பற்களின் பாதுகாப்பு...
Mon Jul 01, 2013 9:56 am
பற்களின் பாதுகாப்பு...
.....................................
மனிதனுக்கு பற்கள் இன்றியமையாத உறுப்பாகும்.
உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து
அது எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது.
முக அழகிற்கும், முகப் பொலிவிற்கும், பேசுவதற்கும் இந்தப் பற்கள் மிக முக்கியம்.
உடலின் நுழை வாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்கள் வராமலிருக்க வழி செய்யும்.
பற்கள் சுத்தம் இல்லாவிட்டால் இதய பாதிப்பு முதற்கொண்டு மனிதன் பல்வேறு ஆரோக்கிய இழப்பிற்கு ஆளாகிறான் என்று இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
எனவே,
பற்கள் பாதுகாப்பு மிகவும் அவசியமானது.
எப்படி பல்லை துலக்குவது..?
விளம்பரத்தில் காட்டுகிற மாதிரி பிரஷ் முழுக்க நிறைய பேஸ்ட் வைத்து பல் துலக்க வேண்டியதில்லை.
வேர்க்கடலை அளவுக்கு பேஸ்ட் இருந்தாலே போதும்.
பேஸ்ட்டானது, பிரஷ்ஷின் உள்ளே இறங்கும்படி, அதன் அமைப்பு இருக்க வேண்டும்.
பல் துலக்கி முடித்ததும், விரல் நுனிகளால், ஈறுகளை மென்மையாக மசாஜ் செய்து விடலாம்.
பற்களை மிதமான அழுத்தம் கொடுத்துத் தேய்த்தால் போதும்.
ஆக்ரோஷமாக,
அதிக அழுத்தத்துடன் தேய்த்தால் எனாமல் பாதிக்கப்படும்.
எனாமல்தான் பற்களுக்குக் கவசம்.
3 மாதங்களுக்கொரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.
வருடம் தவறாத பல் பரிசோதனை, பல் தொடர்பான எந்தப் பிரச்னையும் பெரிதாகாமல், ஆரம்பத்திலேயே சரி செய்யப்பட உதவும்.
வருடம் ஒரு முறை அல்லது 2 முறைகள் பற்களை முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
காலை எழுந்தவுடன்,இரவு உணவு உண்ட பிறகு, இரு முறை பல் துலக்குகிற அடிப்படை சுகாதாரம் அவசியம்.
இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன.
அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது.
அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.
தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.
பற்களின் இடையில் ஃபிளாஸ் எனப்படுகிற பிரத்யேக நூல் வைத்து சுத்தம் செய்கிற பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.
சரி விகித சாப்பாடு அவசியம்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் என்றால், பல் பரிசோதனையின் போது அதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.
சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும்.
இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.
முக்கியமாக,
இரவு படுக்க போகும்போது கண்டிப்பாக பல் துலக்க வேண்டியது அவசியம்.
உடல் நலம் காப்போம்..!
நோயின்றி வாழ்வோம்..!!
உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum