இணையதள டிக்கெட் முன்பதிவுக்கு ரயில்வே புதிய கட்டுப்பாடுகள்!
Sat Jan 30, 2016 8:41 am
புதுடெல்லி: முறைகேடுகளை தடுப்பதற்காக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரயில்வே அமைச்சகம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது, வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
தட்கல் டிக்கெட்டுகளை பொறுத்தவரையில், ஒரு ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 2 தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். விரைவு டிக்கெட் புக்கிங் சேவை காலை 8 மணியிலிருந்து 12 மணி வரை செயல்படாது.
தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தனி நபர் ஒருவர், ஒரு மாதத்துக்கு ஆறு முறை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ஒரு ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம்.
தட்கல் டிக்கெட்டுகளை பொறுத்தவரையில், ஒரு ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 2 தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். விரைவு டிக்கெட் புக்கிங் சேவை காலை 8 மணியிலிருந்து 12 மணி வரை செயல்படாது.
மேலும், தனி நபர் ஒருவர் தமது ஐ.ஆர்.சி.டி.சி. கணக்கில் காலை 8 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை ஒரு முறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். அனைத்து முகவர்களும் முன்பதிவு தொடங்கிய அரை மணி நேரத்துக்கு பிறகு தான் தங்கள் கணக்குகளில் டிக்கெட் பெறலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum