள் சாதிக்க விரும்பும் பிரச்சினைஇவை இரண்டும் இருந்தால் உங்கள்மனதில் உட்கார்ந்து ஜெபிக்கலாம் என்ற எண்ணம் இருக்கவே இருக்காது.
மாற்கு 1:40 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்துஅவர் முன்பாகமுழங்கால்படியிட்டுஉமக்குச் சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றுவேண்டிக் கொண்டான்இயேசு மனதுருகிகையை நீட்டிஅவனைத் தொட்டுஎனக்குசித்தமுண்டுசுத்தமாகு என்றார்.
அந்த குஷ்டரோகியை பாருங்கள்தன் வலியிலும் வேதனையிலும் முழங்கால்படியிட்டுதேவனின் மனதுருக்கத்தை பெற்றுக் கொண்டான்முழங்காலின் போது உங்களுடைய 1.தியாகம், 2. தவிப்பு, 3. தாழ்மை மூன்றும் தேவனை அசைத்து மனதுருகச் செய்து உங்கள்வாழ்க்கையில் ஜெயத்தை கொடுக்கும்.

உங்களுக்கு முழங்காலில் பெலவீனம் என்றால் பரவாயில்லைபேட்ரிக் ஜாஷ்வா என்றதேவமனிதன் தனது 82ம் வயதில் இன்றும் மூன்றுநான்கு மணிநேரங்கள் தொடர்ந்துமுழங்காலில் நின்று ஜெபிக்கிறார் என்று பாஸ்டர் எல்ஜோசப் கூறியது நினைவுக்குவருகின்றது. 82 வயது மனிதருக்கு இல்லாத பெலவீனமா நமக்கு இருக்கப்போகிறது.எல்லாமே பழக்கம் தான்முழங்கால் பழக்கத்தை பழகுவோம்யுத்தத்தில் வெற்றிசிறப்போம்.
2. விசுவாசப் பார்வை:
எபிரெயர் 11:1; விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறதுகண்பார்வை இழந்த குருடர்கள் நிச்சயம்போர்க்களத்தில் யுத்தம் செய்ய முடியாதுஅது போல உங்கள் வாழ்க்கை என்னும்போர்க்களத்தில் விசுவாசப் பார்வை இல்லாமல் நிச்சயம் யுத்தம் செய்யவே முடியாது.ஒரு வாலிப சகோதரிக்கு உடல் நிலை சரியில்லாமல் டாக்டர்கள் கைவிட்ட நிலையில்அந்த சகோதரியின் தாயார் என் கணவரை ஜெபிக்க அழைத்திருந்தார்கள்அந்த சகோதரிபெலவீனத்தால் அகோரமாய் தோற்றமளித்தார்களாம்பாஸ்டர் ஜெபிப்பதற்கு முன்பாகஅந்த சகோதரியின் தாயாரிடம் படுத்த படுக்கையாயிருக்கும் உங்கள் மகள் வளர்ந்து,நன்கு படித்து திருமண வயதை எட்டிய வாலிப மகளாக உங்கள் விசுவாசப்பார்வையில்பார்த்து இயேசுவுக்கு நன்றி சொல்லுங்கள் என்று சொன்னார்களாம்என்ன ஆச்சர்யம்,அடுத்த சில வாரங்களில் அந்த வாலிப சகோதரி நன்றாக சுகமாகி எழுந்து நடந்து சபைக்குவந்து விட்டார்கள்.
உன் விசுவாசத்தின் படியே உனக்கு ஆகக்கடவது என்ற வசனத்தின் படி விசுவாசப்பார்வை உள்ளவர்கள் அதனை சுதந்தரித்துக் கொள்வார்கள்விசுவாசப் பார்வைஇல்லையென்றால் விசுவாச ஜெபமும் வராதுஜெபம் இல்லையேல் ஜெயமில்லை.உங்கள் வாழ்க்கையில் சத்துரு கொண்டு வரும் பிரச்சனைகளை விசுவாச பார்வையில்பாருங்கள். 50 சதவீதம் நீங்கள் ஜெயமெடுத்து விட்டீர்கள்.
இன்று இந்த விசுவாச பார்வையில்லாமல் அநேக பெண்கள் குருடர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்பொதுவாக குருடர்கள் ஒரு இடத்தை கண்டுபிடிக்கவேண்டியிருந்தால் தானாய் அதை பார்க்கமுடியாததால் மற்றவர்களுடைய உதவியைநாடுவார்கள்வழி தெரிந்தவர்கள் சரியான வழியை காட்டுவார்கள்வழி தெரியாதவர்கள்நம்மை தவறான வழியைகாட்டி குழப்பி விடுவார்கள்உங்கள் பிரச்சினையை பக்கத்துவீட்டு அக்காவிடமும் மாடிவீட்டு அக்காவிடமும் பேசினால்பிரச்சினை 10 மடங்குஅதிகமாகுமே தவிர ஒரு நாளும் தீராதுஜெபத்துடன் விசுவாசப் பார்வையில் பாருங்கள்.நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாய் கிரியை செய்கிற கர்த்தர் நிச்சயம்யுத்தத்தில் வெற்றியைத்தருவார்உங்கள் கனவை நனவாக்குவார்.
3. துதிக்கும் இருதயம்:
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்முறுமுறுத்தால் திரும்பி வருவான்என்று தந்தைபெர்கமான்ஸ் மிகவும் அழகாக பாடியுள்ளார்கள்சாத்தான் விரும்பி வாசம் பண்ணும்இடம் முறுமுறுக்கும்ம இருதயம்இந்த முறுமுறுத்தல் புலம்பலாக மாறும்புலம்பல்கண்ணீராகும்இந்த கண்ணீர் தான் அநேக பெண்களின் கண்களில் வடிந்துகொண்டிருக்கிறதுதேவ சமுகத்தை தவிர மற்ற எந்த இடத்திலெல்லாம் நீங்கள் கண்ணீர்வடிக்கிறீர்களோஅது சாத்தானுக்கு கொடுக்கும் பரிசுவெற்றிபவுலும் சீலாவும்சிறைச்சாலையில் துதித்தார்கள்அப் 16:25,26; அவர்கள் சரீரத்தில் இருந்த வேதனைநெருக்கம் எதையும் சிந்திக்காமல் அவர்கள் கர்த்தரை மாத்திரம் சிந்தித்தபடியினால்அவர்களுக்கு துதி வந்ததுதுதி வந்தபின் என்ன வந்ததுபூமியதிர்ச்சி வந்ததுஉடனேகட்டுகள் உடைந்தனவிடுதலை பெற்றார்கள்.
உங்கள் கட்டுகளை உடைக்க துதிக்க ஆரம்;பியுங்கள்இஸ்ரவேலரைப் போல்முறுமுறுத்தால் கர்த்தரிடமிருந்து இரக்கத்திற்கு பதிலாக கோபத்தையே பெற்றுக் கொள்ளநேரிடும்குழப்பத்தின் நேரத்தில் பாட்டு புத்தகத்தை எடுத்து 10 பாடல்களை விடாமல்பாடுங்கள்எரிகோ கோட்டைகள் தானாய் விழும்எந்த ஒரு முயற்சியும் தேவையில்லை.
மூன்று ஆயுதங்களை பார்த்துவிட்டோம்மூன்றையும் கையில் எடுத்து யுத்தம் பண்ணஆரம்பியுங்கள்இதில் எந்த ஒன்றை விட்டாலும் அந்த வழியாய் எதிரி நம்மை தாக்கவருவான்மூன்றையும் சேர்த்து யுத்தம் பண்ணினால் பிசாசை இவை சாக வைக்கும்உங்களை வாழ வைக்கும்எந்த பிரச்சினையும் உங்களை வீழ்த்த வரவில்லைஉங்களைஉயர்த்த வந்திருக்கிறது என்று எண்ணி அதனோடு யுத்தம் பண்ணுங்கள்உயர்வைகாணுங்கள்சமாதானத்துடன் வாழுங்கள்கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.


நன்றி: ஜீசஸ் லவ்ஸ் இண்டியா
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum