ஜீனியர் பாலையா - சாட்சி
Tue Aug 20, 2013 10:51 pm
பேதுரு என்கிற ஜூனியர் பாலையா - முன்னாள் சினிமா நடிகர் இன்று கிறிஸ்துவை சுமக்கும் ஊழியக்காரர்.
இவர் T.S பாலையா அவர்களின் புதல்வனான இவரின் குடும்பத்தில் பணத்திற்கு பஞ்சமில்லதிருந்த காலம். இவரின் சொத்து ஒர்காலத்தில் 240 ஏக்கர். இது சென்னையில் மட்டும். இவர் வீட்டின் பிறந்த நாள் விழாக்களில் ஓர் பெரிய கூடை நிறைய பணத்தை போட்டு இவர்களில் தலையில் கொட்டுவார்களாம். இவரது தாயார், சகோதிரர் மற்றும் ஜூனியர் பாலையா பெயர்களை பல தெருக்களுக்கு வைத்திருக்கிறார்கள். இவரின் தந்தையார் பெயரில் ஓர் காலனியே உள்ளது. மிகபெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த இவர் மனம் போன வாழ்க்கையில் தன்னுடைய நண்பர்களுடன் தன் வாலிப வயதில் பாவமான வாழ்க்கையை பாவம் என்றே தெரியாமல் பருகி வந்தார். ஆனால் இவை அனைத்தும் நிரந்தரம் இல்லை. இயேசு கிறிஸ்துவே நிரந்தரம் என்று புரிந்து கொள்ளகூடிய நேரம் இவர் வாழ்க்கையிலும் வந்தது.
இவர் நடித்த முதல் படத்திற்கு பிறகு 3ம் நாளில் இவரின் தந்தை இருந்து விட்டார். வாழ்க்கையில் புயல் வீச ஆரம்பித்தது. அதன் பிறகு இவரின் தாயார் சுகவீனமாய் படுத்து விட்டார்கள். இந்த நேரத்தில் நிலம் விற்பது தொடர்பாக ஓர் பிரச்சினை ஆரம்பித்து தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம் இவரை ஆடிபடைக்க ஆரம்பித்தது. யோபு 3:25 ல் "நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது" என்று சொல்லப்பட்டது போல் இவரின் வாழ்க்கையும் ஆனது. விக்ரகங்களை வணங்கினால் பயம் நீங்கும் என்று பலரும் சொன்னதால் பல இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடுவார். போகாத இடம் இல்லை. ஆனாலும் பயத்தில் தூக்கம் இல்லை. பயங்கர குடிகாரனார். குடும்பத்தில் சேமிப்பு எதுவும் கிடையாததால் தந்தை இறந்த பிறகு இவரின் தாயாரை நெருங்கினவர்கள் ஏமாற்றி கையெழுத்து வாங்கி சொத்தையெல்லாம் அபகரித்து கொண்டனர். இதன் மூலம் பல துயரங்களுக்கு இவர் விதையாகிபோனார். அதுவரை பணத்தின் பெருமையில் உல்லாசமாக இருந்த இவரின் வாழ்க்கை சோகம், ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் என்ற பல புயல்களில் அகப்பட்டு இருள் என்னும் ஓர் மாயைக்குள் திணிக்கப்பட்டார். சினிமா உலகில் ஸ்ட்ரைக் நடந்த போது இவருக்கு வேலை இல்லமால் போனது. வருமானமும் நின்று விட்டது. சேமிப்பு இல்லாததினால் கடன் வாங்க ஆரம்பித்தார். நாளடைவில் கடன் அடைக்க முடியாமல் கடனாளியானார்.
நண்பர்கள் மாயமாகிபோனார்கள். ஒரு முறை நண்பன் வீட்டிற்கு சென்ற போது அவர் இவரின் வருகையை தெரிந்து கொண்டு "என்ன செக் bounce ஆகிவிட்டதா என்று சத்தம் போட்டு அவமானபடுத்தினதாக மனவருத்தத்துடன் குறிபிடுகிறார். இதன் மத்தியில் இவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் சகோதரி தனக்கிருந்த கிழிந்த ஓர் வேதாகமத்தை இவர் மனைவியிடம் கொடுத்து படிக்கசொன்னார். அதை படித்த மாத்திரத்தில் தேவன் அவரிடம் பேசுவதை உணர்ந்து அவர் சொந்த ரட்சராக ஏற்று கொண்டார். அதன் பிறகு ஓர் ஆலயத்தில் ஞானஸ்நானம் எடுத்து கொண்டார். இதை ஜூனியர் பாலையாவிடம் பகிர்ந்து கொண்டார். ஆனால் இவரோ அதை கண்டுகொள்ளவில்லை. ஓர் நாள் கடன் கொடுத்த நண்பர் வீட்டிற்கு வந்து ஜூனியர் பாலையா தற்கொலை செய்து கொண்டால் கடனை திருப்பி தர வேண்டாம் என்று கூறினார். இதை கேள்விப்பட்ட பாலையா தற்கொலை செய்துகொள்ள குடிவெறியுடன் காரை வேகமாக ஓட்டியுள்ளார்.
அதன் பிறகு இவர் மனைவி ஆலயத்திற்கு அழைத்து சென்றார். ஆலயத்தில் அழுகையோடு "ஏசுவே, ஏசுவே" என்று வேதனையில் கதறின போது தன் கைபேசி அழைக்கவே எடுத்து பேசியிருக்கிறார். அதில் இவரை ஏமாற்றி சொத்தை, பணத்தை அபகரித்தவர் மீண்டும் பணத்தை கொடுப்பதாக சொன்னார். இவரால் நம்பவே முடியவில்லை. தேவன் அங்கேயே ஓர் அற்புதத்தை செய்தார். ஜூனியர் பாலையா ரட்சிக்கப்பட்டு 10-4-2013 அன்று ஞானஸ்நானம் எடுத்து கொண்டார். இன்று தேவனை அறியாத மக்களுக்கு இயேசுவை பற்றி சொல்ல தன்னை அர்ப்பணித்து ஊழியம் செய்து வருகிறார். அல்லேலூயா. ஆமென்.
இந்த சாட்சியை படித்த எனக்கன்பான கிறிஸ்தவ பெயரை வைத்துகொண்டு உலகபிரகாரமாய் வாழும் கிறிஸ்தவர்களே, மற்ற மதங்களை சேர்ந்த சகோதிர சகோதிரிகளே "இயேசு உங்களை நேசிக்கிறார்" வேதாகமத்தில் ஓர் வசனம் உண்டு "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிரவர்களே. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைபாறுதல் தருவேன்". இது தேவன் கொடுக்கும் ஓர் அழகிய அழைப்பு. நீங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் சரி. இருக்கிற வன்னமாகவே இயேசுவிடத்தில் வாருங்கள். உங்கள் வாழ்க்கை மாறும். பரிசுத்த வேதாகமம் எங்காவது கிடைத்தால் தவறாது வாசியுங்கள். தேவன் உங்களோடு பேசுவார். உங்கள் காதுகள் நிச்சயம் கேட்கும்.
எனக்கு அன்பானவர்களே... இவர் சொல்வதெல்லாம் நான் கஷ்டப்படும் பொது யாரும் இந்த இயேசுவை எனக்கு சொல்லவில்லை என்பது தான். அன்பு நண்பர்களே. இந்த சாட்சியையாவது உங்கள் நண்பர்களில் முகப்பில் பகிருங்கள். தேவனை அறிந்து கொள்ளட்டும். தொடர்ந்து அவர்களுக்காக ஜெபியுங்கள். என்றாவது ஓர் நாள் அவர்கள் தேவனுக்குள்ளாக வருவர். நான் கல்லூரியில் படித்த பொது என் வகுப்பில் நான் மட்டும் கிறிஸ்தவன். ஆனால் இன்று 3 பேர் குடும்பத்துடன் இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டு சாட்சிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு குடும்பம் பாரம்பரிய கோவில் பூசாரி வகுப்பை சேர்ந்தவர்கள். என்னுடன் படித்த ஐந்து முகமதிய நண்பர்களுக்கு தேவனை அறிமுகபடித்தியிருகிறேன். அறிமுகபடுத்தின அன்றைக்கே சொந்த ரட்சகராக ஏற்றுகொண்டனர்.
நீங்களும் உங்கள் நண்பர்களுக்காக, அண்டை வீராருக்காக, கூட வேலை செய்பவர்களுக்காக ஜெபம் செய்ய ஆரம்பிக்கலாமே. தேவன் உங்களை ஆசீர்வதிபாராக.ஆமென்
நன்றி: தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum