பற்களின் கறையைத் தடுக்க இயற்கை வழிகள்!
Mon Jul 06, 2015 11:12 pm
கல்லூரி மாணவி நான். என் பற்கள் பழுப்பு நிறத்தில் இருக்கின்றன. வெளுப்பாக்க, கடைகளில் கிடைக்கிற ‘ஹோம் கிட்’ வாங்கி முயற்சி செய்தும் பலனில்லை. பல் மருத்துவரிடம் சென்று பிளீச் செய்து கொண்டால் வெளுப்பாகி விடும் என்கிறார்கள் சிலர். அதனால் எந்த பாதிப்பும் வராதா?
பதில் சொல்கிறார் பல் மருத்துவ நிபுணர் யஷ்வந்த் குமார் வெங்கட்ராமன்
பற்களின் பழுப்பு நிறத்துக்கும் கறைகளுக்கும் இரண்டு காரணங்கள் இருக்கலாம். புகை பிடிப்பது, கஷாயம் குடிப்பது, பான்பராக் போடுவது போன்ற வெளிப்புறக் காரணங்களால் நிறம் மாறுவது ஒரு வகை. பிறக்கும்போதே பற்கள் பழுப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பது இன்னொரு வகை. இதில் முதல் வகைக் கறைகளை ‘டூத் ஒயிட்டனிங்’ சிகிச்சையில் சரியாக்கலாம்.
பிளீச் என நீங்கள் கேள்விப்பட்ட சிகிச்சைதான் இது! இதில் ஒருவித பிரத்யேக அமிலத்தைப் பயன்படுத்துவோம். அதை நீர்க்கச் செய்து, பற்களின் எனாமலில் தடவி விட்டு, ஒருவித விளக்கைக் காட்டி செயல்படச் செய்வோம். அது பற்களின் மேலுள்ள ‘ஸ்மியர்’ என்கிற லேயரை எடுத்து, பற்களை பளீரென மாற்றும்.
பிறப்பிலேயே நிறம் மாறியிருக்கும் பற்களை கேப், லேமினேட் போன்ற வேறு சிகிச்சைகளால்தான் மறைக்க முடியும். இதற்கு டூத் ஒயிட்டனிங் பலனளிக்காது. டூத் ஒயிட்டனிங் சிகிச்சையை 6 மாதங்களுக்கொரு முறை செய்து கொள்ளலாம். அது எந்தவித பக்க விளைவையும் உண்டாக்காது. நீங்கள் சொல்கிற ‘ஹோம் கிட்’ பயன்படுத்தும் முன் முறைப்படி பல் மருத்துவரிடம் போய் பற்களை ஸ்கேலிங் மற்றும் பாலீஷிங் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் அந்த அமிலம் உள்ளே போகும்.
காபி, டீ, கோலா குடித்த பிறகு வாய் கொப்பளிப்பது, புகை, பான் பராக் பழக்கங்களை விடுவது, சாப்பிட்ட பிறகு பிரஷ் செய்வது... இதெல்லாம் பற்களில் கறை படியாமல் தடுக்கும் இயற்கை வழிகள்!

Re: பற்களின் கறையைத் தடுக்க இயற்கை வழிகள்!
Mon Jul 06, 2015 11:23 pm
சிரிப்பை அழகாகக் காட்டும் பற்கள்!
‘‘‘பல் போனா சொல் போச்சு’ என்பார்கள். இந்தப் பொன்மொழி எப்போது தோன்றியது என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பல காலமாக பற்களை சரிவர பராமரிக்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி வருகிறார்கள். ஏனெனில், பற்கள்தான் ஆரோக்கியத்துக்கான வாசல்’’ என்கிறார் பிரபல பல் மருத்துவமனையில், பல் நிபுணராக பணிபுரியும் டாக்டர் தீபாலட்சுமி.
‘‘பற்கள் அழகாக இருந்தால், சிரிக்கும் போது நடிகை சினேகா போல் அழகாக இருக்கும். ஒருவரின் சிரிப்பை அழகாக எடுத்துக் காட்டும் பற்களை பாதுகாப்பது அவசியம். உணவு சாப்பிட்ட பிறகு தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். அப்பொழுதுதான் பல் இடுக்குகளில் உணவு பொருட்கள் தங்காது. தினமும் காலை மற்றும் இரவு படுக்கும் முன் பற்களை துலக்க வேண்டும்.
*பற்கள் இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்க பிளாஸ் பயன்படுத்தலாம். மெல்லிய நூல் போல் இருக்கும், பிளாசை பற்கள் இடுக்குகளில் விட்டு சுத்தம் செய்யலாம். இப்போது இன்டர்டென்டல் பிரஷ்கள் கடைகளில் கிடைக்கிறது. இவை பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை அகற்ற பயன்படும். ஓரல் இரிகேட்டர், வாயில் தண்ணீரை வேகமாக செலுத்தும் கருவி. இதனை பற்கள் சுத்தம் செய்ய பயன் படுத்தலாம். இவை தவிர வருடத்திற்கு ஒரு முறை பற்களை பல் டாக்டரின் ஆலோசனை படி சுத்தம் செய்வது அவசியம்.
*பற்களில் ஏற்படும் மற்றொரு பிரச்சனை வாய் துர்நாற்றம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பற்களில் கறை படிவதால் அல்லது பல் சொத்தை அல்லது வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை அதிகமாக உட்கொண்டது அல்லது தொண்டை, வயிறு அல்லது நுரையீரலில் பிரச்னை... இவற்றால் வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் எடுத்துக் கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு துர்நாற்றம் வீசாது.
*பற்கள் எடுப்பாக இருந்தால், அதை கிளிப் போட்டு சரியாக்கலாம். சில சமயம் தாடை எலும்புகள் தூக்கலாக இருக்கும். அவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். புளோரைட் பாதிப்பால் பற்களின் நிறம் பழுப்பாக இருக்கும். அவர்களின் முக அமைப்புக்கு ஏற்ப பற்களுக்கு மேல் செயற்கையான கேப் போட்டுக் கொள்ளலாம். சிலர் சிரிக்கும் போது பற்களின் ஈறுகள் கறுப்பாக தெரியும்.
*இது மெலனின் பிக்மெட் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் விளைவு. அதனை போக்க ஈறுகள் மேல் இருக்கும் கறுப்பு தோலை அகற்றி பிங்க் நிறமாக மாற்றலாம். ஆனால், ஈறின் நிறம் மாறும் என்பதால், எட்டு மாதத்திற்கு ஒரு முறை இதை மறுபடி செய்ய வேண்டும். சிலருக்கு சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். அதனை லிப் ரீபொசிஷனிங் முறையில் சரி செய்யலாம். அதே போல் பற்களுக்கு இடையே அதிக இடைவெளி இருந்தால், கிளிப் போடலாம் அல்லது இடைவெளி இருக்கும் இடத்தில் செயற்கை பற்களை பொருத்தலாம்’’ என்று சொல்லும் டாக்டர் தீபாலட்சுமி, பற்களை பாதுகாக்க டிப்ஸ் தருகிறார்.செய்யக் கூடியவை
*தினமும் காலையும் மாலையும் பல் துலக்க வேண்டும்.
*இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவுப் பொருட்களை ‘பிளாஸ்’ கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.க்ஷஒவ்வொரு
*முறை உணவு சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது அவசியம்.
*பால் சார்ந்த உணவுகளையும், சத்துள்ள உணவுகளையும் சாப்பிடுவது நல்லது.
*எல்லாவற்றையும் விட முக்கியம் பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக பல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
*கண் எரிச்சல், மூட்டு வலி, சரும பிரச்னை இருந்தால் அதற்கு பல் சொத்தையும் ஒரு காரணம் என்பதால் அதற்கான சிகிச்சையும் எடுத்துக் கொள்ளலாம்.
செய்யக் கூடாதவை
*கடினமான உணவுப் பொருட்களை முன்னால் உள்ள பற்களால் கடிக்கக் கூடாது. கடவாய் பற்களை பயன்படுத்தலாம். முன் பற்கள் அசைவ உணவை கிழித்து சாப்பிட மட்டுமே உதவும்.
*பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பல்லால் கடித்து கிழிப்பது, பூவின் நார் மற்றும் துணியில் உள்ள நூலை பற்கள் கொண்டு அறுக்கக் கூடாது.புகை, பாக்கு, வெற்றிலை போடக்கூடாது.
*குழந்தைகளுக்கு புட்டி பால் கொடுக்கும் போது, அவர்கள் சாப்பிட்ட பிறகு, உடனடியாக தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், பற்களில் பாக்டீரியா தங்கி கரை படியும் வாய்ப்பு உள்ளது
Re: பற்களின் கறையைத் தடுக்க இயற்கை வழிகள்!
Mon Jul 06, 2015 11:26 pm
ஆரோக்கிய அலசல்
*பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.
*பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
*தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.
*சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.
*சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி... இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.
*தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.
*முகப்பரு இருந்தால்.. உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.
நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.
*உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.
*மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.
*இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்
*உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum