நிக் - ஒரு சாட்சி
Mon Mar 23, 2015 10:29 pm
நான் பாவி
நிக் - ஒரு சாட்சி
நான் பிறந்தவுடன் என்னை பற்றி கேள்விப்பட்ட என் தாயும் தகப்பனும் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டனர். என் அப்பா மருத்துவரிடம் சென்று என் மகனுக்கு ஒரு கை இல்லையா என்று கேட்டார். மருத்துவர் "ஒரு கை மட்டும் அல்ல. அவனுக்கு இரு கையும், இரு கால்களும் இல்லை" என்று கூறினார். என் பெற்றோரால் இதை ஏற்று கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் கடவுளை அதிகமாக நம்பினதால் அவர் மீது வைத்திருந்த விசுவாசத்தை விடவில்லை. என் தாய் முதல் 4 மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பதற்கு கஷ்டப்பட்டார்கள்.
தேவன் நிச்சயம் ஓர் திட்டம் வைத்திருப்பார் என்று என் பெற்றோர் நம்பினார்கள். நான் தேவனிடம் சவால் விட்டேன். "தேவனே, நான் ஒரு பாவி என்று தெரியும். ஆனால் நீங்கள் எனக்கு இந்த பதிலை தர வேண்டும். ஏன்? ஏன் என் இருகைகளையும் கால்களையும் எடுத்துவிட்டீர்கள். மற்ற எல்லோருக்கும் கொடுத்திருக்கும் போது ஏன் எனக்கு கொடுக்கவில்லை. நீர் இதற்கு பதில் தரவில்லை என்றால் நான் உமக்கு எதுவுமே செய்ய மாட்டேன்".
கடவுள் என்னுடைய கேள்விக்கு பதில் தராவிட்டால் நான் என்னை முடித்துக்கொள்வேன். என்னுடைய எட்டாவது வயதில் தற்கொலை செய்துகொள்ளும் விதமாக தண்ணீரில் குதித்தேன். அனாலும் காப்பாற்றப்பட்டேன். அதன் பிறகு என் பெற்றோர் என் மீது வைத்திருந்த அளவுகடந்த நம்பிக்கையை தெரிந்துகொண்டேன்.
என் தாய் என்னிடம் கூறினார்கள். நிக், நிச்சயம் தேவன் உன்னை பயன்படுத்துவார். ஆனால் எனக்கு எப்போ எங்கே என்று தெரியாது.
இந்த வார்த்தை என்னில் கிரியைசெய்தது. நாம் சரீரத்தில் உடைக்கப்பட்டிருப்பதை விட இருதயத்தில் அவருக்காக உடைபட வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவன் என்னை பயன்படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டேன்.
என்னுடைய 15ம் வயதில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டேன். யோவான் 9: 2,3 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
2 தீமோத்தேயு 3:16. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; என்று எழுதப்பட்டுள்ளது. நான் விசுவாசிக்கிறேன், தேவன் எனக்குள்ளாக சுவாசத்தையும், விசுவாசத்தையும் ஊதியிருக்கிறார். இந்த விசுவாசமும், சமாதானமும் என்னை வழிநடத்துகிறது. என் தேவன் என் கேள்விக்கு பதில் கொடுத்து விட்டார் என்று விசுவாசிக்கிறேன். ஏன் என்று கேட்ட கேள்விக்கு தேவன் கொடுத்த பதில் "நீ என்னை விசுவாசிக்கிறாயா?" நான் "ஆம்" என்று சொன்னேன். அது போதும், வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை.
நான் எதற்காக இங்கே இருக்கிறேன் என்கிற உண்மையை இயேசு கிறிஸ்துவுக்குள் அறிந்துகொண்டேன். வேறு எங்கும் இல்லை. பலர் என்னை பல விதங்களில் குறை கூறி உள்ளனர். நீ எதற்கும் லாய்க்கியில்லை என்று உதறி தள்ளினர். நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்குள் உண்மையை கண்டுபிடிக்கவில்லை என்றால் பொய்கள் தான் உண்மை என்று நம்பவேண்டும். நாம் வேதத்தை வாசிக்கும் போது நாம் யார் என்கிற உண்மை புரியும். நான் மனிதன் அல்ல. தேவனின் பிள்ளை. பாவம் கழுவப்பதினால் ராஜாதிராஜாவம் இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.
இது நிக் அல்ல. எனக்கு கொடுக்கப்படும் அனுதாபங்கள் இல்லை. நான் ஒன்றும் இல்லாதவன். கடவுள் எனக்குள் வாழ்கிறார். அவருடைய பலத்தில் நான் இருக்கிறேன். இயேசு என்ன செய்தாரோ நானும் செய்கிறேன்.
எனக்கு தேவன் அதிசயத்தை செய்யாமல் போனாலும் நான் அவருடைய திட்டத்தில் இருக்கிறேன். ஊழியம் ஆரம்பித்த புதிதில் சுமார் 200,000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள். யாராவது ஒருவரையாவது இயேசுகிறிஸ்துவுக்குள் வழிநடத்துங்கள். ஆமென் ....
சகோதிர சகோதிரிகளே... அருமையான ஓர் சாட்சி அல்லவா. நம்மை பற்றி சிந்திப்போம். நாமும் தேவனுடைய திட்டத்தின் படி இங்கே இருக்கிறோம். அந்த உண்மை நமக்கு புரிகிறதா? உங்களிடம் என்ன குறைகள் உண்டு? அதை தேவனிடம் கொடுங்கள். தேவன் உங்களை பன்மடங்காக உயர்த்துவார். நிக் சுமார் 24 நாடுகள் (இந்தியா உட்பட) சென்று பல லட்சம் பேர்களை கடவுளுக்குள் வழிநடத்தி உள்ளார். உங்களை தேவன் அழைத்த விதங்களில் பயன்படுத்துவார்.
மோசேவுக்கு திக்கு வாயன் - தேவன் பயன்படுத்தினார்
தாவீது ஆடு மேய்ப்பவன் - தேவன் பயன்படுத்தினார்
எரேமியா பேசத்தெரியாதவன் - தேவன் பயன்படுத்தினார்
பேதுரு மறுதலித்தவன் - தேவன் பயன்படுத்தினார்
ஒன்றே ஒன்று தான். மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள் என்பதுபோல் நீங்களும் இயேசு கிறிஸ்துவை முழுமனதுடன் நம்பி அவரை தினமும் தியானியுங்கள். அதிகாலையில் வேதம் வாசித்து ஜெபம் செய்யும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். தேவன் உங்களை உயர்த்துவார். உங்களிடம் சரீர பிரகாரமான குறைகள் உண்டா? தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்கள் குறைகளை தேவன் நிறைவாக்குவார்.
யோவான் 9:3 அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். நீங்கள் கிறிஸ்துவின் செய்கைகளை வெளிப்படுத்தும்படி இப்படி பிறந்துள்ளீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக... ஆமென்.
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum