தேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா?..
Fri Aug 23, 2013 7:00 am
சுவரில் தொங்குகின்ற அல்லது புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள ஒரு வரைபடத்தினைப் பாருங்கள்.
அந்த வரைபடத்தில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே காட்டப்பட்டிருக்கும்.
தேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா?.......
இந்த செயற்பாட்டுக்கு எந்தவிதமான விஞ்ஞானக் காரணங்களும் கிடையாது.
உலகில் தேசப்படங்களினை வரையத் தொடங்கிய காலத்திலிருந்து இந்த நடைமுறையே தொடர்ந்து வருவதனால் அதனையே நாம் இன்றுவரையும் பின்பற்றி வருகின்றோம்.
உலகில் முதன்முதலில் தேசப்படத்தினை வரைந்தவர் புராதன எகிப்து நாட்டினைச் சேர்ந்த விஞ்ஞானி தொலமி ஆவார்.
உலகத்தின் மையத்தில் எகிப்து தேசம் அமைந்திருப்பதாக தொலமி நம்பிக்கை கொண்டிருந்தார்.
அந்த காலப்பகுதியில் எகிப்து தேசமானது தனக்கு வடபுறத்தே அமைந்திருந்த மத்திய தரைக்கடல் நாடுகளுடனும், கிரேக்கத்துடனும் மிகச்சிறந்த நல்லுறவினைக் கொண்டிருந்தது.
இதன் காரணத்தினால் தொலமி, தனது தேசப்படத்தில் கிரேக்கம் & மத்திய தரைக்கடல் நாடுகளை மேற்புறத்தில் குறித்துக்காட்டினார்.
தொலமி, தான் வரைந்த தேசப்படத்தில் வடக்கு திசையினை மேற்புறத்திலேயே குறித்துக் காட்டினார்.
இதனாலேயே தேசப்படங்களில் வடக்கு திசையினை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படும் போக்கு இன்றுவரையும் தொடர்ந்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
புராதன யுத்தங்கள் நடைபெற்ற காலகட்டங்களில் சில இராணுவ அதிகாரிகள், கிழக்கு திசையினை மேற்புறத்தில் குறித்தே வரைபடங்களினை வரைந்தனர்.
ஆனாலும் இந்த நடைமுறை குறிப்பிட்ட சில காலங்களுக்கே நிலைத்திருந்ததுடன், இந்தப் போக்கு உலகளாவியரீதியில் ஒருபோதும் பிரபல்யம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..
நன்றி..தமிழ் மணம் தளம்.,
உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
அறிந்து கொள்வோம்..
- mediltaதலைமை நடத்துனர்
- Posts : 82
Join date : 24/12/2012
Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
Re: தேசப்படங்களில் வடக்கு திசை எப்போதும் மேற்புறத்திலேயே குறிப்பிடப்படுவது ஏன் தெரியுமா?..
Fri Aug 23, 2013 11:34 pm
மிக நன்று.படிக்கும் மாணவர்களுக்கு இன்றியமையாத ஒரு தகவல்.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum