தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஒளவையாரின் அருமை மொழி  Counter

Go down
Admin
Admin
ஸ்தானாபதி
ஸ்தானாபதி
Posts : 804
Join date : 17/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
https://devan.forumta.net

ஒளவையாரின் அருமை மொழி  Empty ஒளவையாரின் அருமை மொழி

Mon Jul 01, 2013 9:39 am
ஒளவையாரின் அருமை மொழி  1009926_623906714294249_797292523_n

ஒளவையாரின் அருமை மொழி

மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.

* உறவு, நட்பு, மனைவி, குழந்தைகள், பெற்றோர், குரு, நாடு, உலகம் ஆகியவற்றில் அன்பு செலுத்துபவர்களாக வாழ வேண்டும்.
* உயர்ந்த எண்ணம், மேன்மையான செயல், சிறந்த குணம் நிறைந்திருப்பதே நல்ல நெறியாகும். தானும் உயர்ந்து பிறரையும் உயர்த்துவதால் வீடும், நாடும், உலகமும் உயரும்.
* பயனுள்ளவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். எங்கு நல்லது இருந்தாலும் அதைப் பாதுகாக்க வேண்டும்.
* பிறருடன் நட்பு கொள்ளும் போது, நம் தகுதிக்கு ஏற்றவர்களா என்பதை அறிந்து அதன்பின்பே நட்பு கொள்ள வேண்டும். 
* நூல்களையும், இலக்கியங்களையும் அவமரியாதை செய்யக்கூடாது. புகழாவிட்டாலும் இகழாதிருப்பதே உயர்ந்த பண்பு.
* உயர்ந்த உணர்வை ஊட்டுவதில் உணவுக்கு அதிக பங்கு இருக்கிறது. நல்ல உ<ணர்வுகளுக்கு உரியன அல்லாத உணவுகளை சாப்பிடக்கூடாது. 
* குற்றமானவற்றையும், பொறாமையான சொற்களையும் பேசக்கூடாது.. நல்ல சொற்களைத் தேர்ந்தெடுத்து பேச வேண்டும்.
* எந்த நேரமாக இருந்தாலும், நமது பணிகளை தயக்கமின்றி, தாமதமின்றி, சோம்பல் இன்றி சுறுசுறுப்பாக செய்து முடிக்க வேண்டும்.
* பணம் படைத்தவர்கள் தங்கள் செல்வத்தைப் பிறருக்காகப் பயன்படச் செய்வதே பெருமை அளிப்பதாகும். 
* கடுமையான பேச்சு வெறுப்பைத் தரும். பேச்சில் பணிவு இருக்க வேண்டும். இனிமையான பேச்சால் வாழ்க்கையில் எப்போதும் பயம் இல்லை.
* கற்க வேண்டிய காலம் இளமையே. படிப்பவை இளமையில் தான் மனதில் படியும். சாதிக்கும் ஆற்றலும் இளமைக்கே உண்டு.
* தர்மம் செய்வதால் கிடைக்கும் பலன் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும்.
* பயஉணர்வு மனிதனை கெடுத்துவிடும் என்பதால், அதனைக் கைவிட வேண்டும். பிறரைப் பயப்படுத்துவதையும் விட்டுவிட வேண்டும்.
* படிப்பறிவோடு, கேள்வி அறிவும் இணைந்தால் தான் பேரறிவு கிடைக்கும். தெரியாதவற்றை ஏன் எப்படி எதற்கு என பெரியோர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அனுபவத்தால் பெறும் அறிவை விட, பெரியவர்கள் தரும் ஆலோசனை அறிவே உயர்ந்தது.
* வாழ்க்கையில் எப்போதும் ஒழுங்கான செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். சிறப்பான நிகழ்வுகளை, கருத்துக்களை, நடத்தையை, ஒழுக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
* பேச்சில் இனிமை, கனிவு, மரியாதை, அன்பு, நேயம், ஆறுதல் இருக்க வேண்டும். அதனால் நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நன்மை ஏற்படும். 
* ஒரு செயலை உரிய காலத்திற்குள் நெஞ்சுறுதியுடனும், விருப்பத்துடனும் செய்துவிட்டால் போதும். வெற்றி தேவதை தேடி வருவாள்.
* ஊராருடன் ஒத்துப் போவது பல வகைகளில் நல்லது. வீண் வாக்குவாதம், பொறாமை, வழக்கு, கெட்ட பெயர், பகைவர், வறுமை ஏற்படாமல் இருக்க இதுவே சிறந்த வழி.
* அன்பான தன்மை வேண்டும். இனிய சொற்கள் ஏற்றம் தரும். அன்பு கலந்த சொற்களால் கேள்வி கேட்க வேண்டும். பிறர் நம்மைத் தவறாக பேசும் அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது.
* வாழ்க்கையில் முன்னேறிவிட்டோம் என்றாலும், முந்தைய நிலை தான் முன்னேற்றத்தின் படிக்கல்லாக விளங்கியது என்பதை மறக்கக் கூடாது.


நன்றி: தமிழால்...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum