மாற்றம் தேவை ...
Thu Aug 01, 2013 11:23 pm
அடர்ந்த காட்டுப் பகுதியில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்க்கு பூனையைப் பார்த்தால் ஒரே பயம். தான் இருக்கும் வளையை விட்டு வெளியே செல்லாமல் பயந்து புலம்பிக்கொண்டிருந்தது.
ஒரு நாள் தன் வளையருகே சென்று கொண்டிருந்த முயலை அழைத்து தன்னுடைய பயத்தை பற்றி கூறி ஆலோசனை கேட்டது எலி.
அதற்கு முயல், 'எனக்கு தெரிந்த ஒரு நரி இருக்கிறது. அவனுக்கு பூனையை யானையாகவும், யானையை பூனையாகவும் மாற்றும் வித்தை தெரியும். வேண்டுமானால் அவனிடம் போவோம் உன் பயத்தை அவன் போக்கிவிடுவான்' என்றது.
எலியும், முயலும் வித்தைக்கார நரியைப் பார்க்க சென்று நரியிடம், "நரியரே ! எனக்கு பூனைகளை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அது என்னை கொன்றுவிடுமோ என்ற அச்சத்தில் நான் தினம் தினம் சாகிறேன். அதனால் என்னை தயவு செய்து பூனையாக மாற்றிவிடுங்கள்" என்று கெஞ்சியது.
'சரி' என்ற நரி, உடனே எலியை பூனையாக மாற்றியது. பூனையாக மாறியவுடன் எலி சந்தோஷமாக துள்ளி குதித்து ஓடியது. ஆனால் அதன் சந்தோஷம் ரொம்ப நேரம் நீடிக்கவில்லை, பெரிய வேட்டை நாய் ஒன்று பூனையை பார்த்துவிட்டது.அதனை வேட்டையாடி சாப்பிட ஓட ஓட துரத்தி வந்தது. பூனை எப்படியோ வேட்டை நாயிடமிருந்து தப்பி பிழைத்து நரியிடம் வந்து சேர்ந்தது.
"நரி அண்ணே, எலியாக இருந்த என்னை பூனையாக மாற்றினீர்கள். இப்பொழுது நாய்களை கண்டாலே எனக்கு ஒரே பயமாக இருக்கு. அதனால் என்னை நாயாக மாற்றிவிடுங்கள்" என்றது.
"அப்படியா, சரி உன் விருப்பத்தின்படியே செய்துவிடுவோம்" என்ற நரி, தன் வித்தையால் பூனையை நாயாக மாற்றியது.
நாயாக மாறியவுடன் அது காட்டிற்குள் தைரியமாக் செல்ல தொடங்கியது. கொஞ்ச தூரம் சென்றிருக்கும் அங்கே எதிரே ஒரு சிங்கம் வந்தது. அடுத்த கணம் சிங்கம் விரட்ட, நாய் ஓடத் தொடங்கியது. நேராக மீண்டும் நரியிடம் வந்து நின்றது.
"நரியண்ணே,நரியண்ணே மீண்டும் ஆபத்து. நாயாக இருந்தால் ஆபத்து இல்லை என்று எண்ணினேன். இப்பொழுது ஒரு சிங்கம் என்னை துரத்துகிறது. என்னால் நாயகவும் வாழ முடியாது. என்னை சிங்கமாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும்" என்றது.
வித்தைக்கார நரிக்கு ஆத்திரமாக வந்தது. "ஏ பயந்தாங் கொள்ளி நாயே. நீ எந்த உருவாக மாறினாலும் உன்னுடைய பயந்த சுபாவம் உன்னை விட்டு போக மறுக்கிறது. உருவம் மாறிவிட்டது ஆனால் உன் உள்ளம் மாறவில்லை. நீ எதற்கும் தகுதி இல்லாதவன், உன்னை பழையபடியே எலியாக மாற்றிவிடுகிறேன்" என்று வெறுப்புடன் பேசிய நரி, அந்த நாயை மீண்டும் எலியாகவே மாற்றிவிட்டது.
ஆம்! நண்பர்களே, நாம் என்னதான் இரட்சிக்கப்பட்டிருந்தாலும் நம்முடைய பழைய சுபாவம் மாறாதிருந்தால் நம்மை கொண்டு ஒரு பயனும் இல்லை.
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 2 கொரிந்தியர் 5:17

நன்றி: C.J.Zeba
Permissions in this forum:
You cannot reply to topics in this forum