வடக்கு ஆப்பிரிக்காவில் மசூதிகள் இயேசுவண்டை வருகின்றன.
Tue Sep 13, 2016 9:10 am
வடக்கு ஆப்பிரிக்காவில் மசூதிகள் இயேசுவண்டை வருகின்றன.
வடக்கு ஆப்பிரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இயேசுவண்டை வந்துள்ளனர் என்ற செய்தி மனதைக் குளிரச்செய்கிறது. மசூதியில் உள்ள அனைவரும் விசுவாசத்திற்குள் வருவது எத்தனை வியப்பிற்குரிய செய்தி. நம்புவதற்குக் கடினமாகவே உள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் திருச்சபைகளை நிறுவியவர்களின் அறிக்கைகள் இத்தகைய நிகழ்வுகள் அங்கு நடைபெற்றுக்கொண்டிருப்பதை அறிவிக்கின்றன. பல இடங்களிலுள்ள மசூதிகளைச் சேர்ந்தவர்கள் முழுமையான விசுவாசத்திற்குள் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மிகச் சாதாரணமாக ஆண்களையும், பெண்களையும் கர்த்தரின் நாமத்தில் அற்புதமான செயல்களைச் செய்யக் கர்த்தர் பயன்படுத்துகிறார். இஸ்லாமியப் பின்னணியிலிருந்து வந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிற சமுதாயங்களுக்கும் சுவிசேஷம் பரவவேண்டும் என்பதற்காக உபவாசித்து மன்றாட்டு ஜெபங்களை ஏறெடுத்து வருகின்றனர் என்பது எத்தனை சந்தோஷமான செய்தி. ஒரு திருச்சபைகூட இல்லாத, இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் இப்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகள் உருவாகியுள்ளன. வேறு சில இடங்களில் இரண்டு ஆண்டுகளுக்குள் நூறு சபைகளுக்கு மேல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமியர் வாழும் பகுதிகளில் முன்னாள் ஷேக்குகள், இமாம்கள், இராணுவ வீரர்கள் ஆகியோர் புதிய கிறிஸ்தவத்தலைவர்களாகி உள்ளனர் என்பது எத்தனை பெரிய அற்புதம்.
நாங்கள் ஏழு ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் இருக்கிறோம். இங்கு 81 இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 50 சதவீதம் இஸ்லாமியர்கள் தங்கள் உள்ளத்தில் இயேசுவை ஏற்றுக்கொண்டு மாற்றம் அடைந்திருக்கிறார்கள். அங்கு வாழும் 81 இனமக்களில், 45 இனத்தைச் சேர்ந்தவர்களில் 99 சதவீதம் அல்லது 100க்கு-நூறு பேர்கள் இஸ்லாமியர் என்று அங்கு மிஷனரி பணிசெய்த ட்ரௌஸ்டேல் என்பவர் ஒரு பேட்டியின் போது கூறினார். இஸ்லாமியர்களின் ஆளுகைக்குள் இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களாகவே இருந்து வருபவர்கள் ஆவார்கள். இஸ்லாமியர் மத்தியில் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போது பல முறைகள் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணத்தை நெருங்கி உயிர் பிழைத்த மிஷனரி இயக்கத்தின் தலைவர் ஒருவர் கூறும்போது கர்த்தர் அப்போஸ்தலர்களுடைய காலத்தில் செயலாற்றியதுபோல இப்போதும் அங்கு கிரியை செய்கிறார். சீஷர்கள் எண்ணிக்கை மிகவும் வேகமாகப் பெருகி வருகிறது. சமயத் தலைவர்கள் இமாம்கள், ஷேக்குகள் ஆகியோர் சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிகிறார்கள். எனவே, இந்தத் தலைமுறையிலேயே நமது நோக்கம் நிறைவேறிவிடும் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை என்று கூறுகிறார்.
ட்ரௌஸ்டேல் அவர்கள் ஆப்பிரிக்க இஸ்லாமியர் நடுவில் நடைபெறும் இந்த அற்புதமான மனமாற்றத்திற்கு கர்த்தரே பொறுப்பானவர் என்று கூறுகிறார். மேலும் இந்த மாற்றம் எங்கள் முயற்சியால் அல்ல என்றும் தெரிவிக்கிறார். இஸ்லாமியரை சீஷராக்கும் இயக்கத்தைக் குறித்தும் அவர்கள் ஊழியத்தில் கையாளும் முறைகள் குறித்தும் இவர் விவரிக்கிறார்.
சீஷராக்கும் இவர்களின் இயக்கம் கடைப்பிடிக்கும் சில வழிமுறைகள்:
முதலில் மெதுவாகச் செல்லுங்கள். அப்பொழுது தான் பின்னர் விரைந்து செயல்படமுடியும். இயேசுகிறிஸ்து பன்னிரெண்டு சீஷர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை உலகமெங்கும் சுவிசேஷம் அறிவிக்கத் தகுதி படைத்தவர்களாக அவர்களை உருவாக்கினார்.
ஒருசிலர் மூலமாக அநேகரை ஆதாயப்படுத்துங்கள். இயேசுகிறிஸ்து பன்னிரெண்டு பேர்களைச் சீஷர்களாக்கி, அவர்களில் குறிப்பிட்ட நான்கு பேர்களிடம் மிகுந்த அக்கறை காட்டி, அவர்கள் மூலமாக சுவிசேஷம் உலகமெங்கும் பரவச் செய்தார்.
தனிப்பட்ட மனிதர்களை மட்டுமல்ல, குடும்பங்களை குழுக்களை ஊழியத்தில் ஈடுபடுத்துங்கள். புதிய ஏற்பாட்டில் பல குடும்பங்கள் விசுவாசத்திற்குள் குடும்பம் முழுவதுமாக வந்த வரலாறுகளைப் படிக்கிறோம். சுவிசேஷம் கேட்பதற்கு மக்கள் ஆர்வம்காட்டும் இடங்களிலும், நேரங்களிலும் இயேசு கிறிஸ்துவைப்பற்றிப் பிரசங்கியுங்கள். கர்த்தர் தனிப்பட்டவர்களாக, குடும்பங்களாக, குழுக்களாக ஆயத்தம்செய்து பண்படுத்தி இருக்கும் இடங்களில் சுவிசேஷத்தை அறிவியுங்கள்.
உங்கள் போதனைகளைக் கிறிஸ்துவிடமிருந்து ஆரம்பிக்காமல் கர்த்தர் உலகத்தை சிருஷ்டித்ததிலிருந்து தொடங்குங்கள். இஸ்லாமியர்களுக்கு ஆதியாகமம் தொடங்கிக் கற்பியுங்கள்.
கற்பிப்பதும், அறிவூட்டுவதும் முக்கியமல்ல, கண்டறியவதும், கீழ்ப்படிவதுமே முக்கியமானது.
நன்றி: ஜாமக்காரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum