இளநரையை தடுக்க வழி
Thu Mar 14, 2013 1:07 am
பரம்பரை வாகு, உணவுப் பழக்கம், தலைக்குக் குளிக்க உபயோகிக்கிற தண்ணீர் எனப்
பல காரணங்களால் இளநரை வரக்கூடும். நரையை மீண்டும் நிராந்தரமாகக்
கருப்பாக்க இதுவரை எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால்
முன்னெச்சரிக்கையுடன்
நடந்து கொண்டால் நரை மேலும் அதிகமாகாமல் தவிர்க்க முடியும்.
நரை வந்து விட்டால் அதை சரி செய்ய முடியாது என்கிறார்கள். அப்படியானால் அது அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
அழகுக்கு அடிப்படை உணவு. வெளிப்பூச்சில் நாம் உபயோகிக்கிற எப்படிப்பட்ட
அழகு சாதனமும் தராத நிரந்தரத் தீர்வை உணவு மட்டுமே கொடுக்கும். எனவே
தாமிரம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை
அதிகம்
சாப்பிட வேண்டியது முக்கியம்.
தினசரி உணவில் இரும்புச் சத்து அதிகமுள்ள ஐட்டங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். கறிவேப்பிலைக்கு நரையுடன்
போராடும் சக்தி உண்டு. அதைப் பொடியாகச் செய்தோ, சட்னியாக அரைத்தோ தினம் சாப்பிட வேண்டும். தலைக்குக் குளிக்க
நல்ல தண்ணீரையும், ஷாம்பூவையும் உபயோகிக்க வேண்டியதும் முக்கியம்.
நரையை மறைக்க டை (Dye) அடித்துக் கொள்வதுதான் வழியா? அதனால் கூந்தல் பாதிக்கப்படாதா?
நரை அதிகமானால் டை அடித்துக் கொள்ளலாம். இப்போது டை பல வகைகளில் கிடைக்கிறது. அம்மோனியா
கலக்காத டை கூட கிடைக்கிறது. இள நரை உள்ளவர்களுக்குக் கூட அதை பயமின்றி உபயோகிக்கலாம்.
கூந்தலை விருப்பமான நிறங்களில் கலரிங் செய்து கொள்வதும் இப்போது ஃபேஷன் நரையை மறைக்க அப்படியும் செய்து
கொள்ளலாம்.
அடுத்ததாக இயற்கையான டை உபயோகிப்பது அதாவது ரசாயனப் பொருட்களின் கலப்பின்றி, இயற்கைப் பொருட்களை மட்டுமே
கலந்து உபயோகிக்கிற டை. இது எந்த விதப் பக்க விளைவையும் தராது.
இயற்கையான முறையில் டை தயாரிக்கும் முறையை சொல்லித் தருவீர்களா?
ஒரு கப் மருதாணிப் பொடியுடன் அரை கப் நெல்லிக்காய் பொடி, கலந்து, டீ டிகார்ஷன் சேர்த்துக் குழைத்து முதல் நாள் இரவே
ஒரு இரும்பு வாணலியில் ஊற வைத்து விடவும். மறுநாள் காலையில் அந்தக் கலவையில் அரை கப் தயிரும், முட்டையும் கலந்து
தலையில் தடவி மூன்று மணி நேரம் ஊறியவுடன் நன்றாக அலசவும். இது நரைத்த கூந்தலை இயற்கையாக நிறமாற்றும்.
இன்னொரு முறையும் உண்டு. துருப்பிடித்த இரும்பு ஆணிகளை தண்ணீரில்
ஊறப்போட்டு, இரும்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். அது நிறம்
மாறியதும் அந்தத் தண்ணீரை வடிகட்டி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்
திரிபாலா பொடியுடன் கலந்து தலையில் தடவி, இரண்டு மணி நேரம் ஊறியம் கூந்தலை
அலசலாம்.
நன்றி: தமிழ் அருவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum