மீட்பரான கிறிஸ்துவின் சிலை - ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
Wed Apr 24, 2013 7:08 pm
Rio de Janeiro, Brazil !!
மீட்பரான கிறிஸ்துவின் சிலை - ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
(புதிய உலக அதிசயம்)
மீட்பர் கிறிஸ்து (போர்த்துக்கேய மொழியில்: Cristo Redentor) என்பது,
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜனேரோ நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின்
சிலையாகும். இது தேக்கோ கலையின் (Art Deco) மிகப்பெரும்
எடுத்துக்காட்டாகும். மேலும் இச்சிலை உலகிலேயே 4-வது மிகப்பெரிய இயேசுவின்
சிலையாகும். இது 9.5 மீட்டர் (31 அடி) உயரமுள்ள அடிப்பீடத்தோடு சேர்த்து,
39.6 மீட்டர் (130 அடி) உயரமும், 30 மீட்டர் (98 அடி) அகலமும் உடையது. இதன்
மொத்த எடை 635 டன்கள் ஆகும். இது திசுகா காடுகளில் உள்ள 700-மீட்டர் (2
அடி) உயரமுள்ள கொர்கொவாடோ (Corcovado) மலையின் மீது நகரினை நோக்கியவாறு
அமைந்துள்ளது. கிறித்தவ சின்னமான இது, ரியோ நகரம் மற்றும் பிரேசில்
நாட்டுக்கே சின்னமாக கருதப்படுகின்றது.[1] இது வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று
மற்றும் உருமாறிய பாறையின் வகையினைச் சேர்ந்த சோப்புக்கல்லாலும்
(soapstone) 1922-இல் இருந்து 1931-குள் கட்டட்ப்பட்டதாகும்
நன்றி: என் இனிய ...
Permissions in this forum:
You cannot reply to topics in this forum