சவூதியில் பணியாற்றும் தமிழ் மக்கள் கவனத்திற்கு...
Fri Apr 19, 2013 9:45 pm
ஜூன் 9ம் தேதிக்குள் சவூதியில் சட்ட விரோதமாக பணிபுரிபவர்கள் மற்றும்
முறையாக ஸ்பான்சர் மாற்றாமல் பணிபுரிபவர்கள் சவூதியை விட்டு வெளியேற
வேண்டும் என அந் நாட்டு அரசாங்கம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
சவூதியில் இயற்றப்பட்டுள்ள ‘நிதாகத்' எனும் புதிய சட்டத்தின் படி,
சவூதியில் சட்ட விரோதமாக அல்லது சிகப்பு கேட்டகிரி மற்றும் தனி விசா
உள்ளிட்டவற்றில் உள்ளவர்கள் சவூதியை விட்டு வெளியேற சவூதி அரசு மூன்று மாத
கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்படும் இந்தியர்கள் தாயகம் செல்ல சவூதி இந்தியத் தூதரகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
அதன்படி, தனி ஸ்பான்ஸரின் (கஃபில்) விபரம் தெரியாமை, ஸ்பான்சர் சிகப்பு
கேட்டக்கிரியில் இருப்பதால் தாயகம் செல்ல முடியாத பிரச்சனையில் உள்ளவர்கள்,
பாஸ்போர்ட், இக்காமா, காலாவதி ஆனவர்கள் மற்றும் ஹூரூப்
கொடுக்கப்பட்டவர்கள், மேலும் விசா விபரம் தெரியாமல் பணியாற்றிவிட்டு தாயகம்
செல்ல முடியாமல் தவிப்பவர்கள், இவர்கள் அனைவரையும் கவனத்தில் கொண்டு உரிய
சட்ட உதவிகள் செய்திட இந்தியத் தூதரகம் முன் வந்துள்ளது.
சவூதி
அரசு கொடுத்துள்ள 3 மாத காலத்திற்குள் சவூதி அரசுடன் பேசி பாதுகாப்பாக
தாயகம் அனுப்ப வேண்டிய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ள இவ்வேளையில்,
மேற்கண்ட வகைகளில் சட்ட விரோதமாக சவூதியில் வாழும் இந்தியர்கள் தங்களது
தகவல்களை உடனே இந்தியத் தூதரகத்திற்கு நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ
தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒரிஜினல் பாஸ்போர்ட்
வைத்துள்ளவர்களுக்கு EC தேவையில்லை. அந்த பாஸ்போர்ட்டிலேயே Exit அடித்து
அனுப்பி வைத்துவிடுவர். மேலே குறிப்பிட்டுள்ள வகையில்
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உடனடியாக ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை
அணுகவும்.
அல்லது First Secretary (Community Welfare), Telephone 4884032 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
அல்லது Indian Embassy, Riyadh, [B-1, Diplomatic Quarters, PB No. 94387,
Riyadh - 11693], Saudi Arabia முகவரியில் உள்ள இந்தியத் தூதரகத்தை
உடனடியாக நாடவும்.
இந்த விஷயத்தில் உதவியாக இருக்கும் மின் அஞ்சல் முகவரிகள்:
sscw@indianembassy.org.sa
hoc.riyadh@mea.gov.in
pol.riyadh@mea.gov.in
மேலும் இக்காமா, விசா, ஹுரூப் போன்ற பிரச்சனைகளில் சவூதி சட்டத்திற்கு
புறம்பான வகையில் சவூதியில் தங்கி உள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை அவரவர்
நாட்டிற்கு அனுப்பும் (டிக்கட் போன்ற) செலவினங்களை சவூதி உள்துறை அமைச்சகம்
(ஜவ்ஸாத் - General Directorate of Passports) ஏற்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி- ஆதிரை பாரூக்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum