ரயில் டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் கட்டணம் திரும்ப பெறுதல் புதிய விதிமுறைகள்!
Mon Jul 01, 2013 10:22 am
தற்போது பயணம் உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் 24 மணி நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் மட்டுமே முழு தொகையும் திரும்ப கிடைக்கும். ஆனால் புதிய விதிமுறைகளின்படி 48 மணி நேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தால்தான் முழு கட்டணம் திரும்ப பெற முடியும்.
ரயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் பாதி கட்டணம் இதுவரை வழங்கப்பட்டது. அவற்றை 6 மணி நேரத்துக்கு முன்னதாக ரத்து செய்தால் இனி பாதி கட்டணத்தை பெற முடியும்.
500 கிலோ மீட்டர் பயணம் தூரம் உள்ள டிக்கெட்களுக்கு ரயில் புறப்பட்ட பின்னர் 12 மணி நேரத்திற்குள் கட்டணம் திரும்ப பெறும் வசதி தற்போது உள்ளது.
ஆனால் புதிய விதிமுறையின்படி ரயில் புறப்பட்டு 2 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ஒப்படைத்து பணம் பெற வேண்டும். இது போன்ற பல மாற்றங்கள் டிக்கெட் ரத்து செய்தல் மற்றும் பணம் திரும்ப பெறுதலில் கொண்டுவரப்படுகிறது.
ஜூலை 1-ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum