முகநூலில் வந்த சிரிப்புகள்
Wed Jul 24, 2013 3:52 pm
டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு..
முள்ளை எடுக்கணுமா?
முள் சின்னது. அதையேன் தொந்தரவு பண்ணணும்?
காலை எடுத்துடுங்க.
.......................................................................................................
ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?
எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னே.
...........................................................................................................
இரண்டு இட்லியை கூட என்னால் முழுசா
சாப்பிட முடியல டாக்டர் ...!
என்னாலயும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது.
புட்டு புட் டுதான் சாப்பிட முடியும்.
................................................................................................................
காலியான கேஸ் சிலிண்டரை எடுத்துக் கெண்டு டாக்டரை பார்க்க போகிறார் ஏன்?
கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர் தன்னை வந்து பார்க்க சொன்னாராம்.
........................................................................................................
என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...?
அது பிள்ளையார் சுழியாம்....

அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்பு சாப்பிடுகிறார்.
டாக்டர் இனிப்பை கண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம்.
......................................................................................................
வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்.'
இதிலொன்னும் தப்பில்லையே..
திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!

ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு
அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!
....................................................................................................
டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?
அப்படியா? சும்மாவா இருந்தீங்க..
இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.

தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொல்றீங்க
ஆனா என்னால் முடியாது டாக்டர்..
ஏன்?
எங்க கோழி வெள்ளை முட்டைதான் போடும் டாக்டர்.

நர்ஸ்!
பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா?
இல்ல சார்.
பீ.பி இருக்கா
இல்லை சார்.
அட, ஆச்சர்யமா இருக்கே!
பேஷண்ட் செத்து அரை மணி ஆச்சு சார்!
.........................................................................................................
..நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்..
எப்படி சொல்றீங்க?
உங்களுக்கு ஏதாவது ஆப்ரேஷனா,
நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க.

Re: முகநூலில் வந்த சிரிப்புகள்
Sat Jul 27, 2013 12:03 am
ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன்.
பந்தியில் கூட்டம் குறைந்ததும் சாப்பிட உட்கார்ந்த போது, பக்கத்தில் அமர்ந்திருந்த நபரை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருந்தது.
"உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே...!" என்று கேட்டேன்.
"அட, நீங்கள் ரெண்டாவது பந்தியில சாப்பிட்டுக் கொண்டிருந்த போது எதிர்ல உட்கார்ந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேனே..." என்றார் அவர்.
ஞாபகம் வந்துவிட்டது. சாப்பிட்டபின் இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்புகையில்...
"ஏங்க மொய் வைக்கலே..." கேட்டேன் அவரிடம்.
அவர் சொன்னார்,
"அட... மாப்பிள்ளைப் பய எனக்கு பத்திரிகையே வைக்கல... நான் ஏன் மொய் வைக்கணும்?"

Sat Jul 27, 2013 12:04 am
ஒரு மனிதன் கடவுளுடன் பேசுகிறான்
மனிதன் - கடவுளுவுளுக்கு ஒரு மில்லியன் ஆண்டுகள் என்பது எவளவு காலம்?
கடவுள் - என்னை போறுத்த வரை சுமார் அது ஒரு நிமிடம் தான்
மனிதன் - கடவுளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் என்பது எவளவு?
கடவுள் - எனக்கு அது ஒரு பைசா தான்.
மனிதன் - கடவுளே எனக்கு ஒரு பைசா வேண்டும்?
கடவுள் - ஒரு நிமிடம் பொறு.
- யார்க்கிட்ட உன் வேலையக் காட்டுற !

Sat Jul 27, 2013 7:13 am
கணவன்:- நம்ம பொண்ணை தீர விசாரிக்காமல் ஒரு முட்டாப் பயலுக்குக் கட்டிக் கொடுத்துட்டோம்..!
மனைவி:- எங்கப்பா கூட இப்படித்தாங்க… நமக்கு கல்யாணம் ஆன பிறகு ரொம்ப நாள் புலம்பிக்கிட்டிருந்தாரு…!
மனைவி:- எங்கப்பா கூட இப்படித்தாங்க… நமக்கு கல்யாணம் ஆன பிறகு ரொம்ப நாள் புலம்பிக்கிட்டிருந்தாரு…!
Re: முகநூலில் வந்த சிரிப்புகள்
Sat Jul 27, 2013 7:13 am
டாக்டர் உங்க “கன்சல்டிங்” பீஸ் நூறு ரூபா தானே?
எதுக்கு இருநூறு ரூபா ….கேக்குறீங்க?
வெளிய வெயிட் பண்ணும்போது நர்ஸ் கிட்ட உங்க
டாக்டர் என்ன பெரிய அப்பாடக்கரா இவ்வளவு
நேரம் காக்க வைக்கிராருன்னு கேட்டீங்கல்ல அதுக்கு
“இன்சல்டிங்” பீஸ் நூறு ரூபா
எதுக்கு இருநூறு ரூபா ….கேக்குறீங்க?
வெளிய வெயிட் பண்ணும்போது நர்ஸ் கிட்ட உங்க
டாக்டர் என்ன பெரிய அப்பாடக்கரா இவ்வளவு
நேரம் காக்க வைக்கிராருன்னு கேட்டீங்கல்ல அதுக்கு
“இன்சல்டிங்” பீஸ் நூறு ரூபா
Re: முகநூலில் வந்த சிரிப்புகள்
Sat Jul 27, 2013 7:14 am
ஆசிரியர் : உன்கிட்ட உள்ள டேலன்ட் பற்றி சொல்லுப்பா!
மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன் சார்.
ஆசிரியர் : அப்படியா! வெரிகுட், எவ்வளவு தூரம் நடப்ப?
மாணவன் : உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம்.
மாணவன் : நான் பின்னாடியே நடப்பேன் சார்.
ஆசிரியர் : அப்படியா! வெரிகுட், எவ்வளவு தூரம் நடப்ப?
மாணவன் : உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம்.
Re: முகநூலில் வந்த சிரிப்புகள்
Sat Jul 27, 2013 7:47 am
இதுக்கெல்லாமா பாஸ்வேர்டு!!??
ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கேட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையில்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன்.
இன்று,
வண்டியை நான் ஓட்டவில்லை, நண்பன் ஓட்டினான். இந்த முறையும் மாட்டிக்கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சிப்பார்த்தும் அவர் விடுவதாகயில்லை. அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த்தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் "காக்கா சார்..." என்றான். போலீசார் முகம் போனது பார்க்க வேண்டுமே!. பிறகு அமைதியாக சொன்னார், "டேய்...எங்ககிட்டேவா...நாங்க யாரு... தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமாஇன்னைக்கு கோட்வேட்(password) "குயில் டா..."...
Re: முகநூலில் வந்த சிரிப்புகள்
Sat Jul 27, 2013 7:51 am
உன் பேரு என்ன..?
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
" சௌமியா "
உங்க வீட்ல உன்னை எப்படி
கூப்பிடுவாங்க..?
தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,
பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,
Re: முகநூலில் வந்த சிரிப்புகள்
Sat Aug 17, 2013 8:37 am
'உங்க மொபைல் அழகா இருக்கு.. எவ்வளவுக்கு வாங்கினீங்க..?
ஓட்டப்பந்தயத்துலே ஜெயிச்சது'
ஓட்டப்பந்தயத்துலே எத்துன பேரு ஓடுனீங்க'
'நானு- மொபைல் கடைக்ககாரரு - 3 போலீஸ்காரங்க'.
ஓட்டப்பந்தயத்துலே ஜெயிச்சது'
ஓட்டப்பந்தயத்துலே எத்துன பேரு ஓடுனீங்க'
'நானு- மொபைல் கடைக்ககாரரு - 3 போலீஸ்காரங்க'.
Re: முகநூலில் வந்த சிரிப்புகள்
Sat Aug 17, 2013 8:37 am
அந்த விமான நிறுவனம் ஒரு புதிய ஆபரை அறிவித்தது.
அதாவது பிசினஸில் ஈடுபட்டிருப்போர் தங்களது மனைவியுடன் விமான பயணம் மேற்கொண்டால் மனைவிக்கான டிக்கெட் முற்றிலும் இலவசம் என்பதே அந்த ஆபர்.
ஆபர் வெளியான உடனேயே அத்தனை டிக்கெட்டும் புக்காகி விமானம் நிரம்பி வழிந்தது.
இதனால் குஷியான விமான நிறுவனம், அந்தப் பயணத்திற்குப் பின்னர் அனைத்து மனைவிமார்க்கும் ஒரு கடிதம் அனுப்பி உங்களது பயணம் எப்படி இருந்தது என்று கேட்டது.
அதற்கு ஒட்டுமொத்த மனைவிமார்களும் அனுப்பிய ஒரே பதில்... எந்தப் பயணம்..?

இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர்.
இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர்.
காதலன் முதலில் குதிக்க,
காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள்.
பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன்,
'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு
முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum