கடனாளி - ஒரு சாட்சி
Wed Feb 10, 2016 1:17 pm
என் பெயர் பிரதீப் வாலிப பிராயத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்பினாலே இழுக்கப்பட்டவன்.இந்த இயேசு ராஜாவை ஏற்றுக் கொண்ட அந்நாளிலிருந்து அனுதினமும். வேதம் வாசித்து. ஜெபம் செய்து ஆவிக்குரிய ஐக்கியத்தில் பங்கு கொண்டு, ஞாயிறு ஆராதனையில் கலந்து கொள்வதும் என் வாழ்க்கை ஓர் அர்த்தமுடையதாகவும் அதே வேளையில் ஆசீர்வாதமாகவும் அமைந்தது.
என் படிப்பும் முடிந்தது. என் நண்பர்களும் என் மதிப்பெண்ணைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். எனக்கு Engineer ஆக வேண்டும் என்று சிறுவயதிலேயே எண்ணம் இருந்தது. அதுவும் Aeronautic Engineer ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைத்த நான் என் பாடங்களில் ஜொலிக்க ஆரம்பித்தேன்.
என் கல்லூரி ஆசிரியர்களும். மற்றும் நண்பர்களும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அதே வேளையில் மதிப்பும் மரியாதையுடனும் பார்க்க ஆரம்பித்தனர், என் பட்டப் படிப்பை முடித்தபோது நான் தான் கல்லூரியிலே முதல் மாணவனாக பாரட்டப்பட்டு பரிசு பெற்றேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து, ஜெபித்த போது பயிற்சியில் சேர எனக்கு வாய்ப்பு கிடைத்தது. தேவன் என்னை நடத்துகிறதையும் காண முடிந்தது.
அப்பயிற்சியில் சேர்ந்தபோது கோடை விடுமுறையில் ஊர் வந்தபோது என்னை Engineer என்று அழைத்தனர். அதுவும் Aeronautic Engineer என்ற பெருமிதம் என் நண்பர்களுக்கு. எனக்கு ஆலய ஈடுபாடு அதிகம் இருந்தது. விடுமுறை நாட்களில் ஆலயத்தில் சிறுவர் ஊழியத்தில் 10 நாள் சிறப்பு நிகழ்ச்சி. விடுமுறை வேதாகமப் பள்ளியிலும் எனக்கு அதிக பொறுப்புகள் என் போதகர் கொடுத்தார். இரவு பகலாக அவைகளைச் செய்தேன். எனக்கு பெருத்த மகிழ்ச்சி காலை வேளையில் அதிகமாக ஜெபித்து நன்றாக எனது பொறுப்புகளைச் செய்தேன்.
நண்பர்களும். அநேக சிறு பிள்ளைகளும் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறதை அந்த பத்து நாட்களில் காண முடிந்தது. இதுவும் என்னை அதிகம் கவர்ந்தது. இந்த சிறப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் எனக்கு எனது ஆலயத்தில் ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. எங்கள் ஆலயப் பொறுப்பாளரிடம் “நான் உங்களுக்கு உதவி செய்யலாமா? என்று கேட்டேன். அவர் என்னை மேலும்,கீழும் பார்த்தார், “ நீ பெரிய Engineer ஆயிற்றே என்ன உதவி செய்யப் போகிறாய்? என்றார் “நான் பெருக்க, திருவிருந்து பாத்திரங்களை கழுவ எனக்கு வாஞ்சை நாற்காலி துடைக்க விரும்புகிறேன் என்று சொல்லி அதைச் செயலில் காட்ட ஆரம்பித்தேன்.
எங்கள் ஆலயத்தில் தினமும் காலையில் திருவிருந்து ஆராதனை நடைபெறும், நான் அந்த ஆராதனைக்கு சென்று திருவிருந்து பாத்திரத்தை எடுத்து அதிக ஜெபத்தோடு சுத்தம் பண்ணி அதனதின் இடத்தில் வைப்பேன். இதைப் பார்த்து என் நண்பர்களுக்கு கேலி கூத்தாயிற்று. மாத்திரமல்ல எல்லாரும் என்னை ஏளனம் பண்ண ஆரம்பித்தனர். முட்டாள் என்ற பட்டத்தைச் சூட்டினர்.
தொடர்ந்து ஆலயத்தைப் பெருக்கவும் நாற்காலிகளைத் தினமும் துடைக்கவும் ஆரம்பித்தேன். அதைக் கண்ட பெரியவர்கள் நீ இப்படி செய்கிற உதவிகளை தேவன் கணக்கில் வைத்து ஏற்றக் காலத்தில் கனம் பண்ணுவார் என்று சொன்னது என்னை அதிகம் திடப்படுத்திற்று. என் நண்பர்கள் என்னை பகடி பண்ணினார்கள்.
ஒரு நாள் எனக்கு ஓரு Interview வந்தது. பாம்பே பட்டணத்தில் ஓர் Helicopter Company யில் வேலைக்கு அழைப்பு கொடுத்திருந்தனர். என்னோடு பலர் வந்திருந்த போதிலும் அந்த வேலை எனக்கே கிடைத்தது. ஆரம்பித்திலே நல்ல சம்பளம். அதைக் கேள்விட்பட்ட என் நண்பர்களில் சிலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு Congratulations என்றார்கள். நெருங்கின சில நண்பர்கள் கொடுத்து வைத்தவன் என புகழ்மாலை சூட்டினர்.
இப்போது நான் இந்த கம்பெனியில் நிரந்தர ஊழியன். இந்த தேசத்தின் V.V.I.P க்களோடு ஹெலிகாப்டரில் சென்று வருகிற பாக்கியம் கிடைத்துள்ளது. என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தபோது இது என் தேவனாலே எனக்கு தரப்பட்ட பாக்கியம் என்று அறிந்திருந்தேன்.
அந்த நாட்களில் தேவனுடைய ஆலயத்தில் நான் நாற்காலியைத் துடைத்ததும். பெருக்கினதும். திருவிருந்து பாத்திரங்களைக் கழுவ வாஞ்சித்ததும் என் நினைவில் வருகிறது. இவைகளைக் கணக்கில் வைத்து கனம் பண்ணாமல் விடுவாரே!
அன்பு வாலிபனே! நீ தேவனுக்கென்று பாராட்டுகின்ற வைராக்கியம், உழைப்புகள் இவைகளை தேவன் குறித்து வைத்திருக்கிறார். எதையெல்லாம் தேவனுக்காக வைராக்கியமாக செய்ய முடியுமோ அதை வைராக்கியமாய் செய். சோம்பேறியாய் இருந்துவிடாதே. தேவன் உன்னை கனப்படுத்துவார்,உயர்த்துவார்.
“என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்” ( 1 சாமு 2:30)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum