சிரிப்பின் அருமை
Wed Mar 13, 2013 11:47 am
விழாவில் தென்கச்சி கோ. சுவாமிநாதன் கலந்து கொண்டு நகைச்சுவை உணர்வு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். விழாவில் அவர் பேசியதாவது-
நகைசுவை
உணர்வு மனிதர்களுக்கு தான் உள்ளது. மிருகங்களுக்கு கிடையாது. இதனால்
வருத்தம் அடைந்த விலங்குகள் ஒன்று சேர்ந்து அனைந்து மிருகங்களும் ஒன்று
சேர்ந்து நமக்கும் நகைசுவை உணர்வு வரவேண்டும். அதற்கான அனைத்து
மிருகங்களும் ஒரு நகை சுவை கூறவேண்டும். அதை கேட்டு அனைத்து மிருகங்களும்
சிரிக்கவேண்டும் என போட்டி வைத்தது. சிங்கம் அதற்கு தலைமை தங்கியது.
மிருகம்
சொல்லும் நகை சுவையை கேட்ட உடன் அனைத்து விலங்குகளும் சிரிக்க வேண்டும்
அப்படி சிரிக்காவிட்டால் நகைசுவை கூறம், மிருகத்துக்கு ஒரு அடி கொடுப்பது
என்பது பேட்டி ஆகும். குரங்கு முதலில் வந்து கூறியது. அதை கேட்டதும்
அனைத்து விலங்குகளும் சிரித்தது. ஆமை மட்டும் சிரிக்கவில்லை. குரங்கிற்கு
ஒரு அடி விழுந்தது. பின்னர் ஒட்டகம் வந்து நகைசுவை கூறியது. அப்போதும் ஆமை
சிரிக்கவில்லை. இதனால் ஒட்டகத்துக்கு அடி விழுந்தது. 3-வது கரடி வந்தது.
கரடி வந்து நின்றதும் ஆமை சிரித்தது. கரடி ஏதும் கூறவில்லை, அதற்குள் ஏன்
ஆமை சிரிக்கிறது என்று நினைத்த, சிங்கம் ஆமையை அழைத்து கரடி இன்னும் நகை
சுவை கூறவில்லை, அதற்குள் ஏன் சிரித்தாய் என கேட்டது.
அப்போது ஆமை, குரங்கு முதலில் பேசியது அல்லவா, அதை நினைத்து சிரிந்தேன் என்றது. அதுபோல் நாமும் மிக லேட்டாக சிரிக்ககூடாது.
இருதய நோய்
அதிகமாக
சிரிக்கிறவர்களுக்கு இருதய நோய் வராது என்பது விஞ்ஞானிகளின் முடிவு. நாம்
குழந்தையாக இருக்கும் போது, ஒரு நாளைக்கு 200 தடவை சிரிக்கிறோம். வளர்த்த
பின்பு 15 தடவை தான் சிரிக்கிறோம். இதனால் தான் இருதய நோய் வருகிறது.
பெரியவர்கள் ஆன பின்பு சிரிக்காமல் இருக்க காரணம் என்ன? நாம் நம்மைவிட
பெரியவர்களை பார்த்தால், ஒரு மரியாதை, அதிகாரிகளை பார்த்தால் ஒரு மரியாதை
என நினைப்பதால் இருப்பதால் சிரிக்க மறந்து விடுகிறோம்.
இடுப்பு எலும்பு
இடுப்பு
எலும்பை தொட்டதும் நமக்கு சிரிப்பு வருகிறது. இது இயற்கையின் ரகசியம்.
தன்னை தான் இடுப்பை தொட்டால் சிரிப்பு வருவது கிடையாது. நாட்டில் 2
பேருக்கு இருதய நோய் வருவது கிடையாது. ஒருவர் நரிகுறவர்கள். அவர்கள்
வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள். அதற்கு உதாரணம் செல்ல வேண்டும்.
நரிக்குறவர்கள்
நரிக்குறவர்கள் பறவை சுடுகின்றனர்.
அப்போது பறவையை சுடப்பட்டு விழுந்தாலும் சிரிக்கிறார்கள். அது தப்பி பறந்து
ஒடிவிட்டாலும் சிரிக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் வாழ்க்கையை எளிதாக
எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இருதய நோய் வருவது கிடையாது.
பைத்தியகாரன்
மற்றொருவர்
பைத்தியகாரன். பைத்தியகாரனுக்கும் இருதய நோய் வருவது கிடையாது. நாம்
பிரதமராக ஆகவேண்டும் என்றால், அதை பற்றி யோசிப்போம். அரசியல் கட்சியில்
சேர்ந்து வர முயற்சி செய்வோம். ஆனால் பைத்தியகாரன் நினைத்த உடன் நான்தான்
பிரதமர் என கூறுவான். அவர் எதுகுறித்து யோசிப்பது கிடையாது. நினைத்ததை உடனே
அடைந்து விடுகிறான். இதனால் அவனுக்கும் இருதய நோய் வருவருகிடையாது.
வாழ்க்கை
வாழ்வதற்கும், மூச்சு விடுவதற்கும் அல்லாமல், நாம் அதை கொண்டாட வேண்டும்.
ஒரு முறை நண்பர் வந்து, நீங்கள் கூறும் இன்று ஒரு நாள் நிகழ்ச்சி தத்துவம்
அல்ல அது மகா தத்துவம் என பாராட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.
மற்றொருவர் வந்தார். அவரிடம் தத்து வத்துக்கும், மகா தத்துவத்துக்கும் உள்ள
வேறுபாடு என்ன என்று கேட்டேன்.
மகா தத்துவம்
அவர் நீங்கள்
கூறுவது புரிந்தால், அது தத்துவம், புரியாவிட்டால் அது மகா தத்துவம்
என்றார். அந்த மாதிரி வாழ்க்கையை வாழ்வதற்கு அல்லாமல், கொண்டாடுவதற்கு
கற்றுக்கொள்ளவேண்டும்.
கலைவாணர்
ஒரு முறை உடல் நிலை
சரியில்லை என டாக்டரிடம் போனார். அவரை பரிசோதனை செய்ய டாக்டர் உனக்கு எந்த
நோயும் கிடையாது என்றார். ஆனால் வந்தவர் வெளியில் ஒன்றும் தெரியவில்லை.
உள்ளுக்குள் ஏதோ செய்கிறது என்றார். டாக்டர், அப்படி என்றால் நீ சிரிக்க
கற்றுக் கொள்ள என்றார்.
வந்த நபர் சிரிக்க வேண்டும் என்றால் என்ன
செய்யவேண்டும் என்றார். டாக்டர், ஏதாவது கலைவாணர் படம் பார். அப்போது
உனக்கு சிரிப்பு வரும் என்றார். சென்ற நபர் மறுநாளும் டாக்டரிடம் வந்தார்.
டாக்டர் கலைவாணர் படம் பார்த்தீர்களா? உங்களுக்கு சிரிப்பு வந்ததா என்றார்.
வந்த நபர் எனக்கு சிரிப்பு வரவில்லை என்றார். டாக்டருக்கு கோபம் வந்தது.
கலைவாணர் படம் பார்த்துகூட உனக்கு சிரிப்பு வரவில்லை என்றால் நீ என்ன
மனிதர்? யார் நீ என்றார். வந்த நபரோ நான் தான் அந்த கலைவாணர் என்றார். இந்த
தகவலை பேராசிரியர் கல்வி ஒரு நிகழ்ச்சியில் கூறிப்பிட்டார்.
வயதானவர்களும்
வயதானவர்களும் சிரிக்கவேண்டும். வயதானவர்களை குழந்தைகளாக ஆக்க முடியாது. ஆனால் அவர்களிடம் குழந்தை தன்மையை கொண்டு வர முடியும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum