தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
விதிமுறைகள் Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

விதிமுறைகள் Empty விதிமுறைகள்

Sat Dec 22, 2012 8:54 am
தேவன் தளத்தின் நிர்வாக விதிமுறைகள்

தேவன் தளமானது - வியாபார நோக்கமற்ற, தேவனுக்கும், தேவன் தளத்தின் அங்கத்தினர்களின் ஆக்கங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் தாலந்துகள், திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ் பேசும் கிறிஸ்தவ மக்களின் ஆவிக்குரிய தளமாகும். இத் தளமானது உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சிக்கும், அநேகரின் பக்திவிருத்திக்கேதுவாகவும் ஒரு பங்களிப்பாக இருக்கும். இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். ஆனால், அதேசமயம் தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டுப்பாடுடையவர்கள்.

1. பயனர் பெயர் :

1.1. தேவன் தளத்தில் இணைவதற்கான பயனர் பெயர் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம்.

1.2. பயனர் பெயர் நாகரீகமாக இருக்கவேண்டும்..

1.3. மின்னஞ்சல் முகவரிகள், இணையதள முகவரிகள், எண்கள், குறியீடுகள் போன்றவற்றை பயனர் பெயராக வைக்கக் கூடாது.

1.4. முதல் முறை நீங்கள் பதிந்த பயனர் பெயரை மாற்ற விரும்பினால் தள நிர்வாகிகள் மாற்றி தருவார்கள்.



2. பதிவுகள் :

2.1. பதிவுகளுக்கு ஏற்ற தலைப்புகள் இட வேண்டும். தலைப்புகள் முழுப் பொருளுடன், சுருக்கமாக இருக்க வேண்டும்.

2.2. அனைத்து தலைப்புகள் மற்றும் பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.

2.3. இணையதள முகவரிகள், கணினி சார்பான சொற்கள் போன்றவை ஆங்கிலத்தில் இடம்பெறலாம்..

2.4. உங்களுடைய ஆக்கங்களை பொருத்தமான தலைப்பின் கீழ் பதிய வேண்டும்.

2.5. வேறு தளத்தில் இருந்து பெறப்பட்ட பதிவுகளாக இருப்பின் தகவல் எங்கிருந்து பெறப்பட்டதோ அந்த தளத்தின் இணைய முகவரி அல்லது எழுதியவர் பெயர் போன்றவற்றை கண்டிப்பாக இணைக்க வேண்டும்..

2.6. வன்முறை மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பதிவுகள் இடம்பெறக் கூடாது.

2.7. சிறிய கவிதைகள், தகவல்களுக்காக தனி திரி துவங்கக் கூடாது. பல சிறிய கவிதைகள் அல்லது தகவல்களை ஒன்றிணைத்து பதியலாம்.

2.8. உங்கள் சொந்த தளத்தின் பதிவுகள் இடம்பெறலாம். ஆனால் உங்கள் தளத்துக்கு அழைப்பது போன்ற பதிவுகள் கண்டிப்பாக இடம் பெறக்கூடாது.

2.9. காப்புரிமை மீறல் பதிவுகள், சட்டத்திற்கு புறம்பான தரவிறக்க லிங்க்குகளை பதிய கூடாது.

2.10. பதிவுகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே அந்தப் பதிவு பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



3. பின்னூட்டங்கள் :

3.1. தேவன் தளத்தில் பதியப்பட்டுள்ள பதிவுகளுக்கு ஏற்ற வகையில் பின்னூட்டங்கள் / பதில்கள் பண்பான மற்றும் கண்ணியமான முறையில் இடம் பெற வேண்டும்..

3.2. தனி நபர் தாக்குதல், பதிவாளர்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் கூடாது.

3.3. சொந்தமாக பதியப்பட்ட ஆக்கங்களை தேவையின்றி குறை சொல்லுவதை தவிர்க்க வேண்டும்.

3.4. இனம், மதம் , நாடு , நாட்டின் சட்ட திட்டங்ள், அரசியல் தலைவர்கள்,
சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவற்றை விமர்சிக்கக் கூடாது.

3.5. உறுப்பினர்களின் அனுமதியின்றி அவர்களை வா, போ என்று ஒருமையில் அழைத்தல் கூடாது..



4. புகைப்படங்கள்/ வீடியோ :

4.1. பதிவுகளில் பதிவுகளுக்கு தொடர்புடைய புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவற்றை இணைக்கலாம். புகைப்படங்கள்/ வீடியோ ஆகியவை பாலியல் உணர்வுகள் மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் இடம்பெறக்கூடாது.

4.2. உங்கள் நண்பர்களின் புகைப்படங்களை இணைக்கும் போது அவர்களின் முன் அனுமதியை பெற வேண்டும்.

4.3. வேறு தளத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் அந்த தளத்தின் முகவரியை இணைக்க வேண்டும்.



5. தனிமடல் சேவை:

5.1. தேவன் தள உறுப்பினர்களோடு தனிப்பட்ட முறையில் நட்புப் பாராட்ட தனிமடல் சேவையினை பயன்படுத்தலாம்.

5.2. தனிமடல் சேவையை தவறான முறையில் ஆபாசமாக அனுப்பக்கூடாது.

5.3. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.

5.4. உங்கள் தள விளம்பரங்களுக்காக தனி மடல் சேவையை பயன்படுத்தக்கூடாது.

5.5. உங்களுக்கு வந்த தனிமடல்களை தள நிர்வாகிகள் தவிர்த்து வேறு யாரிடமும் பகிரங்கப் படுத்துவதோ , பொது பகுதியில் பதிவதோ கூடாது.



6. நிர்வாகம்:

6.1. தவறான , விதி முறைகளை மீறிய பதிவுகளை திருத்தவோ, அழிக்கவோ நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு.

6.2. நிர்வாகிகளை எதிர்த்து வாதம் செய்ய கூடாது. எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும்.

6.3. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப்பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்திற்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும்தான் தொடர்பு கொள்ள வேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப்படுவார்.

6.4. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

6.5. தேவன் தளத்தின் உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால், நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.

7. பின் குறிப்பு:

7.1. தேவன் தளத்தில் பதியப்படும் கருத்துக்கள் அனைத்தும் உறுப்பினர்களுடைய சொந்த கருத்துக்கள் ஆகும். அதற்க்கு தேவன் தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

7.2. காப்புரிமை மீறல்கள் இருந்தால் நிர்வாகத்திற்கு அறிய தரலாம்.

7.3. மேற்காணும் விதிகளை மாற்றம் செய்ய நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

7.4. விதிகளை மீறிய பதிவுகளை அகற்றும் உரிமை நிர்வாகத்துக்கு உண்டு. அதே நேரம் எச்சரிக்கைப்புள்ளிகளை வழங்கும் அதிகாரமும் அவர்களுக்குண்டு.[center]
avatar
அனுராகவன்
புதியவர்
புதியவர்
Posts : 7
Join date : 14/07/2014

விதிமுறைகள் Empty Re: விதிமுறைகள்

Mon Jul 14, 2014 1:07 am
படித்தேன் ...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum